பீச் ஹவுஸ்

 

மயிலாப்பூரில் உள்ள பீச் ஹவுஸ், தற்போது ராணி மேரி கல்லூரி வளாகமாக செயல்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் வக்கீல் பிலகிரி ஐயங்கார் பீச் ஹவுசில் வசித்தார். பின்னர் எஸ்.சுப்பிரமணிய ஐயர் என்ற மணி ஐயர் இந்த வீட்டுக்கு உரிமையாளரானார்.
மணி ஐயர் 1869ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டின் புகழ்பெற்ற முன்னணி வக்கீலாக இருந்தார். பின்னர் 1888ம் ஆண்டு அரசு வக்கீலானார். தனது திறமையால் படிப்படியாக வளர்ந்து 1891ம் ஆண்டு துணை நீதிபதி பொறுப்பேற்றார். பின்னர் 1895ம் ஆண்டு நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 1907ம் ஆண்டு வரை தலைமை நீதிபதியாக பணியாற்றிய இவர், பார்வை கோளாறு காரணமாக ஓய்வு பெற்றார். மணி ஐயர் இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராகவும், சென்னை பல்கலைக்கழகத்தின் செனட் சபையில் உறுப்பினராகவும் இருந்தார்.
மணி ஐயருக்கு பணிச்சுமை அதிகமாக இருந்த நேரத்தில் பீச் ஹவுஸ் அமைதியைத் தந்தது. அவர் வசித்த பீச் ஹவுஸ் அழகான பால்கனிகளுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. தற்போது பீச் ஹவுஸ் ராணி மேரி கல்லூரி வளாகமாக செயல்பட்டு வருகிறது.

 

வாசகர் கருத்து (24)

RAMALINGAM MANI-CHENNAI., இந்தியா

9/7/2012 7:39:26 PM IST

தினமலருக்கு நன்றி

FAHMITHAGOWSER-theni, இந்தியா

8/30/2012 4:46:05 PM IST

ஆம்... சென்னை. எனக்கு வாழ வழி தெரியாத ஒருகாலகட்டத்தில் ஒளிமயமான எதிர் காலத்தை காட்டிய சென்னை....... வாழ்த்துக்கள்

bhuvanaganesh wc-thiruvalangadu, இந்தியா

8/28/2012 5:43:24 PM IST

what a super colliaction. tanking to dinamalar

viswanathan-Boston, யூ.எஸ்.ஏ

8/25/2012 2:08:22 PM IST

பிலிகிரி ஐயங்கார் வசித்தது ஐஸ் ஹவுஸ்.தற்பொழுது விவேகனந்தர் இல்லம்

Suryaprakash-Chennai, இந்தியா

8/24/2012 9:33:13 AM IST

சென்னை ஒரு அழகான நகரம். ஆனால் சுத்தம் கிடையாது.

rambo-madharasapattinam, லிதுவேனியா

8/24/2012 9:17:01 AM IST

kuvam is the best place in chennai

உங்கள் கருத்தை பதிவு செய்ய

(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)

பெயர் :

மின்னஞ்சல் :

இடம் (அ) நகரம் :

நாடு :

உங்கள் கருத்து :