நீங்கள் அளப்பதே உங்களுக்கும் அளக்கப்படும்
ஆகஸ்ட் 11,2017,09:24  IST

பைபிள் அறிவிக்கும் போதனைகளை படியுங்கள்.
* நீங்கள் எந்த அளவினால் அளப்பீர்களோ, அதே அளவு உங்களுக்கு திரும்ப அளிக்கப்படுவது மட்டுமின்றி கூடுதலாகவும் கொடுக்கப்படும்.
* மண் மண்ணுக்குள் திரும்பிப்போகும். கடவுள் கொடுத்த ஆவி அவரிடமே திரும்பிப் போகும்.
* அழுகிறவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவார்கள்.
* வானத்தின் உயரம், பூமியின் ஆழம், ராஜாக்களின் அந்தரங்கம் ஆகியவற்றை ஆராய்ந்து அறிய முடியாது.
* மாபெரும் மனிதர்கள் அனைவருமே அறிஞர்களாக இருந்து விடுவதில்லை.
* அறிவாளியின் வாயில் உள்ள வார்த்தைகள் கருணையானவை. ஆனால் முட்டாள்களின் உதடுகளோ அவனையே விழுங்கி விடும். முட்டாள்களின் பாட்டை கேட்பதை விட அறிவாளிகளின் நிந்தனையைக் கேட்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் அறிவுள்ளவன் வார்த்தைகளை அடக்கி கொள்வான்.
* எந்த மனிதனாவது தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பான் என்றால், அவனுக்கு எதுவுமே தெரியாது என பொருளாகும்.
* பலமும் மானமுமே ஒரு பெண்ணின் ஆடைகள்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X