கடவுளுக்கு அர்ப்பணித்த உணவு
ஜூலை 03,2010,
18:07  IST
எழுத்தின் அளவு:

* எறும்பு ஓரிடத்தில் சர்க்கரை இருப்பதை உணர்ந்தால், சுயநலமாக தான் மட்டும் உண்ண விரும்புவதில்லை. மேலும் பல எறும்புகளை சேர்த்துக் கொண்டு சாப்பிடும். மிகச்சிறிய உயிரான எறும்பிடமிருந்து, இந்த தாராள மனப்பான்மையைக் கற்றுக் கொள்வோம்.
* வேண்டிய அனைத்தையும் தர கடவுள் இருக்கிறார். மனிதப்பிறவியைப் பெற்ற உங்களின் முக்கிய நோக்கம் அவரை அறிவதாக மட்டுமே இருக்க வேண்டும்.
* மற்றவர் உங்களை நோக்கி எழுப்பும் அவதூறு மொழிகளை உங்களுடையதாக எண்ணாமல், வெறும்
சாட்சியாக மட்டும் காதில் வாங்குங்கள். அதனால் நீங்கள் எவ்வித பாதிப்புக்கும் ஆளாகமாட்டீர்கள்.
* உண்ணும் இடமும், உணவும் தூய்மையானதாக இருத்தல் அவசியம். கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உணவை உண்பவனின் மனதில் தெய்வீக எண்ணங்கள் உண்டாகும்.
* நீரின் ஓட்டம் மெதுவாக இருந்தால் சேறு அகலுவதில்லை. சேற்றினை வேகமாக அடித்துச் செல்லும் அளவுக்கு வேகம் இருந்தால் மட்டுமே இடம் தூய்மையாகும். அதுபோல ஆன்மிக சாதனையில் ஈடுபடுபவர்கள் முழுமூச்சாக இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
-சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement