இந்த வாரம் என்ன
செப்டம்பர் 07,2018,15:29  IST

செப்டம்பர் 8 ஆவணி 23: மாத சிவராத்திரி, இளையான்குடி மாற நாயனார் குருபூஜை, திருச்செந்துார் முருகன் தேர், மதுரை நவநீத கிருஷ்ணர் தவழ்ந்த கண்ணன் திருக்கோலம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வெள்ளி கேடய வாகனம்.

செப்டம்பர் 9 ஆவணி 24: அமாவாசை, திருச்செந்துார் முருகன் தெப்பம், மதுரை நவநீத கிருஷ்ணர் ஆண்டாள் திருக்கோலம், பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கஜமுக சம்ஹாரம், நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் விபீஷணருக்கு நடையழகு சேவை.

செப்டம்பர் 10 ஆவணி 25: மறைஞான சம்பந்தர் குருபூஜை, திருச்செந்துார் முருகன் மஞ்சள் நீராடல், மதுரை நவநீத கிருஷ்ணர் பரமபதநாதர் திருக்கோலம், உப்பூர் விநாயகர் காமதேனு வாகனம், சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சனம்.

செப்டம்பர் 11 ஆவணி 26: பலராம ஜெயந்தி, சந்திர தரிசனம், கல்கி ஜெயந்தி, சாம உபாகர்மம், திண்டுக்கல், தேவகோட்டை, உப்பூர், தேரெழுந்துார், மிலட்டூர், திருவலஞ்சுழி விநாயகர் கோயில்களில் திருக்கல்யாணம், மதுரை நவநீதகிருஷ்ணர் பூப்பல்லக்கு, தேனி மாவட்டம் குரங்கணி முத்துமாலையம்மன் பவனி.

செப்டம்பர் 12 ஆவணி 27: முகூர்த்தநாள், விபத்தார கவுரி விரதம், திண்டுக்கல், தேவகோட்டை, மிலட்டூர், உப்பூர் கோயில்களில் தேர், மதுரை நவநீத கிருஷ்ணர் ராஜாங்க அலங்காரம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் யானை வாகனம்.

செப்டம்பர் 13 ஆவணி 28: விநாயகர் சதுர்த்தி, மதுரை நவநீதகிருஷ்ணர் மச்சாவதாரம், திருவலஞ்சுழி சுவேத விநாயகர் தேர், திருப்பதி ஏழுமலையப்பன், மதுரை தல்லாகுளம் பிரசன்னவெங்கடேசர், ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம், கரிநாள்.

செப்டம்பர் 14 ஆவணி 29: ரிஷி பஞ்சமி, மகாலட்சுமி விரதம், திருப்பதி ஏழுமலையப்பன் சின்னசேஷ வாகனம், மதுரை நவநீதகிருஷ்ணர் கோவர்த்தனகிரியில் பவனி, ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வார் சந்தனப்பிரபை, மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசர் சிம்ம வாகனம்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X