Advertisement
    வீட்டில் குழந்தைகள் ஒருவருக்கொருவர் குற்றம் சொல்லிக்கொண்டும், ஒருவர் வைத்திருக்கும் பொருளை இன்னொருவர் கேட்டு அடம் பிடிப்பதுமாக சண்டை போடுவதை நாம் பார்த்திருப்போம். சண்டை போடுபவர்களை இறைவன் விரும்புவதில்லை என்பதை ஒரு சம்பவம் மூலம் அறியலாம்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருமகளார் பாத்திமா அம்மையார். இவர்களுக்கு ஹஸன், ஹுஸைன் என்ற மகன்கள் இருந்தார்கள். அவர்களை [...]
    ஒரு தோட்டத்தில் ஏராளமான தானியங்கள் சிதறிக்கிடந்தன. அதைப் பொறுக்க குருவிகள் கூட்டமாக வரும். அவற்றில் ஒரு குருவியை அடையாளம் கண்டு கொண்ட தோட்டக்காரர், அது இன்று வருமா என ஆவலுடன் காத்திருப்பார். மற்ற குருவிகளை விரட்டும் அவர், இந்தக் குருவியை மட்டும் ஏதும் செய்வதில்லை.அந்தக் குருவி மற்ற குருவிகளைப் போல் அல்லாமல், தினமும் ஆறே ஆறு தானியமணிகளை மட்டுமே எடுத்துச் செல்லும். [...]
    உமர்(ரலி) அவர்கள் தெருவில் வருகிறார் என்றாலே, ஊரே நடுங்கும். தலைவர்கள் கூட அவருக்கு அஞ்சுவார்கள். சிறுவர்கள் அவர் வருவதை அறிந்தால், விழுந்தடித்து ஓடி விடுவார்கள். அவர் மிகவும் நல்லவர். ஆனால், முன்கோபக்காரர். தவறுகளைக் கண்டிப்பவர். ஒருமுறை, அவர் தெருவில் வருவதை அறிந்த சிறுவர்கள், ""உமர் வருகிறார்! ஓடி விடலாம்,'' என்று சிட்டாய் பறந்தார்கள். ஆனால், ஒரு சிறுவன் மட்டும் [...]
    நல்லவர்கள் போல் நடிக்கும் சிலர், திடீரென துரோகம் செய்து விடுகிறார்கள். ஒரு இளைஞன் தன்னிடம் பழகிய நண்பனை வீட்டுக்கு அழைத்து வந்தான். அவன் நல்லவன் போல் நடித்து அந்தக் குடும்பத்தினரின் நம்பிக்கையைப் பெற்றான். ஒரு கட்டத்தில், அவன் வீட்டில் இருந்த பொருளைத் திருடி விட்டு ஓடிவிட்டான். இன்னொரு வீட்டில் ஒரு இளைஞன் தன் நண்பனை சமையலறை வரை சென்று வர அனுமதித்தான். அவனும் [...]
    பாத்திரம் செய்து விற்பதைத் தொழிலாகக் கொண்டவர் யாகூப் பின் லைஸ் என்ற இளைஞர். அவர் ஆட்சியாளர்கள் சுகபோகத்தில் திளைத்து, மக்களைக் கவனிக்காமல் இருந்ததைக் கண்டு உள்ளம் குமுறினார். எப்படியாவது அரசபதவியைக் கைப்பற்ற எண்ணினார். அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார். "பாத்திரக்காரன் எப்படி மன்னராக முடியும்? என்று அவரது முயற்சியை ஒரு முதியவர் கேலி செய்தார். யாகூப் அதைப் [...]
    ஷேர்ஷாஹ் சூரி என்ற மன்னர் இந்தியாவை ஆட்சி செய்த நேரம். அவரது மகன், ஒரு பெண்ணின் மீது வெற்றிலை பீடாவை விளையாட்டாக எறிந்தான். அவளது கணவருக்கு கடுமையான கோபம் ஏற்பட்டது. மன்னரிடம் வந்து, அவரது மகன் பற்றி முறையிட்டார். மன்னர், இளவரசனை அழைத்தார்.""இதோ பார்! நீ செய்திருப்பதை கடுமையான குற்றமாக எடுத்துக் கொள்கிறேன். இளவரசனாகிய நீயே குற்றம் செய்திருப்பது ஏற்கக்கூடியதல்ல. [...]
    உறவினர், நண்பர்கள் மட்டுமின்றி, முன்பின் தெரியாதவர்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்டால் கூட, அதை தட்டிக்கேட்க வேண்டும் என்கிறார் நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள். ஒருமுறை, நாயகம் அவர்களின் நண்பர் ஒருவர், ""அநியாயம் செய்யும் நபரை, நான் எப்படி தட்டிக்கேட்பது?'' எனக் கேட்டார். ""அநியாயம் செய்வதில் இருந்து அவரை தடுத்து நிறுத்துவது தான்,'' என்றார்கள் நாயகம்.அதாவது [...]
    ஈராக் நாட்டில், யூப்ரடீஸ் நதிக்கரையில் உள்ள நகரம் கூஃபா. அவ்வூரில் இறை மறுப்பாளர் ஒருவர் வசித்தார். அவர் இறை நம்பிக்கையாளர்களான முஸ்லிம்கள் மத்தியில் குழப்பம் விளைவிக்க எண்ணினார். அவ்வூரில் வசித்த அறிஞர்களிடம் மூன்று கேள்விகளைக் கேட்டார். அவர்களால், அதற்கான பதிலைச் சொல்ல முடியவில்லை. இதனால், அவருக்கு ஆணவம் அதிகரித்தது. அவ்வூரிலுள்ள சந்தைக்கு வந்த அவர், மக்கள் [...]
