அமாவாசையில் இருந்து மூன்றாம்நாள் வரும் திதி திரிதியை. இவற்றில் மிக உயர்ந்தது அட்சய திரிதியை. மூன்றாம் பிறை பார்த்தால் செல்வவளம் பெருகும். மூன்றாம் பிறை என்றால் என்ன தெரியுமா? சந்திரனுக்கு தட்சன் தன் 27 மகள்களையும் திருமணம் செய்து கொடுத்தார். அவர்களில் ரோகிணி, கார்த்திகை ஆகிய மனைவிகள் மீது மட்டும் அதிக பாசம் கொண்டார். இதனால், மனம் வருந்திய மற்ற மனைவிகள் தங்கள் [...]
பாடுபவர்களை "பாகவதர்' என்பர். இந்தச் சொல்லுக்கு "பக்தர்' "அடியவர்' "இறைவனை வழிபடுபவர்கள்' என்ற பொருள்களும் உண்டு. விஷ்ணுவின் பக்தனை "பாகவதன்' என்று குறிப்பிடுவது வழக்கம் . பாகவதர்களின் பெருமையை உணர்த்தும் ஆழ்வார் "தொண்டரடிப் பொடியாழ்வார்'. விப்ரநாராயணர் என்னும் இயற்பெயர் கொண்ட இவர், விஷ்ணுவின் பக்தராகி, பாகவதர்களின் பாதம் பட்ட மண்ணை வணங்கி, [...]
பரசுராமர் பிறந்த நாள் தந்தை சொல்லே மந்திரம் என்று வாழ்ந்து காட்டிய பரசுராமர் இந்நாளில் தான் அவதரித்தார். இவர் விஷ்ணுவின் தசாவதாரத்தில் ஆறாவது அவதாரம் [...]
வைகுண்ட வாசனான விஷ்ணுவை மகாலட்சுமி தங்கக்காசுகளால் பூஜிக்கும் நாள் அட்சயதிரிதியை. இந்நாளில் லட்சுமி படம் பொறித்த தங்க காசுகளை வாங்கினால் வீட்டில் செல்வ வளம் பெருகும். பெருமாள் கோயிலில் தாயார் சந்நிதியில் நெய் தீபமேற்றி வழிபட வாழ்வு [...]
புதுவீடு குடியேறுதல், வியாபாரம் தொடங்குதல், கல்வி,கலை பயில ஆரம்பித்தல் போன்ற சுபநிகழ்ச்சிகள் செய்வதும் அட்சயதிரிதியையில் மேற்கொள்வது சிறப்பு. அட்சய திரிதியை நாளுக்கு எந்த கிரக தோஷமும் கிடையாது. எனவே, இந்த நாள் அக்னி நட்சத்திர காலத்தில் வந்தாலும் கூட, சுபநிகழ்ச்சிகளை தடையின்றி [...]
உலக உயிர்களுக்கு படியளிக்கும் அம்பிகை அன்னபூரணியாக விளங்குகிறாள். அவள் அவதரித்தநாள் அட்சய திரிதியை. அவள் வைத்திருக்கும் அன்னபாத்திரம் அள்ள அள்ளக் குறையாது. இந்நாளில் செய்யும் தானம், தர்மம், யாகம் இவற்றுக்கு மிகுந்த புண்ணியம் உண்டு. அன்னதானம் அளித்தல், கோடையின் வெப்பம் தணிக்க தண்ணீர் பந்தல், நீர்மோர், பானகம் கொடுத்தல், குடை, காலணி வழங்குதல் ஆகியவையும் [...]
ஒடிசாவில் அட்சயதிரிதியை அன்று நிலத்தை உழுது விவசாயப்பணியை தொடங்குகின்றனர். பூரி ஜெகந்நாதர் கோயிலில் அட்சயதிரிதியை ரதயாத்திரை சிறப்பாக நடக்கும். வங்காளத்தில் வியாபாரிகள் காலத்தில் புதுக்கணக்குகளை இந்த நாளிலேயே தொடங்கி வந்தனர் (தற்போது லட்சுமி பூஜை மட்டும் செய்கின்றனர்) மத்தியபிரதேசம், உஜ்ஜயினியில் இந்நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்து மதம் மட்டுமில்லாமல், [...]
சித்திரையில் வரும் அட்சயதிரிதியை, புரட்டாசியில் வரும் விஜயதசமி ஆகிய இருநாட்களிலும் பாவ கிரகங்களின் ஆதிக்கமே கிடையாது. இந்த நாட்கள் சுபம் நடத்துவதற்கேற்ற முகூர்த்தநாட்கள். எந்த சுபவிஷயத்தையும் இந்நாளில் தொடங்கலாம். கன்னிப்பெண்கள் இந்தநாளில் நல்லகணவர் அமைய வேண்டி எருவை(காய்ந்த மாட்டுச்சாணம்) சந்திரனை நோக்கி தூவி மூன்றாம்பிறையை தரிசிக்க வேண்டும். வழிபாட்டை [...]
