தினமலர் முதல் பக்கம்

காணலின் கலை நயம்

காணலின் கலை நயம்

உலகில் உள்ள அனைத்து ஒளி ஓவியக் கலைஞர்களையும் உலக ஒளி ஓவியக்கலை தின நாளுக்கு வரவேற்கிறோம்.


இன்று காட்சிவழி தொடர்பே மேலோங்கிய உலக மொழியாக உள்ளது. தமிழ், உலகின் மூத்த மொழி என்பதில் பெருமிதம் கொள்ளும் நாம், மொழி தடைகளை தாண்டி நிற்கும் உலக மொழியாகிய ஒளி ஓவியக் கலையை, தமிழில் ஆராய்வோம்.


நமது மதிப்புமிக்க வாசகர்களின் தேவைகள் மற்றும் தேடல்களை மனதில் வைத்து புதிய, தனித்துவமான விஷயங்களை எப்போதும் செய்ய தினமலர் முயற்சி செய்கிறது. இந்த உலக ஒளி ஓவியக்கலை தினத்தில், ஒளி ஓவியம் எடுப்பதில் உங்கள் படைப்புத் திறனை உயர்த்துவதற்கு உதவும் வகையில் தினமலர், இக்பால் முகமது மற்றும் லைட் அண்ட் லைஃப் அகாடமி ஆன்லைனோடு இணைந்துள்ளது . நாம் அனைவரும் அறிந்திருப்பது போல ஒளி ஓவியம் எடுப்பதற்கு இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன. ஒன்று, நம் கண் முன் இருக்கும் காட்சியில் எந்த பகுதியை படமாக்குவது என்பது. இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இதை நமக்குள் ஆழமாக தொடர்ந்து விதைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.


விரைவில் தினமலரில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை "பார்வையின் கலை" என்ற தலைப்பில், இந்தியாவின் முன்னணி தொழில்முறை ஒளி ஓவியக்கலைஞர்களின் ஒருவரான இக்பால் முகமது எழுதும், சிறப்பு தொகுப்பு, பிரத்தியேகமாக நம் வாசகர்களுக்காக மட்டும் வெளியிடப்படுகிறது. இவர் இந்தியாவின் முதல் தொழில்முறை புகைப்படக் கலை நிறுவனமான லைட் அண்ட் லைப் அகாடமியை நிறுவியவர் ஆவர்.


மற்றோரு அம்சம் உங்கள் பார்வையில் காண்பதை எப்படி படமாக்குவது என்பது.தினமலர் விரைவில் இந்த பகுதியில் அற்புதமான தொகுப்பை வழங்க உள்ளது. தொடர்ந்து இந்த இடத்தை பாருங்கள்.



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SILLA SEVANAN - K.Manthanai,இந்தியா
14-அக்-201817:49:04 IST Report Abuse
SILLA SEVANAN புதிய களத்தை ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளோம் . - சில்ல செவனன் , மந்தணை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X