குழந்தைகளை வளர்ப்பதுபற்றி இஸ்லாம் பல நல்ல கருத்துக்களை கூறுகிறது.* தாலாட்டு பாடும்போது, நபிகள் நாயகம் மற்றும் மகான்களை போற்றும்படியான பாடல்களை பாடவேண்டும். அதன்பிறகு அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் உள்ளிட்ட சொற்றொடர்களை கிளிப்பிள்ளைக்கு கற்றுத்தருவது போல கற்பிக்க வேண்டும். சமய சார்புடைய சொற்களை கற்றுத்தருவதால் மார்க்கப்பற்று ஏற்படும்.* குழந்தைகள் சற்று வளர்ந்த [...]
இஸ்லாம் நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் முதல்வர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.* முதன்முதலில் பேனாவால் எழுதியவர் இத்ரீஸ் (அலை) அவர்கள்.* விண்மீனை ஆய்வு செய்தவர்களில் முதன்மையானவரும் இத்ரீஸ் (அலை) அவர்களே.* ஆடையை தைக்கும் முறையை கண்டுபிடித்தவரும் இவர்தான்.* வியாபாரத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் ஷீத் (அலை) [...]
திருமணத்திற்கு பிறகு, ஒருவர் நிம்மதியாக காலம் கழிக்க வேண்டுமென்றால், எவ்வகை குணங்களைப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என அரபுக்கவிஞர் அப்துல்லா சுட்டிக்காட்டுகிறார்.* எந்த நேரமும் சண்டை போட்டுக்கொண்டும், பெருமூச்செறிந்து கொண்டும் இருத்தல்.* இடைவிடாமல் கைவலி, கால் வலி, தலை வலி என புலம்புதல்.* கணவர் எவ்வளவு தான் நல்ல முறையில் கவனித்தாலும் "உம்மால் என்ன சுகத்தைக் [...]
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் பொன்மொழிகளைக் கேளுங்கள்.* பேராசையை விட்டும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். பாவங்களைச் செய்வதற்குத் தூண்டுகோலாக இருப்பது பேராசையே.* செல்வந்தனாக வேண்டும் என்று பேராசை கொள்ளாதீர்கள். அது உங்களை நேர்மையை விட்டும் தூரமாக்கிவிடும்.* ஒருவர் செய்த உதவிக்கு கைமாறு செய்வது அவசியம். அவ்வாறு செய்ய முடியாவிட்டால் உதவி செய்தவரை புகழ்ந்து [...]
ஏக இறைவனாகிய அல்லாஹ்விடம் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டியதையும், அதன் பலனையும் தெரிந்து கொள்வோமா?பாவ மன்னிப்புக்கு...எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே அக்கிரமம் செய்து கொண்டோம். எங்களை நீ மன்னித்து கிருபை செய்வாயாக. எங்களுக்கு கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் இழப்புக்குரியவர்களாகி விடுவோம்.உயர்ந்த நன்மை [...]
மனிதர்களுக்கு எது நிஜமோ இல்லையோ, மரணம் நிச்சயம். மரணம் பற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்.* ஒருவர் ஹஜ்ஜை முடித்துக் கொண்டு திரும்பி வரும்போதும், ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றிருக்கும் நிலையிலும் மரணித்தால் அவர்களின் பாவங்களை விட்டும் பரிசுத்தமாகி விட்டார்கள்.* தர்மம் இறைவனின் கோபத்தைத் தணிப்பதுடன், கெட்ட மரணத்தை விட்டும் உங்களைப் [...]
முஸ்லிம்களின் ஐந்து கடமைகளில் உன்னதமானது "ஹஜ் எனும் இறுதிப் பயணம். உலகம் முழுக்க உள்ள முஸ்லிம்கள் அரேபிய மண்ணில் கூடி, அல்லாஹ்வை வணங்கி இறுதிக் கடமையை நிறைவேற்றி வருகிறார்கள். இதையொட்டி உலகம் முழுவதும் ஹஜ் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதை "பக்ரீத் என்றும் "தியாகத்திருநாள்' என்றும் சொல்கிறார்கள்.பக்ரி+ ஈத்= பக்ரீத் என்று இதனைப் பிரிக்கலாம். "பக்ரி என்றால் [...]
தலைப்பாகை கட்டினால் இரக்க சிந்தனை உண்டாகும் என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். தலைப்பாகை குறித்து அவர்கள் கூறியுள்ள கருத்துக்களைக் கேளுங்கள்.* தலைப்பாகை அணியுங்கள். அது உங்களுக்குள் உயர்குணங்களை வளர்ச்சிஅடையச் செய்யும்.* தலைப்பாகை அணியுங்கள். அதனால் உங்களுக்கு இரக்க சிந்தனை உண்டாகும்.* தலைப்பாகை கட்டுங்கள். வானவர்கள் தலைப்பாகை கட்டியிருக்கிறார்கள்.* [...]