அட்சயதிரிதியை அன்று தொடங்கிய செயல்கள் இனிதே நிறைவேறும் என்பதற்கு மகாபாரதமே உதாரணம். வேதவியாசர், விநாயகரின் உதவியுடன் பாரதத்தை எழுதத்தொடங்கியது இன்று தான். "அட்சய' என்றால் "வளர்தல்'. அதனால் தான் இந்த காவியம் இலக்கியங்களிலேயே மிகவும் பெரியதாக உள்ளது. அன்று தொடங்கி இன்றுவரை அழியாத காவியமாயும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டது. இதனால் தான், அட்சய திரிதியை [...]
சித்திரை மாதம் அமாவாசையை ஒட்டிவரும் வளர்பிறை
மூன்றாவதுநாள் திரிதியை திதியே அட்சயதிரிதியையாகக் கொண்டாடப்படுகிறது.
"அக்ஷய' என்னும் சமஸ்கிருதச் சொல்லே தமிழில் "அட்சய' எனப்படுகிறது.
"க்ஷயம்' என்றால் குறைதல். "அக்ஷயம்' என்றால் வளருதல். யுகங்களில்
இரண்டாவதான திரேதாயுகம் தொடங்கிய நாள் இதுவே. இந்நாளில் தொடங்கும் செயல்கள்
குறையின்றி [...]
நல்ல விஷயங்களை உபதேசிப்பதில் மன்னன், மனைவி, நண்பன் ஆகிய மூன்று விதமான அணுகுமுறைகளை நம் முன்னோர்கள் பின்பற்றியுள்ளனர். "இது தான் சரி' "இப்படி தான் நடந்தாகணும்' என்று ஒன்றைச் சொன்னால், "நீ சொல்வது பெரிய வேதவாக்கோ? நான் அதை கட்டாயமாக கேட்டாகணுமோ' என்று எதிர்த்துப் பேசுபவர்களைப் பார்க்கிறோம். இதில் அவர்கள் குறிப்பிடும் "வேதம்'என்ற சொல் முக்கியமானது. ஒரு [...]
அஷ்டாக்ஷர மந்திரமான "ஓம் நமோ நாராயணாய' மிகவும் சக்திமிக்கது. இந்த நாமத்தின் மகிøயை ஆழ்வார்கள் பாசுரங்களில் தெளிவுபடுத்தியுள்ளனர். ஆண்டாள் திருப்பாவையின் முதல் பாசுரத்திலும், திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் பத்து பாசுரங்ளிலும் இதனைப் போற்றுகின்றனர். திருமாலின் அடியார்களுக்கு உணவிடுவதாக தன் மனைவி குமுதவல்லியிடம் வாக்குறுதி அளித்தார் நீலன் என்பவர். [...]
2007 பிப்ரவரியில், காஞ்சிபுரம் மகாபெரியவர் பிருந்தாவனத்தில் ஒரு வயதான சுமங்கலி அழுது கொண்டிருந்தார். அதைக் கண்ட சிலர், அவரிடம் அதற்கான காரணத்தைக் கேட்டார்கள். ""அழுகிறேனா! இது ஆனந்தக்கண்ணீர்,'' என்று பதிலளித்தார் அம்மையார். மலர்ந்த முகத்துடன் அவர் பேச ஆரம்பித்தார்.""எனது ஊர் திருவையாறு. 70 வயதாகிறது. எனக்கு ஐந்து வயதாக இருந்தபோது (1942), மகாபெரியவர் திருவையாறு [...]
உலகிலுள்ள எல்லா உயிர்களும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. புல் தன் வளர்ச்சிக்கு சூரிய ஒளியையும், காற்றையும் நாடுகிறது. பூமிக்கடியில் நீரைத்தேடி வேர் விடுகிறது. சமயம் வரும்போது ஆடு, மாடுகளுக்கு உணவாகிறது. தன் வளர்ச்சிக்கு பிறரிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்த புல், கடைசியாக தன்னையே பிறருக்கு கொடுக்கிறது. இதன்மூலம் "எடுப்பதெல்லாம் [...]
மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா என்று கேட்டால் பெரும்பாலும் "இல்லை' என்றே பதில் வருகிறது. காரணம் மனம் முழுக்க கெட்ட எண்ணங்களின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கிறது. மனதை சீர்படுத்த ஒரே வழி, ஆரோக்கியமான எண்ணங்களை மட்டும் நுழைய அனுமதிப்பது தான். ""மன இயக்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பு என் கைக்குள் இருக்கிறது,'' என்ற எண்ணம் எப்போதும் அடிமனதில் ஓடிக் கொண்டிருக்க [...]