தேவன் அன்பானவர் என்பதை மட்டுமே அறிந்திருக்கும் நாம், ""அவர் தான் அன்பு செய்வாரே! அதனால் எவ்வளவு தவறு வேண்டுமானாலும் செய்துவிட்டு, பாவமன்னிப்பு தேடிக்கொள்ளலாம் என எண்ணினால் அவர் கண்டிப்பானவராக மாறிவிடுவார்.ஜான் ஆர்.ரைஸ் என்ற வேதபண்டிதர் இதுபற்றி கூறும் போது, ""நரகம் அவியாத அக்கினியுள்ள இடம் என்று பைபிளில் சொல்லப்பட்டுள்ளதை நான் அப்படியே நம்புகிறேன். என் [...]
கிரேக்க மொழி பைபிளிலுள்ள "மிமீட்ஸ்' என்ற வார்த்தையில் இருந்து தோன்றிய சொல்லே"மிமிக்ரி'. ஒருவர் பேசுவது அல்லது நடிப்பது போல் அப்படியே அச்சுப்பிறழாமல் பாவனை செய்வதையே "மிமிக்ரி' என்கிறோம். தமிழ் பைபிளில், ""நீங்கள் பிரியமான பிள்ளைகளைப் போல் தேவனைப் பின்பற்றுகிறவராயிருங்கள் (எபே5:1) என்ற வசனத்தில், "பின்பற்றுகிறவராயிருங்கள்' என்ற வார்த்தைக்கு கிரேக்க [...]
"கர்த்தர் நம்மைக் காக்கிறவர்' என்ற வசனம் பைபிளில் 23, 91,121ம் சங்கீதத்தில் மாறி மாறி வருகிறது. மூன்று முறை அழுத்தமாகச் சொல்லப்பட்டுள்ளது.ஆண்டவர் படைத்த பறவைகள், தங்கள் குஞ்சுகளை பருந்து உள்ளிட்ட பகைவர்களிடம் இருந்து பாதுகாப்பதற்கு மூர்க்கமாகப் போரிடுகின்றன. பருந்தை விட வலுவில் பலமடங்கு குறைந்த கோழி கூட, தன் குஞ்சுகளைப் பாதுகாக்கும் பொருட்டு, தன்னால் முடிந்த [...]
மலைப்பகுதிகளில் உள்ள ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை, மூணாறு என்றெல்லாம் சுற்றுலா சென்று வந்திருப்பீர்கள். அங்கெல்லாம் ஆழமான பள்ளத்தாக்குள் உண்டு. உயரமான குன்றுகளில் இருந்து எட்டிப்பார்த்தால், தலையே சுற்றுவது போல் தோன்றும். வாழ்வை வெறுத்தவர்களும், அஜாக்கிரதையாக இருப்பவர்களும் இதனுள் விழுந்து தங்கள் உயிரை விடுகிறார்கள். எனவே, இந்தப் பகுதிகளைக் குறித்து எச்சரிக்கை [...]
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தான் எழுதிய "எழுச்சி தீபங்கள்' என்னும் நூலை, பிளஸ்2 மாணவி சினேகர் தர்க்கர் என்பவருக்கு பரிசாக அளித்துள்ளார். அவர் கடந்தமாதம் குஜராத் சென்றிருந்த போது, கொடுத்த பரிசு இது! எதற்காக தெரியுமா?குஜராத்திலு<ள்ள, ஆனந்த் நகருக்கு அவர் வந்த போது, வகுப்புக்கலவரம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்நகரிலுள்ள ஆனந்தலயா [...]
இயேசு அறையப்பட்டுள்ள சிலுவையின் மேல்பகுதியில் ஐஎன்ஆர்ஐ என்று எழுதப்பட்டிருக்கும். இதற்குரிய விளக்கம் தெரியுமா?ரோம சாம்ராஜ்ய சட்ட நியதியின்படி, மிகக்கொடிய குற்றவாளிகளுக்குத் தான் சிலுவையில் அறையும் தண்டனையை வழங்குவர். சிலுவையின் <உச்சியில் அவன் செய்த குற்றத்தின் சுருக்கத்தை எழுதி, பார்க்கிற யாவரும் வாசித்தறிந்து அவனை இகழ்ந்து நிந்திக்கும் பொருட்டு அதையும் [...]
""நல்ல போராட்டத்தைப் போராடினேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்'' (2தீமோ.4:7)நான்கு திருடர்கள் ஒரு மாலை வேளையில், ஒரு பாதையின் வழியாக வரும்போது, வழியில் படுத்திருந்த ஒருவன் மேல் கால் இடறி கீழே விழுந்தார்கள். மரக்கட்டையை வழியில் போட்டு வைத்திருக்கிறார்களே என்றான் ஒருவன். அதைக் கேட்ட அந்த வழிப்போக்கனுக்கு கோபம் வந்தது. ""யோவ், என்னை மரக்கட்டை என்றா சொல்லுகிறாய்? [...]
""கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்'' (சங்.128:1)- பைபிள்தமிழ்நாடு தேவ சங்க சபைகளின் செயலாளர் கங்கை. ஸ்டேன்லி மாணிக்கராஜ் தன்னுடைய பிரசங்க உரையில் ஒரு சம்பவத்தை கூறி விளக்கினார்.ஒரு சபையில் வயதான போதகர் இருந்தார். அவருடைய பேச்சை மக்கள் புரிந்து கொள்ள சிரமமாக இருந்தது கண்டு, நிர்வாகக் குழுவினர் அந்த சபைக்கு வாலிப போதகரை [...]
""கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் (மத்தேயு7:7) என்கிறார் இயேசுநாதர்.ஒரு குறிப்பிட்ட பொருள் வேண்டும், நோய்களில் இருந்து விடுதலை வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லாத மனிதர்களே இல்லை. ""நீங்கள் என்ன தேவையிருந்தாலும் அதைக் கேளுங்கள், அப்பொழுது பெற்றுக்கொள்வீர்கள்,'' என்று அவர் சொல்கிறார்.இந்த வேத வசனத்தைக் கவனமாக வாசிக்கும்பொழுது, ""நமக்கு [...]
முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த இயேசு கிறிஸ்துவின் சீடர்கள், "இயேசுவை பிரதிபலிப்பவர்கள்' என்று அழைக்கப்பட்டார்கள். ஏனெனில், அவர்கள் தாங்கள் பின்பற்றிய தலைவரை தங்கள் மூலம் உலகத்திற்கு நினைப்பூட்டிக் கொண்டே இருந்தார்கள். அவர்களுடைய நடத்தையின் மூலம் அவர்கள் இயேசுகிறிஸ்துவோடு இருந்தவர்கள் என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தார்கள். இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றிய [...]
சிலருக்கு தீராத உடல்நலக் கோளாறு இருக்கும். எவ்வளவோ, ஸ்பெஷலிஸ்ட்களைப் பார்த்தும் பிரச்னை தீராது. ""எங்களால் ஆனதைப் பார்த்து விட்டோம், இனி ஆண்டவரிடம் ஜெபியுங்கள்,'' என்று டாக்டர்களே கூட சொல்லி விடுகிறார்கள். தீராத நோய்களை தீர்த்து வைக்கும் பெரிய மருத்துவர் ஆண்டவர் தான்.ஒரு சகோதரி ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் பார்க்காத வைத்தியமில்லை. நோய் குணமாக [...]
இயேசு கப்பர்நகூமுக்குத் தம் சீடர்களுடன் வந்தார். ஒரு வீட்டில் அவர்கள் தங்கினார்கள். அப்போது அவர் சீடர்களை நோக்கி, ""நீங்கள் வழியில் எதற்காகவோ தர்க்கம் பண்ணினீர்களே, என்ன விஷயம்?'' என்று கேட்டார். அவர்கள் தங்களுக்குள் எவன் பெரியவன் என்ற விவாதம் செய்திருந்தனர். ஆனால், அதை இயேசு முன் சொல்லத் தயங்கினார்கள். இதை ஊகித்தறிந்த இயேசு, ""எவனாகிலும் முதல்வனாயிருக்க [...]
பிரபலங்களின் பிள்ளைகள், சட்ட ஒழுங்குகளை மீறும் போது அவர்களை ஒன்றும் செய்ய முடிவிதில்லை. காரணம் அவருடைய தகப்பனாருக்குரிய மரியாதைக்காக! இதனால், இவர்களுடைய பிள்ளைகள் காப்பாற்றப்படுகின்றனர். சிலர், ""என் எப்பா பெயரை சொன்னாலே ஊர் ஜனங்களெல்லாரும் கை கட்டி நிற்பார்கள்,'' என்று பெருமையாக பேசுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு கேள்வி ""நீங்கள் என்றாவது [...]
அரசியல் தலைவர்களை தங்கள் தலைவராக ஏற்று, கொடி பிடித்து, கோஷம் போடும் ஜனங்கள் ஏராளம். சிலர் விளையாட்டு வீரர்களையும், சினிமா நடிகர்களையும் தங்கள் தலைவர்களாக வைத்துக் கொண்டுள்ளனர். ஏன் சிலர் இவர்களை தெய்வமாகக் கூட மாற்றிவிட்டனர். அவர்களை போலவே ஸ்டைல் செய்வது, ஆடைகள் அணிவது தற்காலத்தில் அதிகரித்து வருகிறது. பெற்றோர், படிப்பு, வேலை இவையெல்லாவற்றையும் விட இவர்களையே [...]
அந்தச்சிறிய சர்ச்சுக்கு வெளியே நின்று, ஒரு குட்டிப் பெண் அழுது கொண்டிருந்தாள். அவள் பெயர் "ஹட்டி மே வியாட்'. "ஏன் அழுகிறாய்?'' என்று அங்கு வந்த பாதிரியார் கேட்டார்.""உள்ளே இடமில்லை என்று கூறி என்னை உள்ளே விடமாட்டேன் என்கிறார்கள்'' என்று தேம்பினாள் அவள். ஏழ்மையின் காரணமாக, சமுதாயத்தில், பின்தங்கியவர்களின் குழந்தைகள் பள்ளிகளுக்குப் போகாமல் கெட்டலைந்து [...]