* கமலின் எண்ணமும், த்ரிஷாவின் யோசனையும் * மிட்டாய் படத்தில் கார்ட்டூன் சித்திரங்கள் * கேரள வரவு மித்ராவுக்கு லவ் ஹிஸ்ட்ரி ஸ்டார்ட் * அமீரிடம் விளக்கம் கேட்கும் கணித மேதை * வாரணம் ஆயிரம்- கொடைக்கானல் படங்களின் விமர்சனம் * கடும் உடற்பயிற்சி செய்கிறார் சினேகா * ஒரே நேரத்தில் 2 படங்களை இயக்கி நடிக்கும் நடிகர் * ஒரே படத்துக்கு 3 இசையமைப்பாளர்களின் இசை * ரவீனா டாண்டனின் சமூக அக்கறை * இசையமைப்பாளர்கள் மாற்றப்படும் மர்மம் : ஸ்பெஷல் ரிப்போர்ட் * சசிக்களின் விநியோக டீலிங் * கின்னசுக்கு போகும் பாபுகணேஷ் * திருமணம் பற்றி சல்மான் கருத்து * ஷில்பா ஷெட்டி 3 மாதம் ஓய்வு * இந்தி கஜினிக்கு 1250 பிரிண்ட் * மாடர்ன் பெண்களுக்கு சின்னத்திரை நித்யா அட்வைஸ் * குவாண்டம் ஆப் சோலஸ் பட விமர்சனம் * மாலையானால் மலையேறும் நடிகைகள் : ஸ்பெஷல் ரிப்போர்ட் * வாஸ்து‌‌வை நம்பி வீட்டை விற்கும் லாரா * கமலின் முன்னாள் மனைவி நடிக்கும் படம் * கவுதமிக்கு கமல் கொடுத்த புரமோஷன் : சினி வதந்தி * டாப் 5 படங்களின் விமர்சனம் * நடிகைகளின் எக்ஸ்குளூசிவ் வால்பேப்பர்கள் * புத்தம் புதிய படங்களின் ஸ்டில்கள் *  
 
 
 
 
 
   
 
 
  பாலிவுட்டுக்கு போக ஆசைப்படும் தமிழ் நடிகை  
     
 
 
   

ஆசை யாரை விட்டது. பருத்தி வீரன் படத்துக்கு முன்பு யாருமே சீண்டாத ப்ரியாமணி, இன்று தேசிய விருது நடிகையாகி விட்டார். புகழின் உச்சிக்கு சென்று விட்ட மகிழ்ச்சியில் இருக்கும் அவருக்கு பாலிவுட் படங்களில் நடிக்க ‌வேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம். ப்ரியாமணியின் ஆசை பற்றிய ஸ்பெஷல் ரிப்போர்ட் வருமாறு:-

ஆழ்கடலின் அதிசய அழகுகளை உள்ளடக்கிய அகண்ட விழிகளுடையவர் நடிகை ப்ரியாமணி. முழுக்க முழுக்க மாடர்ன் பெண்ணான இவருக்கு பாவாடை, தாவணி கட்டி பெருமை சேர்த்தது பருத்திவீரன். ராசியற்ற நடிகை என்ற சென்ட்டிமென்டை உடைத்து இப்படத்தின் மூலம், தேசிய விருது உட்பட பல்வேறு கவுரவங்கள் ப்ரியாமணிக்கு கிடைத்தன. அதேநேரம், கிராமிய வேடங்களை ஏற்க மறுக்கிறார். கிளாமருக்கு முக்கியத்துவம் தர நினைக்கிறார் என, கிசுகிசுக்களும் பரவ துவங்கின.

உண்மை என்ன என்று அவரிடமே கேட்டோம்....

"சினிமாத்துறையில் எனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு குருட்டு அதிர்ஷ்டத்தாலோ, ஏதேச்சையாகவோ கிடைத்ததில்லை. இந்த இடத்தை பெற, நான் பல சிரமங்களை அனுபவித்துள்ளேன். கிராம மக்களுடன் பழக்கமில்லாத சூழ்நிலையில் வளர்ந்தவள் நான். இருப்பினும், பருத்தி வீரன் படத்தில் கிராமியப் பெண்ணாக நடித்தேன். அதற்கு கிடைத்த வரவேற்பு என்னை பிரமிக்கச் செய்தது. அதைத் தொடர்ந்து, நிறைய வாய்ப்புகள் வந்தன. அவற்றில் பெரும்பாலானவை, கிராமியப் பெண் வேடம். அவற்றில் வலுவான கதை இல்லாததால் நிராகரித்தேன்.

"தற்போது தமிழில் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஆறுமுகம்' படத்தில் பரத்துடன் நடிக்கிறேன். இதில் எனக்கு துறுதுறுப்பான வேடம். ஹீரோவுக்கு இணையான வேடமும் கூட. மணிரத்னம் சார் இயக்கும் படத்திலும், நினைத்தாலே இனிக்கும் படத்திலும் நடிக்க உள்ளேன். மலையாளத்தில் வெற்றி கிளாஸ்மேட் படத்தின் ரீமேக் தான் இந்தப் படம். மேலும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறேன். இரண்டு மூன்று ஹீரோயின்கள் உள்ள படத்தில் நடிப்பதில் எனக்கு எந்த விதமான ஆட்சேபமும் இல்லை. எனது பாத்திரம் வலுவானதாகவும், முக்கியத்துவம் இருப்பதாகவும் அமைய வேண்டும் என்பது தான் எனது கண்டிஷன்,.

பாலிவுட்' ஆசையும் எனக்கு இருக்கிறது. உங்களை விமர்சித்த சேரனுடன் ஜோடி சேர்வீர்களா? அமீருடன் அடுத்த படத்தில் நடிப்பீர்களா' என பலரும் கேட்கின்றனர். முதலில் கதை எனக்குப் பிடித்திருக்க வேண்டும். அப்புறம் என் கால்ஷீட்டில் இடம் இருக்கவேண்டும். மற்றபடி யாருடனும் எனக்கு எந்த மனஸ்தாபமும் இல்லை'' என்றார் அழுத்தமாக.

"தேசிய விருது பெற்ற நடிகையான உங்களுடன் இணைந்து நடிக்க இளம் நடிகர்கள் தயங்குவதாக பேச்சு அடிபடுகிறதே... "இதில் உண்மையில்லை. புரளி கிளப்பி விடுறாங்க சார்... என்றார் வருத்தமாக...!

ஏற்கனவே தமிழ்சினிமாவில் இருந்து இந்திசினிமாவுக்கு சென்று சாதனை படைத்த ஸ்ரீதேவி போல, ப்ரியாமணிக்கு இந்திப்படத்தில் நடித்து புகழ்பெற வேண்டும் என்பதும் ஒரு லட்சியமாம். அதற்கான வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வியுடன் காத்திருக்கிறார் அம்மணி.

- தினமலர் சினி டீம் -

 
 
   
   
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.