* கமலின் எண்ணமும், த்ரிஷாவின் யோசனையும் * மிட்டாய் படத்தில் கார்ட்டூன் சித்திரங்கள் * கேரள வரவு மித்ராவுக்கு லவ் ஹிஸ்ட்ரி ஸ்டார்ட் * அமீரிடம் விளக்கம் கேட்கும் கணித மேதை * வாரணம் ஆயிரம்- கொடைக்கானல் படங்களின் விமர்சனம் * கடும் உடற்பயிற்சி செய்கிறார் சினேகா * ஒரே நேரத்தில் 2 படங்களை இயக்கி நடிக்கும் நடிகர் * ஒரே படத்துக்கு 3 இசையமைப்பாளர்களின் இசை * ரவீனா டாண்டனின் சமூக அக்கறை * இசையமைப்பாளர்கள் மாற்றப்படும் மர்மம் : ஸ்பெஷல் ரிப்போர்ட் * சசிக்களின் விநியோக டீலிங் * கின்னசுக்கு போகும் பாபுகணேஷ் * திருமணம் பற்றி சல்மான் கருத்து * ஷில்பா ஷெட்டி 3 மாதம் ஓய்வு * இந்தி கஜினிக்கு 1250 பிரிண்ட் * மாடர்ன் பெண்களுக்கு சின்னத்திரை நித்யா அட்வைஸ் * குவாண்டம் ஆப் சோலஸ் பட விமர்சனம் * மாலையானால் மலையேறும் நடிகைகள் : ஸ்பெஷல் ரிப்போர்ட் * வாஸ்து‌‌வை நம்பி வீட்டை விற்கும் லாரா * கமலின் முன்னாள் மனைவி நடிக்கும் படம் * கவுதமிக்கு கமல் கொடுத்த புரமோஷன் : சினி வதந்தி * டாப் 5 படங்களின் விமர்சனம் * நடிகைகளின் எக்ஸ்குளூசிவ் வால்பேப்பர்கள் * புத்தம் புதிய படங்களின் ஸ்டில்கள் *  
 
 
 
 
 
 
   
 
   
 
 
 

சக்கரக்கட்டி

- பட காட்சிகள் -

தினமலர் விமர்சனம்

ஹீரோவை இரண்டு ஹீரோயின்கள் விழுந்து விழுந்து காதலிக்கும் காதல் கதையை கொஞ்சம் இனிக்காத சர்க்கரை கட்டியாக காட்டியிருக்கிறார் இயக்குனர் கலாபிரபு தாணு.

கல்லூரி மாணவரான சாந்தனுவை நாயகிகள் வேதிகாவும், இஷிதாவும் துரத்தி துரத்தி காதலிக்கிறார்கள். இருவரின் காதல் வலைக்குள்ளும் சிக்காமல் இருக்க முயற்சிக்கும் சாந்தனு ஒருவழியாக இஷிதா விரிக்கும் வலைக்குள் சிக்கி விடுகிறார். இந்தக்காலத்தில் காதல் வந்தால் கூடவே சந்தேகமும் வந்து விடுமே. சாந்தனு- இஷிதா காதலுக்கு நடுவிலும் சந்தேகப்பேய் வந்து குட்டையை குழப்ப ஆரம்பிக்கிறது. காதலியின் ஒவ்வொரு சந்தேகத்துக்கும் பதில் சொல்லி, தான் நல்லவன்தான் என்று நிரூபிக்க சாந்தனு படும் கஷ்டமும், கடைசியில் இஷிதா மனம் மாறினாரா? என்பதுமே படத்தின் மீதி கதை.

நடிகர் பாக்கியராஜின் மகன் சாந்தனுவா இது? என்று ஆச்சர்யப்பட்டு கேட்கும் அளவுக்கு சாந்தனுவின் நடிப்பு இல்லை. இரண்டு காதலிகளை சமாளிப்பதிலேயே நேரம் போய்விடுகிறது. எதற்கெடுத்தாலும் ஏக்கப்பெருமூச்சு விடுவதில் இன்றைய இளசுகளை பிரதிபலிக்கிறார். இரண்டு காதலிகளிடமும் வழியும் காட்சிகளில் கல்லூரி குசும்பு பளிச்சிடுகிறது. தான் நல்லவன் என்று காதலி இஷிதாவிடம் நிரூபிக்க எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் நடிக்கவும் கொஞ்சம் முயற்சித்திருக்கலாம்.

