சிந்திப்பவர்களுக்கு சில சான்றுகள்
ஜூன் 19,2010,
09:06  IST
எழுத்தின் அளவு:

* உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பதும் பின்னர் நீங்கள்(பூமியில்) பரவிச் செல்லும் மனிதர்களாக இருக்கின்றீர்கள் என்பதும் இறைவனின் சான்றுகளில் ஒன்றாகும்.

* மேலும், அவனுடைய சான்றுகளில் இதுவும் ஒன்றாகும். அவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்தே மனைவியரைப் படைத்தான். நீங்கள் அவர்களிடம் அமைதி பெற வேண்டும் என்பதற்காக! மேலும், உங்களிடையே அன்பையும், கருணையையும் தோற்றுவித்தான். திண்ணமாக, சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறையச் சான்றுகள் உள்ளன.

* வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்கள் மொழிகளும், உங்கள் நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையே! திண்ணமாக, இவற்றிலெல்லாம் அறிவுடையோருக்கு நிறையச் சான்றுகள் உள்ளன.
* இரவிலோ, பகலிலோ நீங்கள் உறங்குவதும், அவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடுவதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையே! திண்ணமாக (உன்னிப்பாக) செவிமடுக்கும் மக்களுக்கு இவற்றில் நிறையச் சான்றுகள் உள்ளன.
(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)


Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement