கடவுளுக்கு கடன் கொடுப்பவர்
ஏப்ரல் 13,2018,11:24  IST

* ஏழைகளுக்கு இரங்கி உதவி செய்கிறவர் கடவுளுக்கு கடன் கொடுப்பவராக மாறுகிறார்.
* இளைஞரே! நீங்கள் வலிமை வாய்ந்தவர்கள், கடவுளின் வார்த்தை உங்களுக்குள் நிலைத்திருக்கிறது.
* தந்தையை கொடுமைப் படுத்தி தாயைத் துரத்தி விடும் மகன், வெட்கக் கேட்டையும், பெரும் பாவத்தையும்சேர்க்கிறான்.
* மனக்கவலையை ஒழியுங்கள், உடலுக்கு தீங்கு வராதபடி காத்துக் கொள்ளுங்கள், குழந்தைப் பருவமும் இளமையும் மறையக் கூடியதாகும்.
* நீ இளவயது இச்சைகளை விட்டு ஓடிவிடு. துாய்மையான உள்ளத்தோடு கடவுளின் பெயரை சொல்லி வழிபடுவோருடன் நீதி, நம்பிக்கை, அன்பு, அமைதி ஆகியவற்றை தேடு.
* நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப் பற்றி தம்பட்டம் அடிக்காதீர்கள்.
* உன் சகோதரர்கள் ஏழ்மைப்பட்டு இளைத்துப் போனால், அவர்களுக்கு உதவுங்கள். அவர்கள் விருந்தினர் போல உங்களோடு வாழட்டும்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X