* சோதனைகள் என்பவை அவன் அருளுக்கே அடையாளம். அவன் கோபத்துக்கு அல்ல. அவன் இனிமையே வடிவானவன். இனிப்பு எப்படி கசக்க முடியும்? *கரும்பு வெட்டப்பட்டு, பிழியப்பட்டு, கொதிக்க வைக்கப்பட்டு, வடிகட்டப்படுவதை வரவேற்க வேண்டும். ஏனெனில் இச்சோதனைகள் இல்லை எனில் அக்கரும்பு காய்ந்து விடும். ஒருநாளும் [...]
கணத்துக்கு கணம் மாறிக் கொண்டே இருக்கும் இந்த பிரபஞ்சத்தில் மாறாமல் இருக்கும் சக்தி ஒன்று உள்ளது. இந்த ஆதாரமான தெய்வசக்தியை உணர்ந்தால் தான் ஆனந்தம் பெற இயலும். எந்தப் பாதையில் சென்றாலும் இந்தத் தெய்வீக அடிப்படையை மறக்காமல் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் இந்நாளைய மனிதர்கள் தனம், [...]
நீங்கள் யாவரும், எப்போதும் பரஸ்பர அன்புடன் ஒருவருக்கொருவர் கருணையுடனும் இரக்கத்துடனும் உதவி செய்து கொண்டு நல்லறத்துடன் கூடிய இல்லற வாழ்க்கை நடத்தி வருபவர்களாகவும் நல்லறிவை வளர்ப்பவர்களாகவும் கஷ்டப்படுவோர்களுக்கு தாமதமின்றி சகாயம் செய்து, உத்தம மனிதர்களாக வாழ வேண்டுமென்பதே சாதுக்களான [...]
எவருடைய இதயம் கருணையால் நிரம்பியிருக்கிறதோ, எவருடைய சொல் உண்மையை பூஜிக்கிறதோ, யாருடைய உடல் மற்றவருக்குச் சேவை செய்கிறதோ, அவருக்கு இவ்வுலகில் எந்த தீய ஆற்றலும் தீமை செய்ய இயலாது. கலி கூட அவரை ஒன்றும் செய்யாது. அத்தகைய தீய ஆற்றலின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு இருக்க வேண்டுமானால் மனிதன் மனம், [...]
கடமைகளைச் செய்யாமல் வீணே காலம் கழிக்கும்போது, நேரம் உன் கரங்களில் கனக்கிறது. உனக்கென கொடுக்கப்பட்ட வாழ்நாட்களில் ஒரு வினாடியைக்கூட வீணாக்கக்கூடாது. இறைவன் காலஸ்வரூபன், நேரம் இறைவனின் உடல். தாய் குழந்தைக்குப் பாலூட்டுவது அவள் கடமை. ஆனால், கடமை என்று நினைத்து அவள் அதைச் செய்வதில்லை. அன்பு [...]
* கடவுளை உணர கஷ்டங்களையும், துன்பங்களையும் முழு மனதோடு வரவேற்க வேண்டும். இறைவனின் நாமத்திலும் ரூபத்திலும் தொடர்ந்து நம்பிக்கையோடு லயிக்க வேண்டும். தரக்குறைவான வழிகளினால் கிடைக்கும் அற்ப சந்தோஷங்களை அறவே விட்டொழியுங்கள். கடவுளை உங்கள் வழிகாட்டும் ஒளியாகக் கொள்ளுங்கள். அப்படியென்றால் [...]
* யாரேனும் ஒருவர் உண்மையாகவே கடவுளை எங்கே காணலாம் என்று கேட்டால், விடை சொல்வதை தவிர்க்காதே. உன் இதயத்திலிருந்து எழுந்து நாவிற்கு வரும் விடையைச் சொல்லி விடு. புட்டபர்த்திக்கு அனுப்பு. உன் ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ள அழைப்பு விடு. * புட்டபர்த்திக்கோ, வேறு புனிதத்தலங்களுக்கோ வரும்போது உங்கள் [...]
பலாப்பழம் இருக்க, பலாக்காயை ருசிப்போமா? இனிமையான சொற்கள் இருக்க கடுமையான சொற்களைப் பிரயோகிக்கலாமா? அடுத்தவரை மகிழ்விப்பது அறம். அதற்காக நாம் பணம் தேடி ஓடவேண்டாம். நல்ல சொற்களே போதுமானது. கண்டவற்றுள், கேட்டவற்றுள் பாதியையே பகர வேண்டும் என்பதற்காகவே கண் இரண்டும், வாய் ஒன்றுமாக [...]
* நமது தீய எண்ணங்கள், தீய குணங்கள் இவற்றை வெளிவிடுதலே ரேசகம் (வெளிமூச்சு) ஆகும். நல்ல புனிதமான, தெய்வீக உணர்வுகளை உள் நிரப்பிக் கொள்ளுதலே (பூரகம்) ஆகும். அத்தகைய நல்லுணர்வுகளை மனதில் இருத்தி வைத்துக் கொள்ளுதலே கும்பகம் ஆகும். இதுவே ரேசகம், பூரகம், கும்பகம் ஆகியவற்றின் உட்பொருள் ஆகும். * இந்த [...]
தூய சிந்தனையாக, மிக உயர்ந்த மனசாட்சியாக உன் இதயத்தில் இருப்பதே இறைவன்தான். அது கடவுள் தான். வேறெங்கும் தேட வேண்டிய அவசியமில்லை. மனம் உள் முகப்படுத்தப்படும்போது, ஆத்மாவையே காண்கிறது. வெளிச்சூழ்நிலைகளைக் காண்பது இல்லை. அதில் வெப்பம், தட்பம், துன்பங்கட்கு இடையிலான வேறுபாட்டைக் [...]