அன்பிருந்தால் அச்சமில்லை
ஜூன் 27,2010,
07:06  IST
எழுத்தின் அளவு:

* அன்பு யாவருக்கும் நன்மை செய்யும். பொறாமை கொள்ளாது. தற்புகழ்ச்சி செய்யாது. இறுமாப்பு அடையாது.அன்புள்ளவருக்கு அச்சத்திற்கு இடமேயில்லை. ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவாராக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது.
* இளைஞர்களே! இளமையின் நாட்களில் உள்ளக் களிப்புடன் இருங்கள். மனக்கவலையை ஒழியுங்கள்.
உடலுக்கு ஊறுவராதபடி காத்துக் கொள்ளுங்கள்.
* ஞானமுள்ள மகன் தந்தையின் நற்பயிற்சியை ஏற்றுக் கொள்வான். இறுமாப்புள்ளவனோ கண்டிக்கப்படுதலைப் பொருட்படுத்த மாட்டான். தந்தையையும், தாயையும் கொடுமைப்படுத்தும் மகன் வெட்கக்கேட்டையும்,
இழிவையும் வருவித்துக் கொள்வான்.
* கடவுளே உங்களுள் செயலாற்றுகிறார். அவரே, தமது திருவுள்ளப்படி நீங்கள் செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்.
* நீங்கள் நன்மை செய்வதில் ஞானம் உடையவர்களாயும், தீமை என்றாலே என்ன என்றே தெரியாத கபடமற்றவர்களாயும் இருக்கவேண்டும்.
* எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறு பெற்றோர். துன்பநாளில்  ஆண்டவர் அவரை விடுவிப்பார்.
பைபிள் பொன்மொழிகள்

Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement