சுபா என்ற இளைஞன் புத்தரைக் காண வந்திருந்தான். ""ஐயா! வணக்கம்! நீண்டநாளாகவே எனக்கொரு சந்தேகம். நீங்கள் தான் தெளிவு படுத்த வேண்டும்'' என்று வேண்டினான். ""கேளப்பா! சொல்கிறேன்!'' என்று வாஞ்சையோடு கேட்டார் புத்தர். ""மனிதர்கள் பலவிதமாக வாழ்கிறார்களே! சிலர் முகத்தைப் பார்த்தால் அழகு ததும்புகிறது. சிலரோ பார்க்கச் சகிக்காதவர்களாய் இருக்கிறார்கள். சிலரோ அறிவாளி! [...]