வி.கனகசபைப் பிள்ளை

 

தமிழக சரித்திரத்தில் நீங்கா இடம் பிடித்தவர் கனகசபைப் பிள்ளை. சென்னை 1855ம் ஆண்டு விஸ்வநாத பிள்ளை என்பருக்கு மகனாகப் பிறந்தார். இவர் மதராசபட்டினத்தில் பி.ஏ., பட்டம் பெற்று சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். படித்து முடித்து வழக்கறிஞராக இருப்பதை நிராகரித்து விட்டு தமிழார்வத்தை முன்னிலையில் வைத்தார்.
கனகசபைப் பிள்ளை அரசு வேலையில் சேர்ந்து 'சூப்பரண்டெண்ட் ஆப் போஸ்ட் ஆபிஸ்' என்ற உயர் பதவியும் வகித்தார். அப்போது தான் அவர் பல இடங்களில் ஆய்வுகள் செய்ய முடிந்தது. அந்த ஆய்வின் விளைவாக 'Tamils Eighteen Hundred Years ago' என்ற சிறந்த நூலை ஆங்கிலத்தில் எழுதினார். இந்த நூல் மதராஸ் பல்கலைக்கழகத்தில் பாடமாக பல காலம் இருந்தது.
1904ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நூல் சரித்திர ஆசிரியர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. தமிழர்களின் 1800 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்க்கை முறையையும், கலாசார வழிகளையும் விவரிக்கும் நூலாக இது விளங்கியது.
இந்த நூல் முதலில் 16 அத்தியாயங்களாக, 1895லிருந்து 1901ம் ஆண்டு வரை ஆங்கிலத்தில் கட்டுரைகளாக மெட்ராஸ் ரிவியூ என்ற பத்திரிகையில் வெளிவந்தது. நூலின் பெயருக்கேற்ப ஆசிரியர் கி.பி.50லிருந்து, கி.பி., 150 வரையில் இருந்த தமிழகத்தின் நிலையை மிகவும் சீராக அலசியுள்ளார்.
முக்கியமாக, தமிழகத்து புவியியல், வெளிநாட்டு வணிகம், தமிழ் இனம், சோழர்கள், பாண்டியர்கள், சேரர்கள், சிற்றரசர்கள், சமூக நிலை, திருவள்ளுவரின் குறள், சிலப்பதிகாரக் கதை, மணிமேகலைக் கதை, தமிழ்க் காவியமும் ஆசிரியர்களும், ஆறுவகை தத்துவ முறைகள், மதம் முதலான தலைப்புகளில் எழுதப்பட்டமையால், எல்லாவிதங்களிலும் சிறந்த நூலாகக் கருதப்படுகிறது. தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

 

வாசகர் கருத்து (12)

ர Maharajan-nagercovil, இந்தியா

10/28/2012 4:40:01 PM IST

பாண்டச்டிக் தினமலர்

murugesan-bangalore, இந்தியா

10/16/2012 7:03:06 PM IST

இதை போல் கோவை மதுரை போன்ற நகரங்களை பற்றி தெரிவித்தால் நல்லது

கே.பி.சிவா -Sivaramapettai Tenkasi Taluk, இந்தியா

9/22/2012 12:33:10 PM IST

இந்த நூலை உயர் நிலை பள்ளிகளில் பாடமாக வைக்க வேண்டும். மேலும் கனக சபை பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை நடுநிலை பள்ளிகளில் பாடமாக வைக்க வேண்டும்.

கே.பி.SIVA-puducherry, இந்தியா

9/17/2012 10:19:27 AM IST

தமிழகத்தின் வரலாற்றை பறை சற்றும் இந்த நுலை தமிழில் படமாக வைக்க வேண்டும்.

காளிராஜ்.r-tirunelveli, இந்தியா

8/27/2012 11:48:09 AM IST

உண்மை தகவல்களை தரும் ஒரே நாளிதழ் தினமலர் தான் பழமையனா தகவல்களையும் படிப்பதற்கு உதவும் தினமலற்கு நன்றி நன்றி

காளிராஜ்.r-tirunelveli, இந்தியா

8/27/2012 11:34:21 AM IST

நல்ல கருத்துகளை கொடுத்ததுக்கு நன்றி தினமலற்கு

vengadessan-karaikal, இந்தியா

8/27/2012 8:25:50 AM IST

ஐ ஆம் happy டு செ தட், திஸ் இஸ் இன்போர்மடிவே அண்ட் எச்செல்லேன்ட் newspaper

உங்கள் கருத்தை பதிவு செய்ய

(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)

பெயர் :

மின்னஞ்சல் :

இடம் (அ) நகரம் :

நாடு :

உங்கள் கருத்து :