பென்ஸ் கார்டன்

 

1800ம் ஆண்டில் ஜான் டி மான்டி என்ற போர்த்துகீசிய வணிகர் சென்னைக்கு வந்தார். இந்தியாவில் அவர் மிகச்சிறந்த வணிகராக உயர்ந்தார். அவர் சென்னையில் மவுபிரே கார்டனுக்கு அருகில் 105 ஏக்கர் பரப்பளவில் ஒரு இடத்தை வாங்கினார். அங்கு தான் பென்ஸ் கார்டன் அமைக்கப்பட்டது. அந்த கட்டடம் தற்பொழுது அடையாறு ஆற்றுக்கு அருகில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலையில் அமைந்துள்ளது.
அந்த இடத்தில் அறக்கட்டளை அமைப்புகள், பள்ளிகள் ஆகியவற்றை ஜான் டி மான்டி தோற்றுவித்தார். பிற்காலத்தில் அந்த இடம் பல பாகங்களாக பிரிக்கப்பட்டது. அந்த இடத்தில் பாதிக்கு மேலாக, தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ள இடத்தில் நான்கு கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடங்கள் தற்பொழுது அரசின் பயணியர் விடுதியாக செயல்பட்டு வருகிறது.
இந்த இடத்தில் முதன்முதலில் கட்டப்பட்ட பழமையான கட்டடம் தான் பென்ஸ் கார்டன் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. மீதம் இருந்த இடங்களில் கார் தயாரிப்பு தொழிற்சாலை மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் என பென்ஸ் கார்டன் தற்போது அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளது.

 

வாசகர் கருத்து (0)

RAMALINGAM MANI-CHENNAI., இந்தியா

9/7/2012 7:38:03 PM IST

அந்த ஆங்கிலேயர் மனது தங்கமானது வாழ்க அவரது ஆன்மா .

உங்கள் கருத்தை பதிவு செய்ய

(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)

பெயர் :

மின்னஞ்சல் :

இடம் (அ) நகரம் :

நாடு :

உங்கள் கருத்து :