செல்வவளம் தரும் பிரசன்ன வெங்கடாஜலபதி, திருச்சி அருகிலுள்ள குணசீலத்தில் அருள்கிறார். இவரை அட்சய திரிதியை அன்று வழிபட்டு வரலாம்.தல வரலாறு:திருப்பதி வெங்கடாஜலபதியை குலதெய்வமாகக் கொண்ட குணசீலர் என்ற பக்தர், காவிரிக்கரையில் இருந்த தனது ஆஸ்ரமத்திலும் அவர் எழுந்தருள வேண்டுமென விரும்பினார். இதற்காக தவமிருந்தார். குணசீலரின் வேண்டுதலின்படி [...]
* நாம் செலுத்தும் பணிவுக்கும், மரியாதைக்கும் பிரதிபலனாக கடவுள் ஏதாவது நன்மை தர வேண்டும் என்று எதிர் பார்க்கும்வரை உண்மையான பக்தி ஏற்படாது.* கடைநிலையில் வாழும் மனிதனுக்கும் உணவு கிடைக்கவேண்டும். பசித்தவனுக்கு உணவுஅளிப்பது தான் என்னுடைய ஆன்மிகம். அதை தவிர மற்றதெல்லாம் பொய்யே.* அரசியல், சமுதாயத்தில் சுதந்திரத்தை நாம் பெற்றிருக்கலாம். ஆனால், ஆத்திரம், ஆசைஇவற்றுக்கு [...]
வேலையைப் போட்டு விட்டு கோயில், குளமென சுற்ற வேண்டுமா என்றால், தேவையில்லை என்று சிவபெருமானே சொல்லியிருக்கிறார். செய்கிற வேலையைத் தவமாகக் கருதி செய்ய வேண்டும், பணியே தெய்வம் என்று உணர்த்துகிறது சென்னை சவுகார்பேட்டை ஏகாம்பரேஸ்வரர் கோயில் வரலாறு.தல வரலாறு:பக்தர் ஒருவர், காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டுள்ள ஏகாம்பரேஸ்வரரை வணங்க அடிக்கடி [...]
மனிதன் வாழ்நாளில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய புனிததலம் திருக்கைலாயம். இது திபெத் பகுதியில் உள்ளது. நேபாள தலைநகர் காட்மாண்டு சென்று, சீன எல்லையிலுள்ள கோட்டாரி, ஜாங்மூ வழியாக கயிலாயத்தை அடையலாம்.இந்த மலை பூமியில் இருந்து 6638 மீ. உயரத்தில் உள்ளது. இதன் தென்முகம் நீலக்கல் போலவும், கிழக்கு முகம் ஸ்படிகம் போல வெண்மையாகவும், மேற்கு முகம் சிவப்புக் கல் போலவும், [...]
அகில உலகத்தையும் அரசாட்சி செய்யும் ராஜராஜேஸ்வரி மதுரை போக்குவரத்து நகரில் அருள்பாலிக்கிறாள். இவளையும் இவள் முன்புள்ள மகாமேருவையும் தரிசித்தால், பக்தர்களின் கோரிக்கை நிறைவேறும் என்பது நம்பிக்கை.தல வரலாறு:மனிதனுக்கு தேவை கல்வி, செல்வம், வீரம். இந்த மூன்றையும் வழங்கக்கூடிய சரஸ்வதி, லட்சுமி, துர்க்கையை ஒரே சன்னதியில் பிரதிஷ்டை செய்ய [...]
* அன்பால் மனதை அலங்கரித்தால், அகிலம் முழுவதையும் நம்மால் அரவணைக்க முடியும். * ஒருவரை மன்னிப்பதில் இருக்கும் இன்பம் பழிவாங்கும் உணர்வில் இருப்பதில்லை.* பாவத்திற்கெல்லாம் தாய் வறுமையே. வறியவனிடம் பாவ புண்ணியத்தைப் பற்றிய பேச்சு எடுபடாது.* "கண்ணுக்கு கண்; பல்லுக்குப் பல்' என்று பழிக்குப் பழி வாங்கும் குணம் நல்லதல்ல.* சோதனை நேரும் போது தான் மனிதன் பொறுமை, [...]
ஐந்து முகம் கொண்ட முருகனைப் பார்த்திருக்கிறீர்களா! கோவை மாவட்டம் அன்னூர் அருகிலுள்ள இரும்பறை ஓதிமலையாண்டவர் கோயிலில் இவரைக் காணலாம். திங்கள், வெள்ளி மட்டுமே இந்தக் கோயில் திறந்திருக்கும்.தல வரலாறு:படைப்பின் ஆதாரமான "ஓம்' என்ற பிரணவத்தின் பொருள் பிரம்மாவுக்குத் தெரியாததால், முருகன் அவரை சிறையில் அடைத்து விட்டார். தானே படைப்புத் தொழிலை [...]
திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மலைக்கோயில்களில் பவுர்ணமியன்று கிரிவலம் வருவதே நடைமுறை. கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோயிலில் அமாவாசையன்று கிரிவலம் வருகிறார்கள்.தல வரலாறு:கவுதம முனிவரிடம் சாபம் பெற்ற இந்திரன், விமோசனம் வேண்டி இப்பகுதியில் தவமிருந்தான். தனது வாகனமான ஐராவதம் யானையின் தந்தத்தால் மலையில் [...]
பூமி தேவியைக் காப்பதற்காக விஷ்ணுஎடுத்த அவதாரம் வராஹம். இவரை "ஞானபிரான்' என்று போற்றுவர். மதுரை அருகிலுள்ள அயிலாங்குடியில், லட்சுமி வராஹருக்கு கோயில் உள்ளது. இவரை வழிபடுவோருக்கு கல்வி, செல்வ வளம் பெருகும். தல வரலாறு:இரண்யாட்சன் என்ற அசுரன் பிரம்மாவை நோக்கி தவம் செய்து பல வரங்களைப் பெற்றான். தன் தவ வலிமையால் தேவர்களை எதிர்த்துப் [...]
மே 2., காஞ்சி காயாரோகணேஸ்வரர் கும்பாபிஷேகம்"காயமே இது பொய்யடா' என்று பாடுவதைக் கேட்டிருப்பீர்கள். ஆனால், ""எனது காயம் என்றும் நிலையானது, அதற்கு ஆதியுமில்லை, அந்தமும் இல்லை,'' என்று காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் காயாரோகணேஸ்வரராகிய சிவன், தன்னோடு பக்தர்களை ஐக்கியமாக்கிக் கொள்ள அழைக்கிறார். இது ஒருகுரு ஸ்தலம்.தல வரலாறு:புண்டரீக [...]
செலவே இல்லாமல், பிரம்மாண்டமான ஒரு கோயிலை மனமிருந்தால் கட்ட முடியும். எப்படி? காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலுக்கு வாருங்கள். இதுபற்றிய ரகசியத்தை மிகச்சுலபமாக அறிய முடியும்.தல வரலாறு:தொண்டை நாட்டிலுள்ள திருநின்றியூரில் வசித்தவர் பூசலார் என்னும் சிவபக்தர். இவர் வேதங்களைப் படித்து வித்தகரானார். நல்ல வழியில் சம்பாதித்த குறைந்த பொருளையும் [...]
ஏப்., 25 - சித்ரா பவுர்ணமி!சித்ரா பவுர்ணமியன்று மதுரை வைகை ஆற்றில் மஞ்சள் நிற தங்கக்குதிரையில் கள்ளழகர் இறங்குவார். அதற்கு முன்னதாகவே ஒரு பெருமாள் வெள்ளிக் குதிரையில் ஆற்றில் எழுந்தருளி, முன்னும் பின்னும் ஆடிக்கொண்டே வையாழி நடைபயில்வார். இவர் "அண்ணா வாரும்' என கள்ளழகரை ஆற்றிற்குள் அழைத்து வருவார். ஆற்றின் நடுமண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளும்போது, அவரை [...]
ஏப்., 24 சாய்பாபா நினைவு நாள்!* மனிதநேயம், நல்லொழுக்கம், கருணை ஆகிய குணங்கள் மனிதனுக்கு அவசியம். இதனைக் கற்றுத்தராத கல்வியால் ஒரு பயனும் இல்லை.* பிறருக்கு துன்பம் ஏற்படாத வகையில் உங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.* ஆரோக்கியமான வாழ்க்கையே உறுதியான வாழ்க்கை.* திட்டங்களை செயல்படுத்துவதில் வரைமுறையுடன் செயல்படாத நாடு ஒருபோதும் முன்னேற்றப் பாதையில் [...]
காலங்களும்,யுகங்களும் மாறியதால் மனிதநேயம் குறைந்து விட்டது. சரியான வாழ்க்கை பாதை தெரியாமல் மக்கள் தவிக்கும் சூழ்நிலை உள்ளது. ஆனால், காலத்தை கடந்த சித்த புருஷர்கள் அவ்வப்போது அவதாரம் செய்யத்தான் செய்கின்றனர். இவர்கள் மக்களை நல்வழிப்படுத்தி வாழ்க்கைப்பாதையை செம்மையாக்குகின்றனர். இந்த சித்தர்களை ஒரு சேர தரிசிக்க சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள மாடம்பாக்கம் ஸ்ரீ [...]
* ஆரோக்கியம், மகிழ்ச்சி, அமைதி, வெற்றி இவற்றை வழங்கவல்ல பேரொளியாக இறைவன் இருக்கிறான். அந்தப் பேரொளியை நோக்கி திரும்புங்கள். * உண்மையான வெற்றி என்பது உங்களை நீங்களே வெல்வதில் தான் இருக்கிறது. தன்னை வென்றவன், இயற்கையின் மீது கூட, ஆதிக்கம் செலுத்தும் ஆற்றலைப் பெறுகிறான். * வாழ்வில் சந்திக்கும் துன்பம், சோதனை இவற்றால் மனநிலை பாதிக்கும். இருந்தாலும் விடாமுயற்சியைக் [...]