Iyappn temple, ayapan koil news, Sabarimalai koil, sabari, iyapa tharisanam, Swamy Ayyappa Temple, Sabarimala Temple
தினமலர் முதல் பக்கம் » ஐயப்ப தரிசனம்


மாலை அணியும் முறை

சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்காக செல்லும் பக்தர்கள் ஒரு மண்டலம் (48 நாட்கள்) முன்னதாக அதாவது கார்த்திகை மாதம் முதல் தேதியே முத்திரை மாலையான ருத்ராட்சம். துளசிமணி இவைகளில் ஒன்றை குருநாதர் மூலம் கோயிலிலோ, வீட்டிலோ பூஜை செய்து அணிந்து கொள்ள வேண்டும். 

குருசாமி கிடைக்காவிட்டால் கோயில் சென்று, கடவுள் பாதத்தில் மாலையை வைத்து, அர்ச்சகரிடம் தட்சணை கொடுத்து, அர்ச்சனை செய்து ஐயப்பனையே குருவாக நினைத்து மாலையை தரிசித்துக் கொள்ளலாம்இருமுடி பொருட்கள்!

இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் முன்முடியில் வைத்துக் கொள்ள வேண்டிய பொருட்கள்: 

1. மஞ்சள் பொடி (குறைந்தது 100 கிராம்) (மலைநடை பகவதி, மஞ்சமாதாவுக்காக) 

2. சந்தன பாக்கெட் 

3. குங்கும பாக்கெட் 

4. நெய் தேங்காய் - 1 

5. சுதாதமான பசுவின் நெய் 

6. விடலை தேங்காய் - 5 (எரிமேலி, சபரிபீடம், சரம்குத்தி, பதிöட்டாம்படி ஏறும்போதும், இறங்கும்போதும்) 

7. பன்னீர் பாட்டில் (சிறியது) 

8. கற்பூர பாக்கெட் 

9. பச்சரிசி

  பின் முடியில் சமையல் செய்து சாப்பிடுவதற்கு தேவையான பொருட்களை குறைந்த அளவு எடுத்து செல்லலாம்.

கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்

1. மாலை அணிந்து கொள்ளும் பக்தர் மிக முக்கியமாக பிரம்மச்சரிய விரதம் இருக்க வேண்டும் 

2. காலை - மாலை இரு வேளைகளிலும் குளிர்ந்த நீரில் நீராடி ஐயப்பனை மனதார நினைத்து வழிபட வேண்டும் 

3. இறைச்சி உண்ணக்கூடாது. மது அருந்தக்கூடாது. பீடி, சிகரெட் போன்ற பொருட்களை அறவே நீக்கிவிட வேண்டும். 

4. கறுப்பு, நீலம், பச்சை, காவி போன்ற கலர் வேட்டிகளையும், கலர்சட்டைகளையும் அணிய வேண்டும். 

5. குருவிடம் அணிந்த மாலையை எக்காரணத்தை கொண்டும் குளிக்கும்போது கூட கழற்ற கூடாது. 

6. நமது நெருங்கிய ரத்த தொடர்பு உள்ள தாய், தந்தை, அக்காள், தங்கை, தம்பி, அண்ணன் போன்றவர்களின் மரணம் ஏற்படுமாயின் குருசாமியிடம் சென்று மாலையை கழற்றிவிட்டுத்தான் துக்க காரியங்களில் கலந்து கொள்ள வேண்டும். 

7. மாலையை கழற்றிவிட்டால் அந்த ஆண்டு மலைக்கு செல்வதை விட்டுவிட வேண்டும் 

8. பெண்களின் சடங்கு நிகழ்ச்சிக்கோ, குழந்தை பிறந்த வீட்டுக்கோ செல்லக்கூடாது. 

9. பெண்கள் மாதவிடாய் ஆரம்பித்து 7 நாட்கள் சென்ற பின்னர்தான் அவர்களிடம் உணவு சாப்பிட வேண்டும். 

10. மாலை அணிந்த எந்த பக்தன் வீட்டிலும் சாப்பிடலாம். மற்றவர்கள் வீட்டில் சாப்பிடக்கூடாது. பால், பழம் கொடுத்தால் சாப்பிடலாம்

வழி தேவைக்கு...

வழிதேவைக்கு ஜோல்னா பையில் மறக்காலம் எடுத்து செல்ல வேண்டியவை. 

பேட்டரி லைட் டூத் பேஸ்ட், பிரஷ், திருநீறு, சந்தனம், குங்குமம், மாற்றுவேஷ்டி, கற்பூரம், சாம்பிராணி, மெழுகுவர்த்தி, சட்டை, துண்டு, மழைக்காக பிளாஸ்டிக் பேப்பர் சின்னகத்தி, டம்ளர், தண்ணீர் பாட்டில், ஸ்வெட்டர், மப்ளர், தீப்பெட்டி, திருவிளக்கு, திரிநூல், நெய். இருமுடி தாங்கி செல்லும்போதும், வழியில் உபயோகிக்கவும் ஒரு கம்பளம் ஒரு விரிப்பு அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும்.