ரமலான் மாதம் நோன்புக்குரிய மாதம். இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும் கருத்துக்களைக் கேளுங்கள்.* ரமலான் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். (ஷவ்வால்) பிறை பார்த்து நோன்பை நிறுத்துங்கள். (வானம்மேகத்தால் மறைக்கப்படுமானால்) எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்திக் கொள்ளுங்கள்.* ரமலான் மாதம் வந்துவிட்டால் வானங்களின் (ரஹ்மத்தின்) கதவுகளும், சொர்க்கத்தின் [...]
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ளவும், கடைபிடிக்கவும் அரிய தகவல்களை நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் அரிய பொன்மொழிகளைத் தந்திருக்கிறார்கள். கேட்போமா!* அல்லாஹ் மிகவும் கிருபையாளனாக இருக்கிறான். பிரார்த்தனை செய்யும் அடியார்களின் வேண்டுதலை, கைகளை வெறுங்கையாக விடுவதற்கு வெட்கப்படுகிறான்.* அடியார்களின் மீது அல்லாஹ் மிகவும் கருணை உள்ளவன். நோயாளி ஒருவனை நீங்கள் [...]
தவறு செய்தால் தண்டனை உறுதி என்பதை உணர்த்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்கள். அவற்றை அறிந்து கொள்வோமா!* எவராவது ஒருவர் ஒரு குற்றத்தை அறிந்தும் செய்வாரேயானால், அவர் அதை விட்டும் விடுபடாதவரை அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிக் கொண்டிருப்பார்.* அநியாயமான வாதங்களுக்கு துணை இருப்பவர் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாவார்.* ஒருவரிடம் இல்லாததை [...]
பெண் குழந்தைகள் பெற்றவர்களின் பெருமை குறித்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்.* எவருக்கு பெண் குழந்தைகள் இருக்கிறதோ அவருக்கும் நரக நெருப்பிற்கும் இடைவெளி 500 வருடத்தொலைவில் இருக்கிறது.* பெண்குழந்தை அல்லாஹ் நமக்களித்த அருங்கொடையாகும். எவர் பெண் குழந்தைகளிடம் மகிழ்ச்சி பெறுவாரோ, அவரோடு அல்லாஹ்வும் மகிழ்ச்சி பெறுவான்.* உங்கள் மனைவியின் பரகத் [...]
மக்களுக்கு ஏராளமான தேவை, விருப்பங்கள் இருக்கிறது. மக்கள் ஒருவரை ஒருவர் சார்ந்தே வாழ்கிறார்கள். ஒருவருக்கு பிறர் மூலம் பல தேவைகள் நிறைவேற வேண்டி இருக்கும். தனிமனிதனுக்கு மட்டுமல்ல, ஒரு ஊருக்கே பல தேவைகள் இருக்கிறது. அவற்றை அதிகாரிகளிடம் மனுவாகக் கொடுத்து நிறைவேற்றக் கூறுகிறோம். அதுபோல, உலகத்தின் தேவைகளையும், மறுமை தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள இறைவனைத் தொழ [...]
* ஒரு சமயம் உமர்பின் அப்துல் அஜீஸ் பிரசங்கம் செய்தார்கள். இறைவன் மக்களுக்கு அளித்திருக்கும் நன்மையை வரம்பிட்டுக் கூற முடியாது. அவன் செய்வது எல்லாம் நன்மையாகவே இருக்கிறது. அவன் உங்களுக்கு ஏதேனும் பேரருள் ஒன்றைக் கொடுத்திருக்கலாம். பின்னர், அதைப் பறித்துக் கொண்டு அதற்குப் பதிலாக வேறொரு அருளை அளிக்கலாம். அப்படி அளிக்கப்பட்டால், "பொறுமையாக இருந்தால் அது முந்திய [...]
பொறுமையாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து, குர்ஆன் சொல்லும் இனிய கருத்துக்களைக் கேட்போமா!* இறைவன் கூறுகிறான்: ""அந்தச் சமூகத்தவரில் சிலரை நாம் உண்டாக்கினோம். அவர்கள் பொறுமையை மேற்கொண்டு, எமது கட்டளைக்கு அடிபணிந்து நேர்வழியடைந்தார்கள்.* இன்னும் சொல்கிறான்: ""இஸ்ரவேலர்கள் பொறுமையைக் கைக்கொண்டதால் அவர்களை இறைவன் நல்லமுறையில் நடத்தினான்.* மீண்டும் [...]