* நாம் கடவுளிடம் இருந்து பிரிந்து வந்துஇருக்கிறோம். அவன் பக்கமாகவே நகர்ந்து போய் முடிவில் அவனிடம் ஒட்டிக் கொண்டு ஒன்றாக முயற்சிக்க வேண்டும்.* வாழ்க்கையில் ஒழுக்கத்தைப் பின்பற்றத் தொடங்கினால், அதன் பின் நாம் ஈடுபடும் ஒவ்வொரு செயலிலும் அழகு ஏற்பட்டு விடும். * நாம் எப்படி வாழ்கிறோமோ அப்படியே [...]
* அன்பே சிவம் என்றார் திருமூலர். அறிவான தெய்வம் என்றார் தாயுமானவர். அன்பையும், அறிவையும் அன்னபூரணியாய் வீற்றிருக்கும் அம்பிகை நமக்கெல்லாம் பிச்சையாகப் போட வேண்டும் என்று இன்று பிரார்த்திப்போம்.* மனிதன் நல்லதை மட்டுமே சிந்திக்க வேண்டும். "என்னிடம் பாவமூட்டையே இல்லை' என்று சொல்லும்படி நாம் [...]
* கடவுள் என்று ஒருவர் இருக்கிறார். அவரை அனுபவிக்க வேண்டும் என்ற தாகத்துடன் பக்தி செய்பவர் மீது கருணை கொண்டு கடவுள் அருள்புரிவார்.* ஆசை என்பதே இல்லாமல் அல்லும் பகலும் கடவுளின் திருவடியைப் பிடித்துக் கொள்ள நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும். * பக்திப்பாடல் பாடுவதற்கு வெட்கம் கூடாது. கருணையே [...]
* விஞ்ஞானத்தால் வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு பக்கத்தில் ஆபத்தும் வளர்ந்து கொண்டே போகிறது. மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர்ந்தால் தான் இந்த ஆபத்து மறையும்.* செய்யும் செயலை பற்றின்றிச் செய்தால் ஒழுக்கம் வளரும். உள்ளமும் தூய்மை பெறும். பற்றின்றிச் செய்ய பகவானின் பாதங்களைப் [...]
* எங்கு மக்கள் துன்பப்படுகிறார்களோ, அங்கே வலுவில் சென்று நம்மால் ஆகக்கூடியதை எல்லாம் செய்ய முயல வேண்டும். பணத்தாலோ, உடலாலோ, வாக்காலோ பிறருக்கு முடிந்த உதவியை செய்ய வேண்டியது நம் கடமை.* தினமும் செடி கொடிகளுக்கு தண்ணீர் விட வேண்டும். மிருகங்களுக்கு அன்போடு உணவு கொடுக்கவேண்டும். வாயில்லா [...]
* அபிஷேகப்பிரியனான பரமேஸ்வரன் விபூதிபிரியனாக உள்ளான். "காடுடைய சுடலைப் பொடி பூசி' என்று தேவாரத்தின் முதல் பாட்டிலேயே ஞானசம்பந்தக் குழந்தை சொல்லியிருக்கிற மாதிரி, சிவன் இட்டுக் கொள்வது மயானத்தில் சவங்களை எரித்துப் பெறுகிற சாம்பலே திருநீறு. * கோமய உருண்டைகளைப் புடம் போட்டு விபூதி தயார் [...]
* மனதால் உயர்ந்து விட்டால் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து விடும். அதன்பின் வாழ்க்கையைத் தள்ளிச் செல்வதில் ஒரு சிரமமும் இருக்காது.* விஞ்ஞானம் வெளியுலக அறிவோடு நின்று விடாமல், உள்ளத்தின் உண்மையையும் ஆராயப்பயன்பட வேண்டும். *மனதில் எழும் துக்கத்தை ஞானம் என்னும் தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். [...]
* அன்பால் பிறரைத் திருத்தி நல்வழிப்படுத்த முடியும். அன்பால் ஒருவரை திருத்தினால் தான் நமக்குப் பெருமை.* பாவம், புண்ணியம் என்பது ஒரு செயலைப் பொறுத்தது அல்ல. செயலாற்றுபவரின் நோக்கத்தைப் பொறுத்தது. நற்செயலாக இருந்தாலும், நோக்கம் தவறானதாக இருந்தால் அது பாவமே. * ஆசை, கோபம், துவேஷம், பயம் ஆகியவற்றை [...]
* காலையில் எழுந்ததும் இரு நிமிடமாவது கடவுளை மனப்பூர்வமாக நினைத்து வழிபாடு செய்யுங்கள்.* இன்றைய பொழுது நல்ல பொழுதாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.* வாரத்தில் ஒருநாளாவது அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்துங்கள். சாப்பிடும் முன், குறைந்த பட்சம் பறவைக்கோ [...]
* முதலில் மனிதன் தன்னுடைய மிருக உணர்வைப் போக்க முயலவேண்டும். பின் தெய்வமாக உயர வழிதேட வேண்டும்.* நம் வீட்டுக்குழந்தைகளுக்கு சிறுவயது முதல் நல்ல பண்புகளான தர்மம், ஒழுக்கம், பக்தி, ஞானம் முதலியவற்றை கடைபிடிக்க வழிகாட்ட வேண்டும்.* உண்மையாய் இருப்பவர் கடவுள் மட்டும் தான். அவரது திருவடிகளைப் [...]