பாரம்பரிய சின்ன பாதுகாப்பு

 

தமிழக அரசின் முயற்சியால் சென்னை மாநகரின் பல பாரம்பரிய கட்டடங்கள் புதுப்பொலிவு பெற்று வருகின்றன. அவற்றில் தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுவலகமும் ஒன்று.

தற்போது காவல்துறை தலைமை அலுவலகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மிளிர்கின்றது. புதிய கட்டடமும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பழைய கட்டடத்தின் பாணியிலேயே கட்டப்பட்டுள்ளது. பழமையையும் பாரம்பரியத்தை பேணிகாத்து வருகிறது சென்னை மாநகரம் என்பதை இது நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது.

கடற்கரை சாலையில் உள்ள நேப்பியர் பாலத்தை மேம்படுத்தும் வகையில் அதை போலவே புதிதாக இரண்டாவது நேப்பியர் பாலமும் அமைக்கப்பட்டது. இரண்டும் ஒரே மாதிரி தோற்றம் அளிப்பது சென்னை மாநகர மக்களின் மனதை கவர்ந்துள்ளது.

சென்னையில் உள்ள பாரம்பரியம் மிக்க செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் வெளிப்புறம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காண்போர் மனதை கொள்ளை கொள்கிறது. சென்னை கன்னிமாரா நூலகத்தின் பழைமையான கட்டடமும், 2007 ஆம் ஆண்டு பழையவடிவமைப்பு மாறாமல் புதிப்பிக்கப்பட்டது. மேலும் கடந்த சில ஆண்டுகளாவே சென்னையில் உள்ள மே தின பூங்கா, மை லேடி பூங்கா, பனகல் பார்க், டாக்டர் நடேசன் பூங்கா போன்ற அனைத்து பூங்காக்களும் புதுப்பிக்கப்பட்டு சென்னையை பசுமையாக்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது.

சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள நடைபாதை, புல்வெளி போன்ற பகுதிகள் அழகுபடுத்தப்பட்டுள்ளதும் காண்போரை மகிழ்விக்கின்றன. இதைபோன்ற சென்னை மாநகரத்தின் பழைமையான பாரம்பரியமிக்க நினைவு சின்னங்கள், கட்டடங்கள், சிலைகள் போன்றவற்றை தொடர்ந்து பராமரிக்கவும், பாதுகாக்கவும், பேணிக்காக்கவும் சென்னை பாரம்பரிய சின்னங்களுக்கான ஒரு பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்பது சென்னை மக்களின் நீண்ட கால கோரிக்கை.

 
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)