யோசித்து செயல்படுங்கள்
ஏப்ரல் 20,2016

* மனதில் எழும் ஆசை நியாயமானதா என்று யோசித்து செயல்படுங்கள்.* பொருள் இல்லாதவனை ஏழை என்று உலகம் எண்ணுகிறது. உண்மையில் ஆசை அதிகம் உள்ளவனே ஏழை.* துன்பத்திற்குக் காரணமான தீய ஆசை ஒழிந்தால், வாழ்வு பலாச்சுளையாக இனிக்கும்.* ஆடு, ...

 • பணிவுடன் கடமையாற்றுங்கள்

  ஏப்ரல் 11,2016

  * உயர் பதவியில் இருப்போர் கடைநிலை ஊழியர் போல பணிவுடன் இருந்தால் புகழ்நிலையில் முன்னணி வகிக்கலாம்.* புலன்களுக்கு அடிமையாகக் கூடாது. அறிவால் ஆட்டுவிப்பவர்களாக மாற வேண்டும்.* பொறாமை, சினம், தற்பெருமை போன்ற தீய குணங்களால் மனிதன் அமைதியின்றி தவிக்கிறான்.* மூச்சுக்காற்று உயிரையும், உடலையும் இணைப்பது ...

  மேலும்

 • தியாகம் செய்யுங்கள்

  ஏப்ரல் 01,2016

  * தியாகம் உண்டானால் தன்னலம் என்னும் வியாதி மறைந்து விடும்.* பொருளை இழப்பது மட்டும் தியாகம் அல்ல. ஆசைகளை அழிப்பதே தியாகம்.* இன்பமும் துன்பமும் ஒவ்வொரு செயலிலும் இணைந்தே இருக்கிறது. ஆனால் அதன் விகிதாச்சாரம் மட்டும் மாறுபடும்.* துன்பத்தைக் கண்டு சோர்வடைய வேண்டாம். நெருப்பில் இட்ட தங்கமே அணிகலனாக ...

  மேலும்

 • அனுபவ பாடத்தை மறக்காதீர்

  மார்ச் 25,2016

  * வாழ்வில் குறுக்கிடும் சிரமத்தை கண்டு கலங்குவதால் பயனில்லை. அது தரும் பாடங்களை மறப்பது கூடாது.* ஆசை என்னும் உமி உயிரை மூடியிருக்கிறது. உமியை நீக்கி விட்டால் அரிசி மீண்டும் முளைப்பதில்லை.* உலகில் தோன்றிய எந்தப் பொருளும் அழிவதில்லை. அது வேறொன்றாக மாறிக் கொண்டேயிருக்கிறது.* ஆன்மிக சிந்தனை ...

  மேலும்

 • ஆழமாக நேசிக்கிறீர்களா?

  மார்ச் 20,2016

  * கடவுளிடம் அன்பு செலுத்துவது உண்மை என்றால், நீங்கள் எல்லா உயிர்களையும் ஆழமாக நேசிக்கிறீர்கள் என்று பொருள்.* கன்று வளரும் போதே அதன் கொம்பும் வளர்வது போல செல்வம் வளரும் போதே செருக்கும் வளர்ந்து விடுகிறது.* காரணம் இன்றி கடவுள் எதையும் படைக்கவில்லை. உலகிலுள்ள ஒவ்வொன்றிற்கும் ஏதோ ஒரு அர்த்தம் ...

  மேலும்

 • பெயரை காப்பாற்றுவோம்

  மார்ச் 11,2016

  * எடுத்துச் சொல்வதை விட எடுத்து காட்டாக இருப்பது சிறப்பு. ராமன் என்று பெயர் இருப்பதை விட ராமனாக வாழ்வது சிறந்தது.* சத்தியம் என்னும் அடித்தளத்தின் மீதே தர்மம் என்னும் கட்டடம் இருக்கிறது. அதாவது சத்தியமே தர்மத்தைத் தாங்குகிறது.* உடலை புனிதமாக்க விரும்பினால் பிறருக்குச் சேவையாற்றுங்கள். சேவை ...

  மேலும்

 • இதுவும் அன்னதானமே!

  மார்ச் 04,2016

  * உணவை வீணாக்காமல் இருப்பதும் கூட அன்னதானம் செய்த புண்ணியத்தை ஒருவனுக்கு கொடுக்கும்.* உண்பதற்காக உயிர் வாழாதீர்கள். உயிர் வாழ மட்டுமே உண்ணுங்கள்.* உடல் என்னும் இயந்திரம் இயங்க, அளவுடன் உண்ண வேண்டும். * நாவின் ருசிக்காக அலைய வேண்டாம். விரைவில் செரிக்கும் எளிய உணவுகளையே உண்ணுங்கள்.* உழைத்து ...

  மேலும்

 • உதவிக்கரம் நீட்டு

  மார்ச் 02,2016

  * துன்ப இருளில் சிக்கித் தவிக்கும் உயிர்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள். உங்களின் இதயத்தில் அருள் ஒளி பரவத் தொடங்கும்.* ஒவ்வொரு அணுவிலும் கடவுள் நிறைந்திருக்கிறார். அவரை மறந்தால் நம்மால் உயிர் வாழவே முடியாது.* இனிமையற்ற உண்மை, இனிமையான பொய் இரண்டுமே வாழ்வில் விலக்கப்பட வேண்டியவை.* உண்மையை விட ...

  மேலும்

 • ஒழுக்கம் உயிர் போன்றது

  பிப்ரவரி 21,2016

  * இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம். ஆனால், ஒழுக்கத்தை இழந்தால் அது உயிரை இழப்பதற்குச் சமமாகி விடும். * செய்த செயலின் பலன் பன்மடங்காகப் பெருகி நம்மிடமே திரும்பும். அதனால் நற்செயலில் மட்டும் ஈடுபட வேண்டும்.* சந்தனக் கட்டை தன்னையே அழித்துக் கொண்டு பிறருக்கு மணம் தருகிறது. அதுபோல மனிதன் ...

  மேலும்

 • விரதத்தை விட மேலானது

  பிப்ரவரி 12,2016

  * உண்ணாமல் விரதம் இருப்பதை விட, பசித்தவனுக்கு ஒருவேளை உணவு அளிப்பது மேலானது.* ஆயிரம் அறிவுரைகள் சொல்வதைக் காட்டிலும் ஒரு அரிய செயலைச் செய்வது சிறப்பானது.* செருக்கு இல்லாத செல்வந்தன் குற்றம் இல்லாத நிலவு போல பிரகாசத்துடன் வாழ்வான்.* புத்திசாலித்தனமும், தன்மானமும் ஒன்றை ஒன்று எதிர்த்துக் கொண்டே ...

  மேலும்

11 - 20 of 49 Pages
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement