சுல்லிவன் கார்டன்ஸ்

 

1780ம் ஆண்டு அட்டர்னி ஜெர்னலாக இருந்தவர் பெஞ்சமின் சுல்லிவன், பின்னர் அவர் நீதிபதியாகவும் பணியாற்றினார். அவரால் கட்டப்பட்டது தான் சுல்லிவன் கார்டன்.
1840ம் ஆண்டு அப்போதைய சென்னை கமிட்டியால் கல்லூரி மற்றும் பள்ளிகள் கட்டுவதற்கு 20 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அந்த நிதியில் சுல்லிவன் கார்டனில் செயின்ட் எப்பாஸ் பள்ளி 1886ம் ஆண்டு கட்டப்பட்டது. சென்னை நகர வளர்ச்சியை கருத்தில் கொண்டு சுல்லிவன் கார்டனின் பெரும் பகுதி விற்பனை செய்யப்பட்டது. அந்த பகுதி சாலைக்கு சுல்லிவன் கார்டன் சாலை என பெயரிடப்பட்டது.
விற்பனை செய்யப்பட்ட பகுதி சிவசுவாமி அய்யர் என்பவரால் வாங்கப்பட்டது. அந்த இடத்தில் அய்யர் சுதர்மா என்ற மேன்ஷனை கட்டினார். பின்னர் அதை அனந்தராமகிருஷ்ணன் என்பவர் வாங்கி வியாபாரத்துக்காக பயன்படுத்தினார். பின்னர் சுல்லிவன் கார்டன் சாலைக்கு சிவசுவாமி அய்யர் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் ஆரம்பிக்கப்பட்ட செயின்ட் எப்பாஸ் பள்ளி இன்றும் நடந்து வருகிறது. பள்ளியின் பழமையான கட்டடம் சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்டு தற்பொழுது புதுப்பொலிவுடன் செயல்பட்டு வருகிறது.

 

உங்கள் கருத்தை பதிவு செய்ய

(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)

பெயர் :

மின்னஞ்சல் :

இடம் (அ) நகரம் :

நாடு :

உங்கள் கருத்து :