* இறைவன் நமக்கு கை, கால் என எல்லா உறுப்புகளையும் கொடுத்திருக்கிறார். இவற்றைக் கொண்டு நன்றியுணர்வுடன் நாலு பேருக்கு நன்மையை மட்டும் செய்ய வேண்டும். * மனிதனுக்கு ஒழுக்கம் முக்கியமானது. வாழ்வில் ஒழுங்கு வந்துவிட்டால், நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அதன் அழகும், நேர்த்தியும் வெளிப்படத் [...]
* வழுக்கு மரத்தில் சறுக்குவது போல, வாழ்விலும் சறுக்குவது இயல்பு. விடாமுயற்சியோடு ஏற முயன்றால் வெற்றியை அடைய முடியும். * ஜகன்மாதாவான அம்பிகையை சரணடைந்து விட்டால், நாம் அனைவரும் அவளின் பிள்ளைகள் என்ற அன்புணர்வு உண்டாகி விடும். * எல்லோரும் ஏதாவது ஒரு திருப்பணியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள [...]
* பாவச் செயலில் ஈடுபடாதவர்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. தைரியம் அவர்களின் முகத்தில் சுடர்விட்டுப் பிரகாசிக்கும்.* தர்மத்தைச் செய்தால் பலனை எதிர்பார்ப்பது கூடாது. பலன் தரவேண்டியது கடவுளின் வேலை.* கடவுள் கடலுக்கு ஒப்பானவர். நதிகளைப் போல தன்னிடம் நாடிவரும் பக்தர்களை எதிர்கொண்டு அழைத்துக் [...]
* எங்கும் மின்ஆற்றல் நிறைந்திருந்தாலும், அதை வெளிப்படுத்த ஒரு நிலையம் ஏற்படுத்துவது போல, எங்கும் நிறைந்த அருளை பெற கோயிலை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.* கோயிலைத் தூய்மையாக வைத்துக் கொள்வதில் அனைவருக்கும் அக்கறை தேவை. தூய்மை என்பதில் மனம், உடல் இரண்டுமே அடங்கும். * நம்மிடம் இருக்கும் செல்வம் [...]
* ஆசையைப் படிப்படியாக குறைக்க வேண்டும். இதனால் துன்பம் குறையும். ஆசை அடியோடு நீங்கி விட்டால், மீண்டும் மண்ணில் பிறவி எடுக்கத் தேவையில்லை. * வெளியுலகில் கிடைக்கும் மகிழ்ச்சி ஒருவனுக்கு என்றென்றும் நிலைப்பதில்லை. மனதில் இருந்து உண்டாகும் மகிழ்ச்சியே என்றென்றும் நிலைத்திருக்கும். * வேதம் [...]
* சுவரில் எறியும் பந்து மீண்டும் நம்மிடமே திரும்பிவிடும். அதுபோல, கோபத்தில் பிறரைத் தாக்கினால், அது மீண்டும் வந்து நம்மைத் தாக்கும்.* உங்களது ஆசைகள் நிறைவேறத் தடையாக இருப்பவர்கள் மீதும், உ<ங்களுக்குக் கீழே பணியாற்றுபவர்கள் மீதும் ஒருபோதும் கோபத்தைக் காட்டாதீர்கள்.* ஒருவரின் நிறைவேறாத ஆசையே [...]
* எந்தச் செயலையும் முறையோடு செய்ய வேண்டும். நியாயம் தவறும்போது தான் வாழ்வில் துன்பம் ஏற்படுகிறது.* ஒருவருக்கு நியாயமாக இருப்பது இன்னொருவருக்கு நியாயமாக தோன்றுவது இல்லை. எனவே எல்லோரும் ஏற்கும் விதத்தில் பொது நியாயத்தைப் பின்பற்றுவது நல்லது.* பகவத் கீதை உபதேசிப்பது போல, விருப்பு வெறுப்புக்கு [...]
* பக்தியுடன் தினமும் கால் மணிநேரமாவது வீட்டில் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.* ராமாயணம், மகாபாரதம் போன்ற ஆன்மிக நூல்களை படிக்க கொஞ்ச நேரம் ஒதுக்குங்கள். இதனால் தெய்வீக சம்பந்தம் உண்டாகும். * கல்வி முறையில் தர்மம், நீதி, தெய்வ நம்பிக்கை போன்ற நன்னெறி போதனைகளுக்கு உரிய இடமளிக்க வேண்டும்.* [...]
* உலகம் முழுதும் நல்லதும் கெட்டதும் கலந்து தான் இருக்கிறது. இது ஒன்றும் புதியதல்ல. உலகம் தோன்றிய காலத்தில்இருந்து இப்படித் தானிருக்கிறது.* நாம் வாழும் இந்த பூலோகத்தை "மிச்ரலோகம்' என்று தான் குறிப்பிடுவர். அப்படியென்றால் "கலப்பு உலகம்' என்று பொருள். நல்லதும் கெட்டதும் கலந்ததே இந்தக் கலவை.* [...]
* சமூகத்தில் திருமணத்தைப் பெரிய பொருளாதாரப் பிரச்னையாக மாற்றி இருப்பது அக்கிரமமான செயல்.* வரதட்சணையை எதிர்பார்க்காமல் பெண்ணின் குணத்திற்காக திருமணம் செய்து கொள்ளும் நல்ல மனம் நமக்கு இருக்க வேண்டும்.* இந்தக் கால திருமணத்தில் நடக்கும் ஆடம்பர விஷயங்களும், பெண்வீட்டாரிடம் வரதட்சணையாக [...]