லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்...
ஆகஸ்ட் 17,2018,15:11  IST

* ஒரு லட்சியத்தை ஏற்றுக்கொண்ட பிறகு துன்பம் குறுக்கிட்டாலும் வெற்றி வரும் வரை முயற்சியைத் தொடருங்கள்.
* ஆழ்ந்த ஈடுபாட்டுடன் கடவுளை நினைத்து உருகினால் நிச்சயமாக அவரருள் கிடைக்கும்.
* முழு நம்பிக்கை, நன்னடத்தை, நல்லொழுக்கம் ஆகியவையே வெற்றிக்கான வழிகள்.
* உயிர் வாழ உணவு போல சுதந்திரமாக வாழ தியாகம் அவசியம்.
* சுதந்திரம் இல்லாத தேசம் உயிர் இல்லாத உடம்பை போன்றது.
* அரசியல் தந்தை போன்றது, தர்மம் தாய் போன்றது. இரண்டும் இணைந்திருப்பதே நல்லறம்.
* சிறிய செயல் செய்பவனைப் பார்த்து நீ கேலியாக சிரித்தால் உன்னைப் பார்த்து இறைவன் கேலியாக சிரிப்பான்.
* கஷ்டங்களை விரும்பி அனுபவிக்க வேண்டும். அப்போது தான் சுகத்தையும் முழுமையாக அனுபவிக்க முடியும்.
* கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் நம் சொந்த வாழ்விலும், சமுதாய வாழ்விலும் முன்னேற முடியாது.
* பிழைகளை சரி செய்து கொள்வதில் தயக்கம் இருந்தால் வாழ்வில் வளர முடியாது.

வழிகாட்டுகிறார் ராஜாஜி

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X