சாந்தனுவின் காதலிகளி்ல் ஒருவராக வரும் இஷிதா கலர்புல் கவர்ச்சிக்கு மட்டும். இவர் அப்படி என்றால் வேதிகாவின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. ஆனால் காதல் தோல்வியில் துவண்டு அழும் காட்சியில் மட்டும் மார்க்குகளை அள்ளி விடுகிறார். இன்னும் முயற்சித்தால் தமிழில் ஒரு ரவுண்டு வருவதுடன் தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விடலாம்.

படம் முழுக்க இடம்பெற்றிருக்கும் சிட்டி லாங்குவேஜ் ஸ்டைலை குறைத்திருக்கலாம். பல நுனிநாக்கு ஆங்கில வசனங்கள் புரிய மறுக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் இனிமை. டாக்ஸி டாக்ஸி... பாடல் ஏற்கனவே பட்டிதொட்டியெங்கும் பிரபலம் என்பதால், தியேட்டரிலும் தூள் பறக்கிறது.

சக்கரக்கட்டி - இனிக்காத சர்க்கரை கட்டி

குமுதம் விமர்சனம்

ஏ.ஆர்.ரஹ்மான் அட்டகாசமாக ஆறு பாடல்களைப் போட்டுக் கொடுத்து; தியேட்டருக்குள் ஒட்டுமொத்த இளைஞர் பட்டாளத்தையும் கொண்டு வந்து சேர்த்த பிறகு, ஒன்றரை மணி நேரம் அவர்களை உட்கார வைக்க வேண்டிய பொறுப்பு மட்டுமே இயக்குனருக்கு... ஆனால், "சக்கரக்கட்டி'' சாந்தனு. மொய்க்கும் எறும்புகள் இஷிதா, வேதிகா. ஒருவர் கல்லூரியில் கிளாஸ்மேட். இன்னொருவர் சின்ன வயதில் பார்த்து, சீமைப்பசு மாதிரி திடீரென எதிரில் வந்து நிற்கும் முறைப்பெண். இருவரில் யாருக்குக் கிடைக்கிறார் சக்கரகட்டி சாந்தனு?

எம்.ஜி.ஆர். காலத்து கதை. இங்கிலீஷில் டயலாக் எழுதி இந்தக் காலத்து யூத்துகளுக்கு விற்க நினைத்திருக்கிறார்கள்....

சாந்தனு ஷார்ப். ரெண்டு பொண்டாட்டிக்காரன் மாதிரி இரண்டு காதலி இளைஞனாக ஜமாய்க்கிறார். சிரிப்பு, சில்மிஷம், சோகம் என எல்லாம் வருகிறது. நாயகிகள் இஷிதாவும், வேதிகாவும் காதலிக்கிறார்களே தவிர, காதலனை அடைவதில் நத்தையும், ஆமையுமாக இருக்கிறது அவர்களது போட்டி.. பொறுக்க முடியாமல் ரசிகர்கள் புழுவாய் நெளிகிறார்கள். காதலை இயல்பாகச் சொல்ல வேண்டும் என்று , வில்லன்கள் துரத்தல்கள், சென்டிமென்ட் அபத்தங்கள் என அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு, காதலுக்குப் பிரச்னை இன்னொரு காதல் என்று வித்தியாசமாக சிந்தித்த இயக்குனர், விடை தெரியாமல் முழிப்பது பரிதாபம்.

"கையை பிளேடால் கிழிச்சுக்கோ'' என நண்பர்கள் தரும் ஐடியாவில் பிளேடை மொக்கையாக்க சாணை பிடிப்பவரிடம் செல்வது ரசிக்க வைக்கும் லூஸூத்தனம். "அவ பேரு தெரியுமா? வீடு தெரியுமா? என பழைய டயலாக்கை அள்ளிவிட்டு, சட்டென்று சீன் மாற்றி "இப்படில்லாம் கேட்க மாட்டோம். அவளோட கார் நம்பர் பாத்தியா? ''என சாந்தனுவுடன் நண்பர்கள் கலாய்ப்பது, இது தாண்டா யூத் என்று சொல்ல வைக்கிறது.

அழகான ஹீரோ, அழகான ஹீரோயின்கள், அழகான லொகேஷன்கள்... ஏதோ இன்ஃபிளைட் மேகஸினைப் புரட்டுவதுபோல் காட்சிகள் கண்களுக்கு குளுமையாக இருந்தாலும் அனுபவித்து ரசிக்கவோ, நினைத்துப் பார்க்கவோ, ஊறுகாய் காரத்தில் ஒரு சீன்கூட இல்லாதது சக்கரக்கட்டியை வெறும் பளபள ஐஸ்கட்டியாக மாற்றி விட்டது.

குமுதம் ரேட்டிங் - சுமார்

 




 
 
 
 
   
   
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.