குரு பெயர்ச்சியாகும் வேளையில் தமிழகத்திலுள்ள பிரசித்தி பெற்ற சில குரு தலங்கள் குறித்த தகவல்கள் தந்துள்ளோம். பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள், இத்தலங்களுக்குச் சென்று வருவது நன்மை தரும்.ஞானகுரு: நவக்கிரக தலங்களில் குருவுக்குரியது திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில். இங்கு குரு, சிவனை வழிபட்டுள்ளார். இவருக்கு "ஞான தெட்சிணாமூர்த்தி' [...]
ஒருவருக்கு திருமணம் நடப்பதை நிர்ணயிப்பவர் குரு. நீண்ட நாட்களாகத் திருமணம் தடைபடும் ஒருவரது ஜாதகத்தைப் பார்க்கும் ஜோதிடர், ""இவருக்கு வியாழ நோக்கம் வர இன்னும் இவ்வளவு காலம் இருக்கிறது. அதுவரை பொறுத்திருங்கள்,'' என்பார். குரு இருக்கும் ராசியை விட, அவர் பார்க்கும் ராசிகளுக்கே பலன் அதிகம். இதனையே குரு பார்க்க கோடி நன்மை என்பர். நவக்கிரகங்களில் குரு மட்டுமே [...]
அட்சய திரிதியை செல்வவளத்தை நமக்கு அருளும் நன்னாள். செல்வம் உடையவர்களை "லட்சுமி கடாட்சம்' பொருந்தியவர்கள் என்பார்கள். அந்த மகாலட்சுமி யார் வீட்டில் இருப்பாள் என்பதற்கு வாரியார் சுவாமிகள் அருமையான கதை ஒன்றைச் சொல்வார்.தமிழில் "சீலம்' என்ற வார்த்தை மிக முக்கியமானது. இதற்கு "ஒழுக்கம்' எனப் பொருள். "ஒழுக்கசீலன்' என்று சொல்வது கூட இதனால் தான். இந்திரன் கவுதமர் [...]
* கோயில் குளத்தில் உப்பு கரைப்பது ஏன்?ஆர்.வி.எஸ்.மணி, மதுரை.நோய் நொடிகள் குணமாக கோயிலுக்கு உப்பு காணிக்கை செலுத்துவது வழக்கம். குளத்தில் கரைப்பது பிற்காலத்தில் ஏற்பட்ட ஒன்று. இது முறையும் அல்ல. இதனால், நீர் வாழ் உயிரினங்களாகிய மீன் முதலியவற்றிற்கு பாதிப்பு ஏற்படும். எனவே, உப்பை தெப்பக்குளத்தில் கரைக்காமல் கோயிலில் காணிக்கையாக செலுத்துவதே சரியான முறை.** நாள் [...]
1. சங்கரர் பாடிய புகழ்பெற்ற லட்சுமி துதி.....கனகதாரா ஸ்தோத்திரம்2. லட்சுமி மீது ஸ்ரீஸ்துதி பாடியவர்....வேதாந்ததேசிகர்3. ஹரிபலம் என்று அழைக்கப்படும் மரம்....நெல்லி4. கடலில் அவதரித்ததால் லட்சுமிக்கு .... என பெயர்.அலைமகள்5. எட்டு திசைகளில் குபேரனுக்குரியது....வடக்கு6. லட்சுமி குபேரருக்குரிய நைவேத்யப் பொருள்....ஏலம், லவங்கம், கிராம்பு7. [...]
எட்டுவகை லட்சுமியால் ஏராளமான செல்வம்கொட்டுவகை நான் அறிந்தேன் கோலமயில் ஆனவளேவெற்றியுடன் நான் வாழ வேணும் ஆதி லெட்சுமியே வட்டமலர் மீதிருந்து வருவாய் இதுசமயம் அம்மா!பொருள்: ஆதிலட்சுமித்தாயே! எட்டுவகையான அஷ்டலட்சுமிகளால் வாழ்வில் செல்வ வளம் பெருகுவதை நான் அறிந்து கொண்டேன். அழகான மயில் போல விளங்குபவளே! நான் வாழ்வில் வெற்றியுடன் மகிழ்ச்சியாக வழிகாட்டுவாயாக. [...]
ஆடரப் பூணுடைத் தோல்பொடிப் பூசிற்றோர்வேடம் இருந்தவாறு அன்னே என்னும்வேடம் இருந்தவா கண்டு கண்டென் உள்ளம் வாடும் இது என்னே அன்னே என்னும்.பொருள்: ""அன்னையே! படம்எடுக்கும் பாம்பு, புலித்தோல் ஆடை, வெண்ணீறு பூசிய வேடம் ஆகியவை காட்டுவது என்ன?'' என்று என் மகள் கேட்கிறாள். "இந்த காட்சியைக் கண்டால் என் உள்ளம் ஏங்குகிறதே ஏன்?' என்றும் கேட்கிறாள்.குறிப்பு: [...]
கிருஷ்ணபட்சம், சுக்லபட்சம் என்றால் என்ன?எம்.பத்மாவதி, மதுரை"கிருஷ்ண' என்றால் கருப்பு. இது இருளைக் குறிக்கும். "சுக்ல' என்றால் வெண்மை. ஒளியைக் குறிக்கும். அமாவாசையின் மறுநாள் துவங்கி பிறைநிலா கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஒளிவீசும். பவுர்ணமியன்று முழுநிலவாக பிரகாசிக்கும். இரவில் வெண்மையாக ஒளிவீசும் வளர்பிறை நாட்களுக்கு "சுக்லபட்சம்' என்ற பெயர். "பட்சம்' [...]
1. வில்வம், துளசி ஆகிய இரண்டுக்கும் ........... இல்லைநிர்மால்ய தோஷம்( மீண்டும் மீண்டும் பூஜைக்கு பயன்படுத்தலாம்) 2. வினதையின் மகன் என்பதால் கருடனுக்கு ......என்றும் பெயர்வைநதேயன்3. முருகப்பெருமானை ............ தடவை வலம் வருவது சிறப்பு.64. ராம நாமத்தை ...... முறை சொன்னால் விஷ்ணு சகஸ்ரநாமம் (விஷ்ணுவின் ஆயிரம் நாமங்கள்) சொன்னதற்கு சமம்35. ராஜராஜ சோழனுக்காக [...]