* எல்லா வேதங்களையும் கரைத்துக் குடித்திருக்கலாம். புத்திசாலித்தனம் நிறைந்துஇருக்கலாம். ஆனால், மனத்தூய்மை இல்லாவிட்டால் சிறிதும் பயனில்லை. * ஆணவம் நம் கண்களை மறைத்துவிடும். தன்னைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்விலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்.* யாருக்கும் எந்த நன்மையும் செய்யாதவன் பாவகரமான [...]
* மனிதனை சூழ்நிலை தான் உருவாக்குகிறது என நினைக்கின்றனர். ஆனால், அவனுடைய மனம் அதைவிட முக்கியமான காரணமாக இருக்கிறது.* எல்லா ஆசைகளையும் இறைவனிடமே அர்ப்பணித்து விடுங்கள். மனச் சமநிலையுடன் இருக்க அமைதியைத் தரும் பழக்கங்களை மேற்கொள்ளுங்கள்.* நீங்கள் நல்ல செயலைச் செய்தும் கூட உங்களை சிலர் [...]
* கல்வியறிவு பெற்ற பெண்கள், நம் தேசத்தின் தர்மத்தை மறந்துவிடக் கூடாது. கற்ற கல்வி நன்மை தீமையைப் பகுத்தறியும் அறிவையும் கொடுப்பதாக இருக்கவேண்டும்.* ஆண்களைப் போல பெண்களும் கல்விகற்பதும், திறமைக்கேற்ப பணிபுரிவதும் தேவையாகி விட்டது. ஆனால், அவர்களுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரம் கிடைப்பது [...]
* தாயை நாடும் குழந்தையைப்போல இறைவனை அன்புடன் நேசிக்க வேண்டும். பிரார்த்தனை என்பது இதயம் கனிந்த வார்த்தைகளாக இருக்க வேண்டும். * அன்பு இல்லாத மனிதன் மிருகத்திற்குச் சமம். பிறவிப் பயன் பெற மனதை அன்பால் நிரப்புங்கள்.* பஜனையும், பூஜையும் வெறும் சடங்காக இருக்கக்கூடாது. உள்ளம் ஒன்றி ஒருமித்த [...]
* மனிதன் வெறும் உணவை மட்டும் தேடிக் கொண்டிருக்கக்கூடாது. கடவுளை அறிவதற்காக பிறந்துள்ளோம் என்பதை உணர வேண்டும்.* மனிதனுக்கு இருகண்கள் இருந்தும் கூட "எல்லாம் நானே' என்ற அகங்காரம் கொண்டு பார்வையற்றவனாக வாழ்கிறான்.* எதைச் செய்தாலும் மனச்சாட்சியிடம் கேட்டு செயல்படுங்கள். உங்களுக்கு தக்க [...]
* நாக்கை அடக்கினால் நாம் ஞானியாக வாழலாம். அதனால் தான் விரதம் இருப்பதற்கும், நாள் முழுவதும் பேசாமல் மவுனம் காப்பதற்கும் பெரியவர்கள் நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள்.* உண்ணும் உணவைப் பொறுத்தே ஒருவரின் எண்ண ஓட்டம் அமைகிறது. வேண்டாத தீய ஆசைகளுக்கும் உணவிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. * நாக்கின் [...]
* கைகளின் அழகு, அதில் அணியும் வளையல்களிலும், ஆபரணங்களிலும் இல்லை. மனமுவந்து பிறருக்கு அள்ளிக் கொடுப்பதில் தான் இருக்கிறது.* தனித்து வாழாதீர்கள். அண்டை வீட்டாரிடம் ஒதுங்கி இருக்காதீர்கள்.* கடவுளை எழுப்புவதற்காகக் காலையில் சுப்ரபாதம் பாடுவதில்லை. அறியாமையில் இருந்து மனிதன் எழவே [...]
* நமக்கு எது வேண்டுமோ அதை கடவுளிடம் கேட்பதில் தவறில்லை. கடவுள் உங்களுடைய தகுதிக்கு ஏற்பக் கொடுத்தருள்வான். * நல்லவழியில் பொருள்தேடி வாழும் வாழ்க்கையே சிறந்தது. குறுக்குவழியில் பணம் சம்பாதிக்கலாம். ஆனால், அதோடு அவமானமும், அவப்பெயரும் சேர்ந்தே வரும்.* பெற்றவர்கள், குழந்தைகளின் உள்ளத்தில் [...]
* பிரார்த்தனை உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தில் இருந்து வரும்போது தான் முழுமையானதாக இருக்கும்.* கடவுள் சத்தியத்தின் வடிவம். எனவே, உண்மையைப் பின்பற்றினால் மட்டுமே அவரது அருளுக்குப் பாத்திரமாக முடியும். * செல்வம், அதிகாரம், பட்டம், பதவி எதுவும் நமக்கு நிலையானது அல்ல. என்றென்றும் உலகில் நிலையானவர் [...]
* அகந்தையை அறவே கைவிடுங்கள். அனைத்தும் இறைவன் செயல் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.* ஆர்வத்துடன் பணியில் ஈடுபட்டால் மனதில் வேறு எந்த சிந்தனையும் எழுவதில்லை. ஒரு பணியை இறைவனுக்காக செய்கிறோம் என்ற உணர்வு உண்டானால், அதன் மதிப்பு கூடிவிடும். * எண்ணம், வாக்கு, செயல் மூன்றாலும் சத்தியம், [...]