உழைப்பே உயர்வு தரும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். அவர்கள் பிச்சை எடுப்பதை ஆதரிக்கவில்லை.எளியோர்க்கு உதவும் நற்குணம் படைத்தவர்கள் அண்ணல் நபிகள் நாயகம். இருப்பினும், உழைக்கும் தகுதியுள்ளவர்களை அவர்கள் பிச்சை எடுப்பதில் இருந்து தடுத்து நிறுத்தியுள்ளார்கள். ஒருமுறை, இளைஞன் ஒருவன் அவரிடம் பிச்சை கேட்டு வந்தான்.அவனிடம் [...]
கலீபா உமர்(ரலி) அவர்கள், இரவு வேளையில் நகர் வலம் வந்தார்கள். அப்போது மலைக்குன்றில் வழக்கத்துக்கு மாறாக வெளிச்சம் வந்தது. உமர் அவர்கள், அங்கே தனது குதிரையைச் செலுத்தினார்கள். ஒரு மனிதர் வருத்தமாக அமர்ந்திருந்தார். அவருக்கு வந்திருப்பது கலீபா (மன்னர்) என்ற விபரம் தெரியாது. அவரிடம் விசாரித்த போது, அவர்கள் பக்கத்து ஊருக்கு கிளம்பிச் சென்றபோது, கர்ப்பிணியான தன் மனைவிக்கு [...]
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்,""ஒருவர் பொய்யுரைக்கும் போது அவருடைய பேச்சிலிருந்து வருகின்ற நாற்றத்தைச் சகிக்க முடியாமல், வானவர் அவரிடமிருந்து மைல் தூரம் விலகிச் சென்று விடுகின்றார்,'' என்கிறார்.இந்த பொன்னான உரையில் எவ்வளவு பெரிய உண்மை புதைந்து கிடக்கிறது என்பதைக் கவனியுங்கள். வானவர்களின் நுகர்வுதிறன் மிகவும் நுட்பமானது. வேகமானது. ஆகவே தான் இறைவனின் அருளால், [...]
குழந்தைகள் நம் பேச்சைக் கேட்கவில்லை என்றால், ""ஏன் என் வயிற்றில் பிறந்தே! நீ நாசமா போக,'' என்று திட்டுகிறார்கள் பெற்றோர்கள். வார்த்தைகள் எல்லை மீறி சாபம் கொடுக்கிற நிலைக்குப் போய் விடுகிறது. ஆனால், அல்லாஹ்விடம் இறைஞ்சினால், அவர்கள் திருந்தி விடுவார்கள் என்பதற்கு அப்துல்லாஹ் இப்னு முபாரக் என்ற மார்க்க அறிஞரின் வாழ்க்கை ஒரு உதாரணம்.அப்துல்லாஹ் சிறுவயதில் மது, [...]
காதல் என்ற பெயரில் மோசம் போகிறார்கள் பெண்கள்.ஊர், உறவு கூட தெரியாமல், பணத்துக்காகவோ, பிற தேவைகளுக்காகவோ ஆண்களிடம் பெண்கள் பழகுவது அதிகமாகி விட்டது. இதற்கு "டிவி' முக்கிய காரணமாக இருக்கிறது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், பெண்கள் இப்படி நடப்பதைக் கடுமையாகக் கண்டிக்கிறார்கள்."அன்னியப் பெண்களை வீணே பார்த்து ஆசை கொள்ளும் ஆண்களின் மீதும், அன்னிய ஆண் மக்கள் தன்னைக் [...]
நீங்கள் மட்டும் பிறருக்கு நன்மை செய்தால் போதுமென நினைக்க வேண்டாம். பிறரையும் நன்மை செய்யத் தூண்டுவதன் மூலம், அவர்களை நரகத்தில் இருந்து காப்பாற்றிய பலன் உங்களுக்கு கிடைக்கும்.நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், இதை ஒரு அருமையான உதாரணத்துடன் விளக்குகிறார்கள். ""என்னுடைய உதாரணம் நெருப்பு மூட்டும் ஒரு மனிதனுக்கு ஒப்பானதாகும். அவன் மூட்டிய நெருப்பினால், அவனைச் சூழ்ந்த [...]
ஏக இறைவனாகிய அல்லாஹ்விடம் நாம் இவ்வாறு தொழுவோமா!பாவ மன்னிப்புக்கு...எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே அக்கிரமம் செய்து கொண்டோம். எங்களை நீ மன்னித்து கிருபை செய்வாயாக. எங்களுக்கு கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் இழப்புக்குரியவர்களாகி விடுவோம்.சிறப்பான நன்மை பெற...எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக. மேலும், நரக வேதனையிலிருந்தும் [...]
சமுதாயத்தில் அனாதைகளும், பெண்களும் "பலவீனர்' பிரிவில் இருக்கிறார்கள். இவர்களுடைய உரிமையைப் பறிக்கும் வகையில் நடக்கக்கூடாது. பலவீனமான ஒருவனால் தன்னுடைய தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துகொள்ள முடியாது. இவர்களை யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம். எந்த நேரத்திலும் இவர்கள் தாக்கப்படலாம். அப்படி தாக்கப்பட்டால் தட்டிக்கேட்க நாதி இருக்காது. எனவே, [...]
