* மனிதனின் மனம் இயற்கையாகவே தன்னைப் பற்றி உயர்வாகக் கருதும் இயல்புடையது. அதனால் அவன் தன் தீய தன்மைகளை மறைத்து விடுகிறான். கடவுளின் முன்னால் தன்னை புழுவுக்கும் கீழாக தாழ்த்திக் கொள்பவனே அவரது அன்புக்கு பாத்திரமாகிறான்.* ""ஒன்றையும் வாதினாலாவது(வாதிடுதல்), வீண் பெருமையினாலாவது செய்யாமல், [...]
* ஒருவருக்கொருவர் கருணையோடும், வாஞ்சையுள்ளத்தோடும் ஒருவரை ஒருவர் பொறுத்து மன்னித்து நடவுங்கள்.* உங்கள் வாழ்க்கை என்பது என்ன? சற்று நேரம் தோன்றி பிறகு மறைந்து போகும் ஒரு புகை. நம்மில் எவரும் தனக்காக வாழ்வதில்லை. தனக்காக சாவதும் இல்லை.* மனிதனின் வாழ்நாட்கள் பற்களுக்கு ஒப்பானவை. வயலில் உள்ள [...]
* இறைவன் நீங்கள் கேட்கும் முன்பே உங்களுக்கு எது தேவை என்பதை தந்தை ஸ்தானத்தில் இருந்து அவன் அறிவான்.* குழந்தை போல் எவர் தன்னைப் பணிவாக தாழ்த்திக் கொள்கிறாரோ அவரே பரலோகத்தில் தலைசிறந்தவராய் இருப்பார்.* கவலைப்படுவதன் மூலம் உங்களில் ஒருவராவது ஒரு முழமேனும் உயர்ந்து விட முடியுமா?* ஏழைகளே [...]
* கடவுள் நமக்கு அச்சம் நிறைந்த ஜீவனைக் கொடுக்கவில்லை. சக்தியும் அன்பும், மன அமைதியும் உள்ள ஜீவனைத் தான் கொடுத்திருக்கிறார்.* கடவுளே எனக்குத் துணை. மனிதன் எனக்கு என்ன செய்வானென்று அஞ்ச மாட்டேன் என்று நான் தைரியமாய்ச் சொல்லலாமே.* நீ பரிபக்குவமான மனிதனையும் நேர்மையாளனையும் கவனித்துப் பார். [...]
* பணத்தாசை பிடித்தவர்கள் ஆசைத்தூண்டுதல்களிலும், சூழ்ச்சி வலைகளிலும் விழுகிறார்கள். பல அசட்டுத்தனமான புண்படுத்தக்கூடிய மோகங்களிலும் விழுகிறார்கள். அவை அவர்களை நரகாக்கினியல் மூழ்கடிக்கின்றன.* நம் சரீர முயற்சியின் பலன் சிறிதளவே ஆகும். ஆனால் தெய்வீகத் தன்மையோ எல்லாவற்றையும் விட அதிகமான பலன் [...]
* தீபக்கால் வீட்டிலுள்ள அனைவருக்கும் வெளிச்சம் தரும். அதுபோல, மனிதர்கள் உங்கள் முதற்காரியங்களைக் காணும் பொருட்டு உங்கள் ஒளி அவர்கள் முன் பிரகாசிக்கட்டும். * இரவோ முன்பே கழிந்து போயிற்று. பகலோ மிகவும் நெருங்கி விட்டது. ஆகையால், இரவின் செயல்களை உதறிவிட்டு ஒளியின் கவசங்களை அணிந்து கொள்வோம்.* ஏழை [...]
* பரமண்டலத்திலே இருக்கிற உங்கள் பிதா உத்தமராயிருப்பது போல நீங்களும் உத்தமராக இருங்கள்.* தாழ்ந்த நிலையில் உள்ள சகோதரன் தன் உணர்வை நினைத்து ஆனந்தம் அடைவானாக.* உழைப்பாளி அவமானப்படத் தேவையில்லை.* உன் முகத்தின் வியர்வையில் ரொட்டி சாப்பிடுவாயாக.* உறக்கத்தை விரும்பாதே. விரும்பினால் வறுமை [...]
* நீ உணவு ஆசைக்கு ஆளானவனாக இருந்தால் உன் தொண்டையில் ஒரு கத்தியை வைத்து கொள்.* பூரண வயதுள்ளவர்களுக்குப் பலமான ஆகாரம் தகும். ஏனெனில் இவர்கள் நன்மை தீமைகளைப் பகுத்தறியும்படி பழக்கப்பட்ட புலன்களை உடையவர்கள். * பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி மிருகங்களுக்கு புல்லையும், மனிதரின் [...]
* தீயதை நல்லதென்றும், நல்லதைத் தீயதென்றும் சொல்லுபவர்களுக்குத் துயரம் தான் மிஞ்சும். மனிதர்களே நீங்கள் சகோதரர்களாக இருக்கிறீர்கள். ஒருவருக்கொருவர் ஏன் தீங்கு செய்து கொள்ளுகிறீர்கள்.* முகத்தோற்றத்தைப் பார்த்துக் கொண்டு முடிவு செய்யாதே. நேர்மையான நியாயத்தைப் பார்த்துத் தீர்ப்புச் சொல்.* [...]