    நபிகள் நாயகத்தின் தோழர்களில் ஒருவர் சல்மான் பார்சி(ரலி) அவர்கள். இவர் "மத்யன்' நகரத்தின் ஆளுநராக நியமிக்கப் பட்டிருந்தார். பதவி பெரிதெனினும், சல்மான் பார்சி எளிய வாழ்வே நடத்தினார். சாப்பாட்டில் கூட மிகவும் எளிமை. அவர் அழைத்தால் பணியாளர்கள் ஓடி வருவார்கள் என்றாலும், தனக்கு தேவையான பொருட்களை தானே கடைக்குச் சென்று வாங்கி வருவார்.ஒருநாள் அவர் கடைத்தெருவுக்குச் [...]
    மக்காவில் வசித்தவர் முஸ்அப். பெரிய பணக்காரர். ஒருநாளுக்கு மூன்று முறை உடை மாற்றுபவர். தாய் மீது பாசம் கொண்டவர். அம்மாவும், தன் பிள்ளை மீது அதீத பாசம் வைத்திருந்தார். ஒருமுறை, நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இஸ்லாத்தை ஏற்குமாறு மக்களுக்கு விடுத்த அழைப்பு முஸ்அபுக்கு எட்டியது.""இறைவன் ஒருவனே! அவனை மட்டுமே வணங்கவேண்டும்,' 'என்ற செய்தி அவரைக் கவர்ந்தது. முஸ்அப் இஸ்லாத்தை [...]
    இப்போது ஒரு மனை வாங்கிப் போட்டு, அடுத்த வருஷமே விற்றால் கூட அதிகமான லாபம் கிடைக்கிறது. மண் பொன்னாகிறது என்று சொல்கிறார்கள்.இஸ்லாம் மண் பொன்னாவதைப் பற்றி வேறு மாதிரியாகச் சொல்கிறது. புளைலிப்னு இயால் என்பவர் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொள்ளாமல் கொள்ளைக்காரராக இருந்தார். ஒரு சமயம் ஒரு பெரியவர் குர்ஆன் வாசிப்பதை அவர் கேட்டார். அதிலுள்ள ஒரு வசனம் இயாலின் மனதில் புயலைக் [...]
    ஹஜ்ஜாஜ் என்ற கொடியவன் ஒரு பகுதியின் நிர்வாகியாக இருந்தான். தன்னை யார் எதிர்த்துப் பேசினாலும், அவர்களைக் கொல்லத் தயங்காதவன். அவனது கருத்துக்கு மறுகருத்து சொல்ல எல்லாருக்கும் பயம். அவன் ஒரு மாளிகை கட்டினான். அந்த ஆடம்பர மாளிகையை அவனுக்கு அஞ்சி, ""ஆகா...இதுபோல் மாளிகையை நாங்கள் பார்த்ததே இல்லையே!'' என்று புகழாரம் சூட்டினர் பலர். மேலும், தன் மாளிகைக்குள் யாராவது [...]
    மனிதன் தன் மனைவி மக்களுக்காகச் செலவிடும் பொற்காசும், இறைவழியில் போரிடுவதற்காக வாகனம் வாங்கிட அவன் செலவிடுகின்ற பொற்காசும், இறைவழியில் போராடுகின்ற தன் தோழர்களுக்காக அவன் செலவிடுகின்ற பொற்காசும் மிகச் சிறந்தவையாகும்'' என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, ""எந்த தர்மம் அதிக நற்கூலிக்குரியது?'' என்று [...]
    டில்லியை ஆட்சி செய்த முஸ்லிம் மன்னர் அலாவுதீன். இவர் பெரும் கொடுங்கோலர். தன் மாமனார் ஜலாலுதீனைக் கொலை செய்துவிட்டு ஆட்சிப்பொறுப்பைக் கைப்பற்றியவர். தனக்கு எதிராக யார் என்ன கருத்து சொன்னாலும், அவர்களின் தலையை வாங்கி விடுவார்.ஒருமுறை காஜி முகிஸுத்தீன் என்பவரிடம், ""நான் மன்னராவதற்கு முன் கிடைத்த பொருட்கள் அனைத்தும் எனக்குரியதா! அல்லது அரண்மனைக் கருவூலத்துக்கு [...]
    ஒரு சமயம் ஒரு காட்டரபி, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடன் முஸாஃபஹா செய்யும் போது, அவருடைய கரத்தை நாயகம் அவர்கள் முத்தமிட்டார்கள். இதனைக் கண்டு வியந்த தோழர்கள் காரணம் கேட்ட போது, "அவருடைய கரங்கள் உழைக்கும் கரங்கள். அதனால் முத்தமிட்டேன்' என்றார்கள்.உழைப்பின் பெருமையை இந்தக் கதையின் மூலமும் தெரிந்து கொள்ளலாம். நவாப்சாஹிப் என்பவருக்கு ஒரு மகன். சாஹிப் இருந்த காலத்தில் [...]
1 - 15 of 2 Pages
« First « Previous 1 2


Advertisement
Advertisement