இந்த வாரம் என்ன
ஆகஸ்ட் 31,2018,14:55  IST

செப்டம்பர் 1 ஆவணி 16: திருச்செந்துார் முருகன் தங்கமுத்துக்கிடா வாகனம், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் முருகன் அபிஷேகம், திருவல்லிக்கேணி வரதராஜருக்கு திருமஞ்சனம், குச்சனுார் சனீஸ்வரர் சிறப்பு ஆராதனை.

செப்டம்பர் 2 ஆவணி 17
: கிருஷ்ண ஜெயந்தி, கார்த்திகை விரதம், திருநெல்வேலி நவநீதகிருஷ்ணர் உற்ஸவம் ஆரம்பம், திருச்செந்துார் முருகன் வெள்ளி யானை வாகனம், திருப்பரங்குன்றம் முருகன் தங்கமயில் வாகனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

செப்டம்பர் 3 ஆவணி 18: பாஞ்சராத்ர ஜெயந்தி, பெரிய வாச்சான் பிள்ளை திருநட்சத்திரம், திருச்செந்துார் முருகன் குடவருவாயில் ஆராதனை, வரகூர் வெங்கடேசப் பெருமாள் உறியடி உற்ஸவம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி பவனி, மதுரை நவநீதகிருஷ்ணர் உற்ஸவம் ஆரம்பம், கீழ்திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம்.

செப்டம்பர் 4 ஆவணி 19:
நயினார் வரதாச்சாரியார் திருநட்சத்திரம், பிள்ளையார்பட்டி, தேரெழுந்துார், தேவகோட்டை, திண்டுக்கல், மிலட்டூர், உப்பூர் விநாயகர் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம், மதுரை நவநீதகிருஷ்ணர் சேஷ வாகனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.

செப்டம்பர் 5, ஆவணி 20: திருச்செந்துார் முருகன் உருகுச்சட்ட சேவை; மாலையில் சிவப்பு சாத்தி பவனி, திருவலஞ்சுழி சுவேதவிநாயகர் உற்ஸவம் ஆரம்பம், மதுரை நவநீதகிருஷ்ணர் வீணைமோகன அலங்காரம், பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் சிம்மவாகனம்.

செப்டம்பர் 6, ஆவணி 21: முகூர்த்த நாள், ஏகாதசி விரதம், செறுத்துணை நாயனார் குருபூஜை, திருச்செந்துார் முருகன் பச்சை சாத்துதல், மதுரை நவநீதகிருஷ்ணர் நாராயணர் திருக்கோலம், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபத்தில் திருமஞ்சனம், திண்டுக்கல் விநாயகர் பவனி.

செப்டம்பர் 7, ஆவணி 22: பிரதோஷம், சிவாலயங்களில் நந்தீஸ்வரர் அபிஷேகம், அதிபத்தர், புகழ்துணை நாயனார் குருபூஜை, மதுரை நவநீத கிருஷ்ணர் ரங்கநாதர் திருக்கோலம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கமல வாகனம், திருச்செந்துார் முருகன் கைலாச பர்வத வாகனம்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X