ஐயப்பனுக்கு சாஸ்தா என ஏன் பெயர் வந்தது?

சாஸ்தா என்ற சொல் தற்போது தென்மாவட்ட மக்களால் சாத்தா என்று அழைக்கப்படுகிறது. சாத்து என்றால் கூட்டம் என பொருள். ஐயப்பன் கோயிலுக்கு வருபவர்கள் தனித்து வர முடியாது. கூட்டமாகத்தான் வரமுடியும். கூட்டமாக வந்து வணங்குவதால் இவர் சாஸ்தா என அழைக்கப்பட்டார்.   

ஒரு காலத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 60 முதல் 70 பேர் வரை மட்டுமே சென்றார்கள். இப்போது செல்வதைப் போல லட்சக்கணக்கில் பக்தர்கள் அங்கு சென்றதில்லை. அப்படி செல்லும்போது கோடரி, ஈட்டி முதலிய ஆயுதங்களை எடுத்துச் செல்வார்கள்.   

அப்படி சென்றாலும்கூட மிருகங்களிடம் சிக்கி பலரும் இறந்துவிடுவதுண்டு. 15 பேர்தான் திரும்பி வருவார்கள். அப்படி திரும்பி வருபவர்களை பக்தியுடன் ஏற்று குருசாமியாக கொள்ளும் வழக்கம் பழங்காலத்தில் ஏற்பட்டது.   

இப்போதும் ஐயப்ப சுவாமிகளுக்கு தலைமை ஏற்று செல்பவரை குருசாமி என்றுதான் அழைக்கிறார்கள்.நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனுக்கு காணிக்கையாய் கொடுக்க நெய் கொண்டு செல்வது காலம் காலமாய் இருந்து வருகிறது. இந்த வழக்கம் ஏன் ஏற்பட்டது தெரியுமா?   

ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை பந்தளமகாராஜா ராஜசேகரன் ஐயப்பனை விட்டு பிரிந்து செல்லும் காலம் வந்தது. ஐயப்பன் பிரியும் நேரத்தில் மணிகண்டா, நீ காட்டுக்குள் குடியிருக்கப் போவதாய் சொல்கிறாய். அங்கே மலைகளைக் கடந்து வரவேண்டும். அவை சாதாரண மலையல்ல. வயதான நான் உன்னைக் காண எப்படி வருவேன் என்றார்.   

அதற்கு மணிகண்டன் உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டும். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்து விடலாம் என அருள்பாலித்தார். அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனைக் காண பந்தளராஜா மலைக்குச் செல்வார்.மகனை வெறுங்கையோடா பார்க்கச் செல்ல முடியும். அவனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டாமா? என்ன கொண்டு செல்வது என யோசித்தார். நெய் இலகுவில் கெட்டு போகாத ஒன்று.   

எனவே நெய்யில் செய்த பலகாரங்களை கொண்டு செல்வார். மேலும் தனி நெய்யை தேங்காய்க்குள் ஊற்றி கொண்டு சென்றால் இன்னும் பல நாள் கெடாமல் இருக்கும். ஐயப்பனைக் காணப் செல்வதென்றால் எளிதான காரியமா? இன்று போல அன்று பஸ், ரயிலெல்லாம் கிடையாதே! எனவே பந்தளத்திலிருந்து நடந்தே மலை ஏறுவார். மலையை அடைய பல நாட்களாகும்.எனவே கெட்டுப் போகாத நெய்யை எடுத்துச் செல்லும் வழக்கம் உருவானது. இருமுடிகட்டில் முக்கியமானது நெய் தேங்காய்தான். அத்துடன் ஐயப்பன் அரண்மனையில் இருந்த போது அணிந்த நகைகளையும் எடுத்துச் சென்ற பழக்கம் நாளடைவில் உருவானது. அது இப்போது பெரும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று கருடன் வழிகாட்டுவது விசேஷ அம்சம். வயதான அவர் மலை ஏற முடியாமல் ஐயோ அப்பா என்று சொல்லியபடியே பல இடங்களில் உட்கார்ந்தும் விடுவார். இந்தச் சொற்களே திரிந்து ஐயப்பன் என ஆனதாகவும் சொல்லப்படுவதுண்டு.ஐயப்பனின் முதல் தலம்

மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை, பிரம்மாந்திரம் என்ற 7 வகை நிலையைப் பற்றி பலரும் அறிந்திருக்க நியாயமில்லை. ஒரு மனிதனை எடுத்துக் கொண்டால் அவனது மூலாதாரம்... கால்கள்.. சுவாதிஷ்டானம் இடுப்பு, மணிபூரகம் - வயிறு, அனாகதம்- பிறப்புறுப்பு, விசுத்தி - மனம், ஆக்ஞை - பிடரி, பிரம்மாந்திரம் - தலை ஆக 7 வகை நிலையில் மனிதனின் உடலமைப்பு உள்ளது. சிவனை எடுத்தக் கொண்டால் அவரது மூலாதாரம் - திருவாரூர். சுவாதிஷ்டானம் - திருவானைக்காவல், மணிபூரகம் - திருவண்ணாமலை, அனாகதம் - சிதம்பரம், விசுத்தி - காளத்தி, ஆக்ஞை - காசி, பிரம்மாந்திரம் - கைலாசம்.   

