ஆண்டவரிடம் தினமும் உருக்கமான ஜெபம் செய்யுங்கள். இதோ! அந்த பிரார்த்தனை.* ஆண்டவரே! என் ஜீவனை உமக்கே அர்ப்பணிக்கிறேன்.* என் நேரங்களை, என் நாட்களை உமக்கே ஒப்புவிக்கிறேன். அவைகள் ஓய்வின்றி உம்மையே புகழ்ந்து கொண்டிருக்கட்டும்.* என் கரங்களை உமக்கே ஒப்புவிக்கிறேன். என் கரங்களின் கிரியைகள் உமது அன்பையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கட்டும்.* என் கால்களை உமக்கே [...]
நமக்கு யாரேனும் இம்சை செய்தாலும், அதைப் பொறுத்துக் கொண்டு, அவர்கள் மனம் திருந்த வேண்டும் என்பதற்காக இறைவனிடம் ஜெபிக்க வேண்டும். மாறாக பழி உணர்வைக் காட்டக்கூடாது. அவர்களுக்காக ஜெபிப்பது எப்படி?* எங்களை நேசித்து வழிநடத்தி பாதுகாத்து பராமரித்து வருகிற எங்கள் அன்பின் ஆண்டவரே! இம்மட்டுமாக, எங்களுக்கு அளித்து வருகிற எல்லாவிதமான இரக்கங்களுக்காகவும், நன்மைகளுக்காகவும் [...]
* நல்ல மனுஷன் நல்லவைகளை இருதயத்தின் நல்ல பொக்கிஷத்திலிருந்து எடுத்துக் காட்டுகிறான். தீயவன் தீய பொக்கிஷத்திலிருந்து தீயதைக் கொண்டு வருகிறான்.* கடவுளின் ஊழியன் வழக்காடும் தன்மையுள்ளவனாய் இருக்கக்கூடாது. எல்லா மனிதர்களிடமும் கண்ணியமாகவும், போதிக்கும் திறமையுள்ளவனாகவும் பொறுமைசாலியாகவும் இருக்கவேண்டும்.* நண்பன் புண்படுத்தும் காயங்கள் உள்ளூரப் பற்றுதல் [...]
இயேசு கிறிஸ்துவுக்கு வழங்கிய சிலுவை மரணத்தீர்ப்பு உலக வரலாற்றில் நடந்த விசேஷித்த நியாயத்தீர்ப்பு. அத்தீர்ப்பின் விளைவு என்ன என்று ஆராய்ந்தால், முழு உலகத்திற்கும் அவர் பெரும் ஆசிர்வாதத்தை சம்பாதித்து தந்துள்ளார் என தெரிய வரும். பைபிளில் அது குறித்த வசனங்களை வாசிப்போம்.* அவர் தண்டிக்கப்பட்டதால் நாம் மன்னிக்கப்பட்டோம்.* அவர் சிலுவையில் தொங்கியதால் நாம் [...]
பிறருக்கு தீமை செய்வது கொடிய பாவம். தீமை செய்வது குறித்து பைபிள் என்ன சொல்கிறது தெரியுமா?* தீமையிலிருந்து தான் தீமை புறப்படும்.* தீயதை நல்லதென்றும் நல்லதைத் தீயதென்றும் சொல்பவர்களுக்கு துயரம் தான் மிஞ்சும்.* மனிதர்களே! நீங்கள் சகோதரர்களாக இருக்கின்றீர்கள். ஒருவருக்கொருவர் ஏன் தீங்கு செய்து கொள்ளுகிறீர்கள்?* தீமையாய் தோன்றுகிற அனைத்திலிருந்தும் விலகுங்கள்.* [...]
* இறையாட்சி என்பது உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக தூய ஆவி (ஆண்டவர்) அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும்.* இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக்கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோம்.* தமக்கு அஞ்சி நடப்பவரையும், தமது பேரன்புக்காகக் காத்திருப்பவரையும் இறைவன் [...]
""சகோதரரே! நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள். மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை, தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்து கொண்டார்''(1கொரி.1:26,27) என்று ஒரு வசனம் இருக்கிறது.இதன்பொருள் என்ன?ஆண்டவர் ஞானிகளையும், திறமைசாலிகளையும், பணக்காரர்களையுமே தனது பணிக்காக தேர்ந்தெடுப்பார். அவர்களையே [...]
