* ஒவ்வொரு மனிதனும் தன் மோகங்களால் இழுக்கப்பட்டு மருளும்போதே சோதனைகளுக்கு ஆளாகின்றான்.* சோதனையைச் சகிக்கிற மனிதன் பாக்கியவான். ஏனெனில் சோதனை முடிந்தபின் வாழ்க்கையின் கிரீடத்தைப் பெறுவான்.* சோம்பேறியே எறும்பைக் கவனி. அதன் வழிமுறையை பின்பற்றி அறிவு பெறு. அதற்கு வழிகாட்டி இல்லை. தலைவனும் இல்லை. [...]
* தீயதை நல்லதென்றும், நல்லதைத் தீயதென்றும் சொல்லுபவர்களுக்குத் துயரம் தான் மிஞ்சும்.* மனிதர்களே! நீங்கள் சகோதரர்களாக இருக்கிறீர்கள். ஒருவருக்கொருவர் ஏன் தீங்கு செய்து கொள்ளுகிறீர்கள்?* எவனும் தீமைக்குத் தீமை செய்யாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.* முகத்தோற்றத்தைக் கொண்டு முடிவு செய்யாதே. [...]
* அழிவுக்கு முன்னால் அகந்தை. விழுவதற்கு முன்னால் தற்செருக்கு. அகங்காரம் வரும்போது அதற்குப் பின்னே அவமானமும் வந்துசேரும்.* பலசாலியைவிடக் கோபம் கொள்வதில் மிதமாயிருப்பவனே சிறந்தவன். ராஜ்யங்களைக் கைப்பற்றுபவனை விடத் தன் உணர்ச்சியை அடக்கியாளுபவனே சிறந்தவன்.* ஒடுக்கி அமுக்கப்பட்டவர்களுக்குக் [...]
* மனிதனின் வாழ்நாட்கள் பற்களுக்கு ஒப்பானவை. வயலில் உள்ள பூவைப் போல அவன் செழிக்கிறான். காற்று அதன் மீது வீசியதும் பூ உதிர்ந்து விடுகிறது. அது இருந்த இடத்தை இனி அது அறியாது.* சகலவிதமான மனக்கசப்பு, கோபதாபம், குரோதம், கூக்குரல், ஏச்சுபேச்சு ஆகிய துர்க்குணங்களை விட்டொழியுங்கள். * விருந்து [...]
* உன் பொக்கிஷம் எங்கு இருக்கிறதோ அங்கு தான் உன் இருதயமும் இருக்கிறது.* அறிவாளியின் இருதயம் அவனது வலது கைப்புறம் இருக்கிறது. முட்டாளின் இருதயமோ அவனது இடது கையில் இருக்கிறது.* கடவுளே! என்னிடம் சுத்தமான இருதயத்தைச் சிருஷ்டியும். என்னுள்ளே நேரானதொரு உயிர்ப்பை புதுப்பியும்.* எல்லாவற்றிற்கும் [...]
* உன் கண்கள் நேராகவே பார்க்கட்டும். உன் கண் இமைகள் முன்னோக்கட்டும்.* கடவுளின் கருணையை உன் பணத்தால் விலைக்கு வாங்கி விடலாம் என்று நீ நினைத்தபடியால், உன்னுடைய பணம் உன்னுடனே அழிந்து போகட்டும்.* பணத்தாசை பிடித்தவர்கள் ஆசைத் தூண்டுதல்களிலும் சூழ்ச்சி வலைகளிலும் விழுகிறார்கள். * எந்த ராஜாவும் தன் [...]
* வெளிச்சத்தில் இருக்கிறேன் என்று சொல்லி கொண்டு தன் சகோதரனைப் பகைக்கிறவன், இன்னும் இருளிலேயே இருக்கின்றவன் தான்.* எவன் தன் நாவை அடக்காமல் தன் இருதயத்தை ஏமாற்றிக் கொண்டு தன்னை பக்திமான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறானோ அவனுடைய பக்தி வியர்த்தமானது.* மனத்திருப்தியோடு கூடிய பக்தியே மிகுந்த [...]
* சரீர முயற்சியின் பலன் சிறிதளவே. ஆனால், தெய்வீகத்தன்மையோ எல்லாவற்றிலும் அதிகமான பலன் தருவதாகும். இப்போதைய வாழ்விற்கும் இனி வரப்போகும் வாழ்விற்கும் உறுதி தருவதாகும்.* தானியத்தைப் பதுக்கி வைப்பவனைப் பொதுஜனம் சபிக்கும். ஆனால், அதை விற்பவன் தலையையோ வாழ்த்தும்.* முட்டாளுக்கு அவனது [...]