மக்களில் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு பார்க்கக்கூடாது. பணம் இருக்கிறதே என்பதற்காக, சக முஸ்லிம் ஏழையாக இருக்கும்பட்சத்தில் அவர்களின் வறுமையை கேலி செய்யக் கூடாது. இப்படி செய்தால் என்னாகும்?""முஃமின்களில் (மார்க்கநெறிகளைப் பின்பற்றுபவர்) ஆணோ, பெண்ணோ ஏழைகளாக இருக்கின்றார்கள் என்பதற்காக அவர்களை ஏளனமாகவும், கேவலமாகவும் எவர் நினைப்பார்களோ அல்லது அவர்கள் மீது [...]
பிற மதத்தினருடன் நல்லிணக்கமாக இருப்பதையே இஸ்லாம் விரும்புகிறது. குர்ஆன் ஹதீஸ் 8:61, ""எதிரிகள் எதிர்த்தால் நாமும் எதிர்க்கலாம். சமாதானமாக இருக்க விரும்பினால் நாமும் சமாதானமாகவே இருக்க வேண்டும்,'' என்கிறது. குர்ஆனின் இந்த வழிகாட்டலுக்கு அனை வரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். நாமாகவே தெருக்களில் இரவு நேர விளையாட்டுகளிலும், பயனில்லாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று [...]
புகைபிடிப்பது பல நோய்கள் உண்டாவதற்கு காரணமாக இருக்கிறது. இந்நோய் புகை பிடிப்பவரை மட்டுமின்றி, சுற்றியிருப்பவர்களையும் பாதிக்கிறது. புகை பிடிப்பது அருவருக்கத்தக்க பழக்கம் என்கிறது இஸ்லாம். கெட்ட வழக்கங்கள் குறித்து கூறும் குர்ஆன் வசனம் ஹதீஸ் 2:195,""உங்களை நீங்களே அழிவில் ஆழ்த்திக் கொள்ளாதீர்கள்'' என்கிறது. மற்றொரு ஹதீஸ் 4:29 ""உங்களை நீங்களே கொலை செய்ய [...]
ஒருமுறை, நபிகள்நாயகம்(ஸல்) அவர்களிடம், தைலம் ஷர்ரி (ரலி) என்ற தோழர் வந்தார்.""இறை தூதே! நாங்கள் குளிர்பிரதேசத்தில் வசிப்பவர்கள். குளிரைப் போக்க மதுவை அருந்துகிறோம்,'' என்றார். அவரிடம் நாயகம் அவர்கள், ""அந்த மதுவில் போதை இருக்கிறதா?'' என்றார்கள்."ஆம்' என பதிலளித்த தோழரிடம், ""அப்படியானால், நீங்கள் அதனைக் குடிக்கக்கூடாது,'' என்றார்கள்.""சரி... நான் [...]
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், தனது தோழர் ஒருவரிடம் சொன்னது இது.""அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். இந்த இறையச்சம், உமது மார்க்கம் முழுவதையும், உம் விவகாரங்கள் அனைத்தையும் ஆரோக்கியமான நிலையில் வைத்திருக்கும். திருக்குர்ஆன் ஓதுவதையும், இறைவனை நினைவு கூர்வதையும் வழக்கமாக்கிக் கொள்வீராக,''.ஆம்...இறைவனுக்கு பயந்து, குர்ஆன் சொல்லும் கருத்துக்களை பின்பற்றி வந்தால் வாழ்வில் [...]
ஒவ்வொரு மனிதனும் இறந்த பிறகு அல்லாஹ்வின் முன்னிலையில் நிறுத்தப்படுவான். அப்போது அவனிடம் ஐந்து கேள்விகள் கேட்கப்படும். இந்த ஐந்து கேள்விகளுக்கும் உரிய விடை சார்ந்த செயல்களை, அவன் வாழும் போதே செய்திருக்க வேண்டும். அந்த கேள்விகள் என்னென்ன தெரியுமா?1. உன் வாழ்க்கையை எந்தெந்த பணிகளில் செலவிட்டாய்?2. மார்க்கக்கல்வி பெற்றிருந்தால், அதன்படி நடந்து கொண்டாயா?3. பணத்தை [...]
ஒருமுறை நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள், தாயிப் நகருக்கு இஸ்லாத்தைப் பரப்பும் பணிக்காகச் சென்றார். அவ்வூர் தலைவனான அப்த்யலீல் என்பவனுக்கு இது பிடிக்கவில்லை. நாயகத்தைத் தாக்குவதற்கு அடியாட்களை அனுப்பி வைத்தான். அவர்கள் நாயகத்தின் மீது கல்லெறிந்து தாக்கினார்கள். ரத்தம் வழியவே, நாயகம் கீழே சாய்ந்தார்கள். ஆனாலும், மனஉறுதி தளராமல், "கர்ன் அத்தாலிப்' என்ற ஊருக்குச் சென்று [...]