தன்வந்திரி இல்லம்

 

1932ம் ஆண்டு லட்சுமணசுவாமி முதலியார் என்பவர் கீழ்ப்பாக்கத்தில் தன்வந்திரி மாளிகையைக் கட்டினார். ராமசாமி, லட்சுமணசுவாமி முதலியார் ஆகியோர் இரட்டையர்கள். ராமசாமி முதலியார் வக்கீலாகவும், லட்சுமணசுவாமி முதலியார் மருத்துவராகவும் பணியாற்றினர்.
லட்சுமணசுவாமி முதலியார் சென்னை மருத்துவ கல்லூரியில், இந்தியாவின் சார்பில் முதல் பிரின்சிபாலாக பதவி வகித்தவர். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பெறுப்பேற்றார். இவர் மருத்துவ பணியில் சிறந்து விளங்கியதற்காக இந்திய அரசின் 'பத்ம விபூஷன்' விருதை பெற்றார். ராமசாமி முதலியார் வக்கீலாக இருந்து கொண்டு சமூக சேவை மற்றும் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். சென்னை மேல்சபையில் எம்.எல்.சி., பதவி வகித்துள்ளார்.
சென்னையில் மருத்துவ பணியாற்றி வந்த லட்சுமணசுவாமி முதலியார் தன்வந்திரி மாளிகையை கட்டினார். சகோதரர்கள் இருவரும் இந்த மாளிகையில் வசித்து வந்தனர். இடப்பற்றாக்குறை காரணமாக ராமசாமி முதலியார் வேறு இடத்துக்கு குடிபெயர்ந்தார். தற்போது ராமசாமி முதலியாரின் வாரிசுகள் இந்த மாளிகையின் உரிமையாளர்களாக உள்ளனர்.

 

வாசகர் கருத்து (2)

usha-Madurai, இந்தியா

12/6/2013 1:58:41 PM IST

இந்த பிரபலங்களை நினைக்கும் போது ஒரு குறள் நினைவிற்கு வருகிறது.

மணிகண்டன்.m-kumbakonam, இந்தியா

10/24/2012 7:03:16 PM IST

மெட்ராஸ் டே சூப்பர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய

(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)

பெயர் :

மின்னஞ்சல் :

இடம் (அ) நகரம் :

நாடு :

உங்கள் கருத்து :