வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
படிக்காத சாதாரண பாமரனிடம் இன்றைக்கு இருக்கும் துடிப்பும், வேகமும், மனிதாபிமானமும் இன்றைய அரசியல் தலைவர்களிடம் இருப்பதேயில்லை. அரசியல் என்பதே எதையும் எதிர் பார்க்காமல் தேசத்தை காப்பாற்றவும், முன்னேற்றவும் மட்டுமே. ஆனால் இன்று ஒட்டு மொத்த தேசமே குடிபோதையில் தன்னை தானே அழித்து கொண்டிருக்கும் போது பூரண மது விலக்கை கொண்டு வருவதில் என்ன கேடு வந்து விட்டதென்றே தெரியவில்லை. பள்ளிக்கூடங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் இணையானதொன்றாக இன்று மதுக்கடைகள் பெருகிவிட்டது. மக்கள் தவறான வழியில் செல்வதற்கு என்னவெல்லாம் சந்தர்பத்தையும், வாய்ப்பையும் உருவாக்க முடியுமோ அதையெல்லாம் என்றோ இந்த இந்திய அரசாங்கம் செய்து முடித்து விட்டது. குழந்தை பசிக்காக பலமணிநேரம் அம்மாவை பார்த்து அழுவதற்கும், தன் தேவைக்காக மக்கள் அரசிடம் கெஞ்சுவதர்க்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. மக்கள் எதிரெதிர் திசையில் நிற்பதாலேயே வேண்டியதை கேட்டு பெற முடிவதில்லை. மக்கள் ஒட்டு மொத்தமாக ஒன்று சேர்ந்து எதிர்ப்பை காட்டினால் அரசாங்கம் மது கடைகளை மூடியே தீர வேண்டும். இந்த கருத்தை படித்து கொண்டிருப்பவர்களில் உங்களில் எத்தனை பேர் போதை பழக்கம் உள்ளவர்கள் என்று உங்களுக்கே தெரியும். வருங்கால இந்தியாவில் உங்கள் மகனும், மகளும் இருக்கிறார்கள் என்பதை மனதில் வைத்து கொண்டாவது இந்த கருமத்தை உடனே விட்டொழியுங்கள்.
மதுகடைகளை ஒழிக்க இரண்டே வழி. ஒன்று அதை இழுத்து மூட எதிர்ப்பை காட்டவும் அல்லது மது கடை பக்கம் போவதை குறைத்து அதை நஷ்டத்திற்கு கொண்டு போக வேண்டும்.
"மக்களால் தான், மக்களுக்காகதான் மத்திய அரசும், மாநில அரசும்". - ஜெய்ஹிந்த்.
ஞானதேசிகன் முதலில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மதுக்கடைகளை மூட உத்தரவிடுமாறு சோனியாவை வலியுறுத்திப் போராடட்டும் . அதன் பிறகு தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தட்டும். இல்லையேல் காங்கிரசை விட்டு வெளியேறி புதுக் கட்சி அல்லது பொதுநல அமைப்பு ஏதேனும் ஒன்றை ஆரம்பித்து அதன் சார்பில் தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தட்டும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.