Advertisement
    * மவுனம் உன்னதமானது. அறவே பேச்சை நிறுத்தி விட்டு எண்ண ஓட்டத்தை உள்ளே திருப்புங்கள் * அமைதியை வெளியே தேடாதீர்கள். அது நமக்குள்ளே தான் இருக்கிறது. * நல்ல விஷயங்கள் விலை மதிப்பில்லாதது. அதனால், அதைப் பின்பற்றுபவர்களும் எண்ணிக்கையில் மிகக் குறைவாகத்தான் இருப்பார்கள்.* எளிய உணவைச் சாப்பிடுங்கள். [...]
    * உடல்நலமும், மனவலிமையும் கிடைக்க பெற்றவர்கள் ஏழைகளுக்கு சேவை செய்வதைத் தங்கள் கடமையாகக் கொள்ள வேண்டும்.* காலமே மிகவும் விலை உயர்ந்த பொருள். ஒரு விநாடியைக் கூட வீணடிக்காதீர். அது நம் வாழ்க்கையைப் பாதித்துவிடும்.* ஆன்மிகப்பணி, போதனை, பிரார்த்தனை இவற்றுக்கும் அப்பால் உழைப்பால் புதியதோர் [...]
    * கிடைப்பதற்கு அரிய மனிதப்பிறவி எடுத்திருக்கிறோம். அதனால், நம் வாழ்வின் நோக்கம் கடவுளை அறிவதாக இருக்கட்டும். * நல்ல சிந்தனைகளை கேட்டால் மட்டும் போதாது. அதை அன்றன்றே நடைமுறை படுத்த வேண்டும்.* வாழ்வில் கஷ்ட நஷ்டங்களைத் தவிர்க்க முடியாது. அவற்றை மறந்து விடாமுயற்சியோடு உழைத்தால் பலன் நிச்சயம் [...]
    * தோட்டத்தில் மண்டிக் கிடக்கும் செடி, கொடிகளை வெட்டி சீர்படுத்தி அழகுபடுத்துவது போல, மனதையும் தியானப் பயிற்சியால் சீர்படுத்த வேண்டும். * கோபம் பல தீய விஷயங்களை மனதில் தூண்டிவிடும். பல ஆண்டுகளாக கிடைத்த ஆற்றலை கணநேரத்தில் இழக்கச்செய்து விடும். * மன பலவீனமே கோபமாக வெளிப்படுகிறது. அமைதி, பொறுமை, [...]
    * நம்மைச் சுற்றியுள்ளதை கண்களால் பார்க்கிறோம். உலகைப் பார்க்க மட்டுமல்ல. வல்லமை மிக்க இறைவனைக் காண்பதற்காகவே கண்கள் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளன.* வேகமாகப் போவது மட்டும் முக்கியம் அல்ல. சரியான பாதையில் மனிதன் செல்ல வேண்டும். அப்போது தான் போய்ச் சேர வேண்டிய இடத்துக்குப் போக முடியும். * [...]
    * அன்பை அதிகமாக வெளிப்படுத்துங்கள். குறைவாகப் பேசுங்கள். உண்மையான சேவையில் ஈடுபடுங்கள். இவை தான் தியானத்தின் அடையாளங்கள்.* முதலில் கடவுள், அடுத்தது உலகம், கடைசியாக "நான்' என்ற அடிப்படையில் மனிதன் வாழ வேண்டும் . ஆனால், இன்றோ முதலில் நான், அடுத்து உலகம், கடைசியாக கடவுள் என்ற வரிசையில் மனிதன் [...]
    * இதயத்தைக் கவனி. அது சொல்லும் சொல், செயல், சிந்தனை, நடத்தை ஆகியவற்றையும் கவனி.* ஆசிரியர் சொல்வதைப் பின்பற்று. தீமையை எதிர்கொள். இறுதி வரை போராடு. வாழ்க்கை விளையாட்டை ரசித்து முடி. * வாழ்க்கை என்பது நேசித்தல், கவனித்தல், வளர்ச்சி பெறுதல், கற்றுக்கொள்ளுதல் இவையனைத்தும் சேர்ந்ததாகும்.* நீங்கள் [...]
    * உலகில் "அன்பு செய்யும் ஒரே இனம் மனித இனம் மட்டுமே. இங்கு ஒரே ஒரு மதம் மட்டுமே இருக்கிறது. அது தான் அன்பு மதம்.* உலகில் "இதயத்தின் மொழி' என்ற ஒரே ஒரு மொழி மட்டுமே இருக்கிறது.* அறிவு எதையும் பிரித்துப் பார்க்கும். ஆனால் அன்பு சேர்த்து வைக்கும்.* ஒவ்வொரு அனுபவமும் ஏதாவது ஒரு உணர்வின் வழியாக, [...]
    * கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்காக ஏங்குவதை விட கண்ணெதிரே வாழும் தெய்வீகமான தாயை வணங்குங்கள். தாயின் அன்பு கிடைத்தால், இறையருள் பூரணமாகக் கிடைக்கும்* உண்மையான பக்தியும், அசைக்க முடியாத நம்பிக்கையும் இருந்தால் கடவுளை விரைவில் காணும் பாக்கியம் கிடைக்கும்.* வாழ்வில் எத்தகைய பிரச்னை [...]
    * கடவுள் எல்லையற்ற கருணைக்கடலாக இருக்கிறார். எல்லா உயிர்களிலும், பொருட்களிலும் அவர் நிலைபெற்று இருக்கிறார். அவரை அறிந்து கொள்ள எளிய வழி பக்தி ஒன்றே.* பொறியில் சிக்கும் எலி போல, மனிதன் உலகம் என்னும் பொறியில் ஆசை வயப்பட்டு அழிந்து போகிறான். * மனிதனைத் தாக்கும் ஆயுதம் நாக்கு. நாக்கினால் உண்டான [...]
21 - 30 of 28 Pages
Advertisement
Advertisement