முத்துசுவாமி தீட்சிதர்

 

மதராசபட்டினம் என்றதுமே முதலில் நம் நினைவுக்கு வருவது முத்துகிருஷ்ண முதலியாருடைய பெயர்தான். இவர்தான் மதராசபட்டினத்துப் பெரிய கோயிலைக் கட்டி அதை பராமரித்து வந்த தயாள குணம்படைத்தவர். ஆனால் ஆங்கிலேயர்களால் அக்கோவில் இடிக்கப்பட்டது.
கோவில்களை இடித்துவிட்ட ஆங்கிலேயர்கள் பின்னர் புதிதாக இரண்டு கோவில்களைக் கட்ட உதவ முன் வந்தனர். ஆங்கிலேயர்கள் கட்டுமான பணிக்கு 3,500 சவரன்களை நன்கொடையாக அளித்தனர். அப்போது, லார்ட் பிகட்டுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்த மணலி முத்துகிருஷ்ண முதலியார் தனது நிலங்களை தானமாகக் கொடுத்தார். 1700 ஆம் ஆண்டில் முத்துகிருஷ்ண முதலியார் தனது சொந்த செலவாக மற்ற செலவுகளை ஏற்றுக்கொண்டு கோவில்களை கட்டி முடித்தார். திருநீர்மலை கோவிலிருந்து விக்கிரகம் எடுத்து வந்து பிரதிஷ்டை செய்தார்.
1785 ஆம் ஆண்டில், மணலி முத்துகிருஷ்ண முதலியார் ராமஸ்வாமி தீட்சிதர் என்ற பாடகரை மதராசபட்டினத்திற்கு அழைத்து வந்தார். அவரின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து வந்தார். இவருடைய புதல்வர்கள் தான் முத்துசுவாமி, சின்னசுவாமி மற்றும் பாலுசுவாமி. இவர்களில் முத்துசுவாமி தீட்சிதர் பிற்காலத்தில் புகழ்பெற்ற சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராகத் திகழ்ந்தார்.
முத்துசுவாமி தீட்சிதர் 40 சமஸ்கிருத கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.
ஆங்கிலேயர்களிடம் தமக்கு இருந்த செல்வாக்கின் காரணமாக வெங்கடேச முதலியார் தீட்சிதரை தன்னுடன் கோட்டைக்கு அழைத்து செல்வார். அங்கு வாசிக்கப்படும் பேண்டு வாத்திய மூலமாகத் தான் வயலினை கர்நாடக இசையிலும் புகுத்தலாம் என்ற சிந்தனை தீட்சிதர் சகோதரர்களுக்கு உருவானது.
முத்துசுவாமி தீட்சிதர் வயலின் இசையை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தார். அதன்பிறகே 40 சமஸ்கிருத கீர்த்தனைகளை எழுதினார். அவர் எழுதிய 40 பாடல்கள் தான் இன்றும் "இங்கிலீஷ் நோட்ஸ்' என்று அழைக்கப்படுகின்றன.
முத்துகிருஷ்ண முதலியார் 1792 ஆம் ஆண்டில் காலமானார் எனினும் அவருடைய புதல்வர் வெங்கடகிருஷ்ண முதலியார் தீட்சிதர் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை தொடர்ந்து செய்தார்.

 

உங்கள் கருத்தை பதிவு செய்ய

(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)

பெயர் :

மின்னஞ்சல் :

இடம் (அ) நகரம் :

நாடு :

உங்கள் கருத்து :