இந்த வாரம் என்ன
ஆகஸ்ட் 26,2018,07:30  IST

ஆகஸ்ட் 25 ஆவணி 9: ஓணம் பண்டிகை, ரிக் உபா கர்மம், சிவன் கோயில்களில் நடராஜர் அபிஷேகம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் சட்டத்தேரில் பவனி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம்.

ஆகஸ்ட் 26 ஆவணி 10: பவுர்ணமி விரதம், யஜுர் உபாகர்மம், ஆவணி அவிட்டம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் ரிஷப வாகனம், சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் பவனி, கீழ்திருப்பதி கோவிந்தராஜர் பூப்பல்லக்கு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

ஆகஸ்ட் 27 ஆவணி 11: காயத்ரி ஜபம், குறுக்குத்துறை முருகன் தெப்பம், சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சனம், சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் புறப்பாடு.

ஆகஸ்ட் 28 ஆவணி 12: சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.

ஆகஸ்ட் 29 ஆவணி 13: முகூர்த்த நாள், சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் பவனி, திருப்பதி ஏழுமலையான் மைசூரு மண்டபம் எழுந்தருளல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.

ஆகஸ்ட் 30 ஆவணி 14: முகூர்த்தநாள், மகா சங்கடஹர சதுர்த்தி விரதம், திருச்செந்துார் முருகன் கோயிலில் ஆவணி திருவிழா ஆரம்பம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிறப்பு அபிஷேகம், தேவகோட்டை ரங்கநாதர் புறப்பாடு, ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் முருகன் திருவிழா ஆரம்பம்.

ஆகஸ்ட் 31 ஆவணி 15: திருச்செந்துார் முருகன் சிங்க கேடய சப்பரம், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு, ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி நவசக்தி மண்டபம் எழுந்தருளல், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் ஊஞ்சல் சேவை, ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் முருகன் பவனி.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X