அன்னை இல்லம்

 

நடிகர் திலகம் சிவாஜியின் மகன்கள் தற்போது வசிக்கும் அன்னை இல்லத்தை, ஐ.சி.எஸ்., அதிகாரி ஜார்ஜ் டி.போக் என்பவர் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் கட்டினார். இருபதாம் நூற்றாண்டின் கலையம்சத்துடன் இந்த வீட்டின் முகப்பை ஜார்ஜ் போக் அமைத்தார். இவரின் நினைவாக அந்த வீட்டின் சாலைக்கு 'தெற்கு போக்' சாலை என, அப்போது பெயரிடப்பட்டது.
பின்னர் இந்த அன்னை இல்லத்தை குர்மா வெங்கட ரெட்டி நாயுடு என்பவர் வாங்கினார். அடுத்ததாக இந்த இல்லத்தை இஸ்லாமிய குடும்பம் ஒன்று வாங்கியது. அவர்களிடமிருந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1959ம் ஆண்டு இந்த வீட்டை வாங்கி 'அன்னை இல்லம்' என பெயரிட்டார்.
தற்போது இந்த அன்னை இல்லத்தில் சிவாஜியின் மகன்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நடிகர் திலகர் சிவாஜியின் நினைவாக விளங்கும் இந்த வீட்டை, அவரின் வாரிசுகள் பராமரித்து வருகின்றனர். சிவாஜியின் மறைவுக்கு பிறகு இந்த வீட்டின் சாலைக்கு 'சிவாஜி கணேசன் சாலை' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

 
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)