மியான்மர் தேசம் சில காலத்திற்கு முன்பு பர்மா என அழைக்கப்பட்டது. இந்த நாட்டிற்கு டாக்டர் ஜட்சன் என்பவர் ஊழியம் செய்து வந்தார். இரவு பகலாக கஷ்டப்பட்டு பர்மிய மொழியில் பைபிளை மொழி பெயர்த்தார். அந்த நாட்டில் பிற மத நூல்களை எழுதுவது குற்றம் என சட்டம் இருந்தது. எனவே, அவர் எழுதிய கையெழுத்துப் பிரதியை அச்சிடுவதற்குள் ஜட்சனைக் கைது செய்து சிறையில் அடைத்தது அரசாங்கம். [...]
*பெற்றோரைப் போற்றுவதும், மனைவியை நேசிப்பதும், அமைதியான வாழ்க்கை நடத்துவதும் ஒருமனிதனுக்கு வாய்க்கவேண்டிய நற்பேறுகளாகும். * எந்தச் செயலைச் செய்தால் எதிர்காலத்தில் நம் மனம் நிலையான ஆனந்தம் அடையுமோ, எந்த பலனை நினைத்தால் மனம் உற்சாகத்தோடு ஈடுபடுமோ அந்த உயர்வான செயலில் மட்டும் ஈடுபடுங்கள். அந்த நற்செயல் உங்கள் உயிர் மூச்சாகட்டும்.* விழிப்புடன் இரு, ஆசை இல்லாத [...]
யோபு கடவுளுக்கு மிகவும் பிரியமானவராக இருந்தார். ஏராளமான பொருள் வைத்திருந்த அவருக்கு ஏழு மகன்களும், மூன்று மகள்களும் இருந்தனர். சாத்தான் யோபின் மீது கவனம் வைத்தான். ஒருமுறையாவது கடவுளைத் தூஷிக்க வைக்க வேண்டும் என்று திட்டமிட்டான். கடவுளிடம் நேரில் சென்று, ""ஆண்டவரே! யோபுவைச் சோதிக்க எனக்கு அனுமதி தர வேண்டும்,'' என்று கேட்டான். ""அவனுக்கு தனிப்பட்ட வகையில் [...]
ஒரு ஊரிலுள்ள வியாபாரிகள் சிலர் பக்கத்து நகரத்துக்கு வியாபாரம் செய்ய செல்வதுண்டு. அவர்கள் செல்லும் வழியில் காடு ஒன்று குறுக்கிடும். அங்கே திருட்டு பயம் அதிகம். அவர்கள் ஆண்டவரை எண்ணி ஜெபித்தபடியே அந்த வழியே செல்வர்.ஒருமுறை கொள்ளையர் கூட்டம் வியாபாரிகளை வழிமறித்தது. வியாபாரிகள் தங்கள் பொருளை இழந்து விடுவோமோ என அஞ்சி நடுங்கினர். என்ன ஆச்சரியம்! கொள்ளையர்கள் அவர்கள் [...]
இன்று உலகில் எத்தனையோ பேர் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். அவர்களுக்கெல்லாம் ஆறுதல் சொல்வதுடன் உதவியும் செய்வது ஒவ்வொருவரின் கடமை. ஒரு இளைஞன் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றான். தான் சம்பாதித்த பணத்திற்கு தங்கக்கட்டிகளாக வாங்கினான். அவற்றை தன் இடுப்பில் ஒரு கச்சை கட்டி பத்திரப்படுத்திக் கொண்டான். கப்பலில், தாய்நாட்டுக்கு மகிழ்ச்சியுடன் [...]
மரணம் நிச்சயம் வந்து தானே தீரும்! நித்திய ஜீவனை (மரணமில்லா பெருவாழ்வு) பெறுவது எப்படி என்று தானே யோசிக்கிறீர்கள்!சாதனை வீரர் மகா அலெக்சாண்டருக்கு உலகத்தையே ஆள வேண்டும்என்பது அவரது லட்சியமாக இருந்தது. ஆனால்,33 வயதிலேயே உயிரிழந்தார். அவரது படையுடன் பல நாடுகளுக்கும் சென்றார். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சீதோஷ்ணம்...ஒவ்வொரு விதமான உணவு, தண்ணீர் என மாறி மாறி [...]
ஒரு இளைஞனுக்கு பல நண்பர்கள் இருந்தனர். இளைஞனுக்கு ஆண்டவரின் மீது தீவிரமான பக்தியுண்டு. நண்பர்கள் எல்லாருமே நாத்திகர்கள். ஆனால், அவர்கள் எல்லாருமே தலைசிறந்த எழுத்தாளர்கள். தேவன் என்ற ஒருவரே பூமியில் இல்லை என்ற தங்களது வாதத்தை வலியுறுத்தி பல புத்தகங்களையும் அவர் எழுதியிருந்தார்கள். மக்களும் அவற்றை விரும்பி வாங்கிப் படித்தார்கள். இதனால், புகழும், வருமானம் பெருகி [...]