அதுபோல தர்மசாஸ்தா எனப்படும் ஐயப்பனுக்கு மூலாதாரம் - பாபநாசம் சொரிமுத்தையன் கோயில். சுவாதிஷ்டானம் - அச்சன் கோயில், மணிபூரகம் - ஆரியங்காவு, அனாகதம் - குளத்துப்புழை, விசுத்தி - பந்தளம், ஆக்ஞை - சபரிமலை, பிரம்மாந்திரம் - காந்தமலை. இந்த வகையில் சபரிமலை சாஸ்தாவுக்கு முதல் முதலில் கோயில் தோன்றியதாக கூறப்படுவது பாபாநசத்திலுள்ள சொரிமுத்தையனார் கோயில் ஆகும்.   

தர்ம சாஸ்தாவான ஐயப்பனே இங்கு சொரிமுத்தைய்யனார் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இங்கு செல்வது முன்னொரு காலத்தில் மிகவும் கடினமானதாக இருந்தது. பொதிகை மலைக்காடுகளில், வனவிலங்குகள் ஏராளமாக வசிக்கும் காட்டுப்பகுதியில் தாமிரபரணி ஆற்றின் நடுவே இந்தக் கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆடி அமாவாசை அன்று இங்கு நடக்கும் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.தாமிரபரணியில் நீராடி இந்த ஐயனை வழிபட்டால் எப்படிப்பட்ட பாவமும் விலகும் என்பது ஐதீகம். இதுகோயில் மட்டுமல்ல. மிகச்சிறந்த சுற்றுலாத்தலமும் ஆகும்.நமஸ்கார ஸ்லோகம் ஸ்ரீ சாஸ்தா பஞ்ச ரத்தினம்

ஒவ்வொரு ஸ்லோகத்தையும் கூறி சுவாமியே சரணம்மய்யா என்று சொல்லி நமஸ்காரம் செய்ய வேண்டும். 

1.லோக வீரம் மஹா பூஜ்யம் ஸர்வ ரஹாகரம் விபும்

பார்வதி ஹ்ருதயானந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் (சுவாமியே சரணம் ஐயப்பா) 

2. விப்ர பூஜ்யம் விச்வ வந்த்யம் விஷ்ணு சம்போப்ரியம் ஸுதம்

ஷிப்ர ப்ரசாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் (சுவாமியே சரணம் ஐயப்பா) 

3. மத்த மாதங்க கமனம் காருண்யாம் ருத பூரிதம்

ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் (சுவாமியே சரணம் ஐயப்பா) 

4. அஸ்மத் குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு வினாஸனம்

அஸ்மத் இஷ்ட ப்ரதாதாரம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் (சுவாமியே சரணம் ஐயப்பா) 

5. பாண்டிச்யேச வம்ச திலகம் கேரள கேளி விக்ரஹம்

ஆர்த்தத் ராண பரம தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் (சுவாமியே சரணம் ஐயப்பா) 

6. த்ரியம்பக புராதீசம் ககணாதீப சமன் விரதம்

கஜாடுமஹம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம். (சுவாமியே சரணம் ஐயப்பா) 

7. சிவ வீர்ய சமுத் பூதம் ஸ்ரீ நிவாச தானூர்த் பவம்

சிகியா ஹானுஜம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் (சுவாமியே சரணம் ஐயப்பா) 

மாலை அணியும் மந்திரம்

ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குருமுத்ராம் நமாம் யஹம் 

வன முத்ராம் சுக்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம் யஹம் 

சா;தமுத்ராம் சத்தியமுத்ராம் வருதுமுத்ராம் நமாம் யஹம் 

சபர்யாஸ்ரம சத்யேன முத்ராம் பாது ஸதாபிமே 

குருதக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரினே - 

சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயா யஹம் 

சின் முத்ரா கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம் யஹம் 

சபர்யாசல முத்தராயை நமஸ்துப்யம் நமோ நவ;மாலை கழற்றும் மந்திரம்

அபூர்வ சாலரோஹ - திவ்ய தரிசன காரிணே 

சாஸ்த்ரு முத்ராத் மகாதேவ - வேஹமே விரத விமோசனம்.ஐயப்பன் 18 படி தெய்வங்கள்1. விநாயகர் 

2. சிவன் 

3. பார்வதி 

4. முருகன் 

5. பிரம்மா 

6. விஷ்ணு 

7. ரங்கநாதன் 

8. காளி 

9. எமன் 

10. சூரியன் 

11. சந்திரன் 

12. செவ்வாய் 

13. புதன் 

14. குரு 

15. சுக்கிரன் 

16. சனி 

17. ராகு 

18. கேது


Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement