| |
|
|
| |
 |
|
| |
|
|
|
| |
| |
எல்லாரையும் இழுக்கிற பேமிலி ஷோ : சுதா கணேசன் |
|
 |
|
|
| |
 |
|
"ஆறு வயதிலிருந்து அறுபது வயது வரை உள்ளவர்கள் குடும்பத்தோடு கூட்டமா உட்கார்ந்து ஆர்வத்துடன் பார்க்கும் நிகழ்ச்சி இது. ஆறிலிருந்து அறுபது வயது வரை எல்லாரையும் இழுக்கிற "பேமிலி ஷோ'ன்னு இந்நிகழ்ச்சியை சொல்வேன்'' - பொதிகை சேனலில் வரும் அருமையான "குவிஸ்' நிகழ்ச்சி ஞாயிறுதோறும் வரும் கேள்விக்கு என்ன பதில்! இதன் தொகுப்பாளர் எப்போதும் புன்முறுவலுடன் நிகழ்ச்சியை நடத்தும் சுதாகணேசன் சொன்னதுதான் இது.
சுதா கணேசனின் பேட்டி :
|
|
| |
| இந்நிகழ்ச்சி எப்படி உருவானது, யார் காரணம்? |
| |
டாக்டருக்கு படிச்சிட்டு வெளிநாடு போயிருந்தேன். ஏழு வருடங்களுக்கு பிறகு சென்னைக்கு வந்ததும் "டிவி' சேனலில் ஒர்க் பண்ணலாம்ங்கிற நினைப்பு இருந்தது. எனக்கு டீச்சிங் ரொம்ப பிடிச்சிருந்ததால இது தொடர்பான நிகழ்ச்சிகள் ஏதாவது செய்யலாம்ன்னு நினைச்சிட்டிருந்தேன். அப்பத்தான் பொதிகை சேனலில் சாப்ட்வேர் இன்ஜினியர் பிரகாஷ் இப்படி ஒரு நிகழ்ச்சியை செய்ய ஆர்வம் காட்டி வருவதாக என்னோட கிளாஸ் மேட் சுமந்த்ராமன் மூலம் கேள்விப்பட்டேன். பிரகாஷையும், தயாரிப்பாளர் ஹேமலதாவையும் சந்தித்து பேசினேன். ஒரு "டீம்' ஒர்க்கா இந்நிகழ்ச் சியை செய்யலாம்ன்னு பிரகாஷ் சொன்னார். இப்படித்தான் "கேள்விக்கு என்ன பதில்' நிகழ்ச்சி உருவானது."பொது அறிவு, கணிதம், லாஜிக்' என பலதரப்பட்ட கேள்விகளுக்கு விடை கூறும் நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சியை வடிவமைத்தோம்.
|
| * இந்த நிகழ்ச்சி ரசிகர்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கை உங்களுக்கு எப்படி வந்தது? |
| |
தனியார் "டிவி'க்களில் மசாலாத்தனமாக பொழுது போக்கு நிகழ்ச்சிகள் விதவிதமாக வந்துக்கிட்டிருக்கும் நிலையில் வாரத்தில் முதல் மற்றும் மூன்றா வது, குறிப்பிட்ட மாதத்தில் ஐந்தாவது ஞாயிற்றுக் கிழமைகளில் பகல் 12.05 மணியிலிருந்து 1 மணி வரை நடத்தப்படும் இந்நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இரண்டு வார இடைவெளியில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்ட போதும் பல நாடுகளில் உள்ள நேயர்களை நிறையவே ஈர்த்துள்ளது.
|
| * ஒரு கேள்விக்கு பல பதில்களை தேடி சொல்வதில் சிரமம் ஏதும்...? |
| |
இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிற நேயர்கள் அவுங்களுக்கு பதில் தெரியாவிட்டால் எங்களிடமிருந்து தெரிஞ்சுக்க ஆசைப்படறாங்க. தெரிஞ்சவங்க அவுங்களுக்கு தெரிஞ்ச பொருத்தமான பல பதில் களையும் சொல்றாங்க. இதனால கேள்விகளுக்கு பதிலை பல இடங்களிலும்,பல துறைகளிலும் தொடர்புடைய புத்தகங்களை தேடி, தேடி படிக்க வேண்டியிருக்கு. படித்த விஷயங்களை நேயர்களிடம் கொண்டு செல்ல "கேள்விபதில்' குறித்து ஆராய்ச்சியே நடத்த வேண்டியிருக்கு. |
| * இந்நிகழ்ச்சி முக்கியத்துவம் குறித்து நேயர்களின் கருத்து? |
| |
"டிவி'யில வர்ற ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு வகையில ரசிகர்கள் இருப்பாங்க. சில நிகழ்ச்சிகளை குடும்பத்தில இருக்கிறவங்க ஒன்றாக பார்க்க தயங்க வேண்டியிருக்கும். எங்கள் நிகழ்ச்சி தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, குழந்தைகள்னு குடும்பத்திலுள்ள அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து ஆர்வமாக பார்க்கிறாங்க. ஒருத்தருக்கு பதில் தெரியாவிட்டால் மற்றவங்க கண்டுபிடிச்சு சொல்றாங்க. வெளியில உறவினர்கள், நண்பர்களிடம் கேட்டும் எப்படியாவது பதிலை சொல்லிடணுங்கிற ஆசையும், ஈர்ப்பும் அவுங்களுக்கு இருக்கு. "ஆறிலிருந்து அறுபது வயது வரை' என குடும்பத்திலுள்ள எல்லாரையும்இழுக்கிற "பேமிலி ஷோ'வுனு இந்நிகழ்ச்சியை சொல்வேன்.
|
| * உங்கள் பதிலுக்கு எதிராக விவாதம் நடத்தும் நேயர்கள் பற்றி? |
| |
கெட்டிக்கார நேயர்கள் எங்களுக்கு நிறைய பேர் உள்ளனர். சில நேரம் நாங்கள் சொல்லும் பதிலும் அவர்கள் சொல்லும் மற்றொரு பதிலும் சரியானதாக இருக்கும். நாங்கள் எங்கள் பதில் எதிலிருந்து பெறப்பட்டது. அதன் முக்கியத்துவம் என்ன, எந்தவகையில் இதை கையாளப்பட்டது என்று விரிவாக விளக்கம் சொல்லி அவர்களை திருப்திபடுத்த வேண்டியிருக்கு.
|
| * நெகிழ்ந்து போன சம்பவம் ஏதும்? |
| |
"பிளஸ் 2" படிக்கும் ஒரு மாணவ நேயர் கடிதத்தில் சொல்லும் போது, "தேர்வுக்கு படிப்பதால "டிவி' பார்க்கக்கூடாதுன்னு அப்பா சொல்லியிருக்காங்க. ஆனா "கேள்விக்கு என்ன பதில்' நிகழ்ச்சியை மட்டும் பாத்துக்கலாம்ன்னு அனுமதிச்சிருக்காங்கன்னு எழுதியிருந்தான். குழந்தைகளையும், பெற்றோர்களையும் இந்நிகழ்ச்சி ஈர்த்துள்ளது. ரீடெலிகாஸ்ட் புதன்கிழமைகளில் இரவு 7 மணியிலிருந்து 8 மணி வரை பார்க்கலாம். குவிஸ் போட்டி மட்டும் இருக்காது. |
| * வேறு "டிவி'க்களில் நிகழ்ச்சிகள் நடத்தும் எண்ணம் ஏதும்? |
| |
"சம்பாதிக்கணுங்கிறது மட்டுமே எனது நோக்கமில்லை. சமுதாயத்திற்கும் என்னால முடிந்த நல்ல விஷயங்களை செய்யணும்கிற ஆர்வத்தில இதில ஒர்க் பண்ணிட்டிருக்கேன். பொழுதுபோக்கு நிகழ்ச்சியைவிட மக்களுக்கு ஏதாவது வகையில பயனுள்ள தரமான நிகழ்ச்சின்னா ஏத்துக்கிட்டு ஒர்க் பண்ணலாம், என்று சொன்ன சுதாகணேசன் அடுத்த "எபிசோட்'டுக்கு கேள்விகள் தயாரிக்கும் பணிக்காக புறப்பட்டார்.
|
|
| |
| |
ஜாக்பாட் தானா? |
 |
|
|
| |
 |
|
பெண்களுக்கான டாப் மோஸ்ட் கேம் ஷோ ஜெயா "டிவி'யில் குஷ்பூ வழங்கும் ஜாக்பாட். ஆனால், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், கறிவேப்பிலை கணக்காகவாவது ஒரு பெண்ணும் காணோம். காரணம், நல்ல காரணம் தான். அதில் ஒரு விசேஷம் உண்டு.
ஒரு விழிப்புணர்வு எபிசோடாக அது அமைந்தது. குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள், அதில் இருந்து மீண்டதோடு மற்ற குடிப்பழக்க அடிமைகளும், ""எங்களை போல மீள முடியும்'' என, மறைந்து நின்று அல்ல, ஜாக்பாட்டில் உரக்க சொன்னார்கள்.
"இது ஒரு வளரும் தன்மையுள்ள நோய். எதை எதை இழக்கக் கூடாதோ அவற்றை எல்லாம் இழக்கச் செய்யும் இந்த குடிப்பழக்க நோய்'' என்று அனுபவப்பட்டவர்கள் அறிவுறுத்தினர். "ஆல்கஹாலிக்ஸ் அனானமைஸ்' எனும் அமைப்பு குடிப்பழக்க அடிமைகளை அதில் இருந்து மீட்கிறது. இதன் போன் எண்கள்: 94434 41601, 94422 71601 மற்றும் 94431 82206. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வர்கள் இந்த அமைப்பு மூலம் விடுதலை பெற்று, இந்த அமைப்பை பற்றி பிரசாரம் செய்கின்றனர். ஒவ்வொரு வாழ்வின் நிலையிலிருந்து இந்த குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியவர்கள், காரணம், பட்ட அவதிகள், அமைப்பின் வழிகாட்டல், மீண்டது, இப்போது வாழும் வாழ்க்கை என ஆளுக்கு ஓரொரு கதையென சொன்னார்கள். இந்த உண்மை கதைகள் பலரையும் தன்னம்பிக்கை பெறவும், உஷாராக்கவும் நிச்சயம் மாறுதலை செய்தது. பெண்களே கலந்து கொள்ளாமல் இருபக்க அணிகளிலும் ஆண்களே இருந்தனர்.
ஒரு ஆண் தீய பழக்கத்திற்கு ஆளானால் முதலில் அதனால் பாதிக்கப்படுவது அவனது தாய், மனைவி, மகள் என குடும்பத்தின் பெண்கள்தான். ஆண்களே முழுமையாக பங்கு பெற்றாலும் இதுவும் பெண்களுக்கு பயனுள்ள நிகழ்ச்சி என்று தான் சொல்ல வேண்டும்.
மொத்தத்தில் சமுதாயத்திற்கான சிறப்பான சேவையாய் இந்த எபிசோட் இருந்தது.
|
|
| |
|
|
| |
| |
திருப்பதி நவராத்திரி |
 |
|
|
| |
 |
|
ஜெயா, விஜய், ராஜ், பொதிகை உட்பட பல சேனல்களில் போட்டிபோட்டு நவராத்திரி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
ஜெயாவில் திருப்பதி திருமலை நவராத்திரி பிரம்மோற்சவம் முழுமையாக படம்பிடித்து காட்டப்படுகிறது. 10ம் தேதி வரை, காலை ஆறு மணிக்கு பாருங்கள்.
|
|
| |
|
|
| |
|
|
|
|
| |
| |
குறும்புக்கு கிச்சுகிச்சு |
 |
|
|
| |
 |
|
ஜெயா "டிவி'யில் வியாழன் தோறும் இரவு ஏழு மணிக்கு ஒளிபரப் பாகும் நிகழ்ச்சி கிச்சு கிச்சு டாட் காம்.
இதற்காக, கொச்சி வீகாலேண்ட் தீம் பார்க்கில் கேலி, கிண்டல் விளையாட்டுகளின் படப்பிடிப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது. வாய் பேசாமல் சைகை கிண்டலடிக்கும் நிகழ்ச்சியை பார்க்கலேன்னா மிஸ் பண்ணாதீங்க இனி.
|
|
| |
|
|
| |
| |
ஆட்டம் பாட்டம் |
 |
|
|
| |
 |
|
கலைஞர் "டிவி'யில் வாரநாட்களில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் போட்டி நிகழ்ச்சி ஆட்டம் பாட்டம் 183 நாட்களை தாண்டி, கடைசி எபிசோட் கடந்த வெள்ளியன்று ஒளிபரப்பானது.
லட்சம் அள்ளியவர்களை நடிகை பூஜா, டான்ஸ் மாஸ்டர் பிரசன்னா தேர்ந்தெடுத்தனர். முதல் பரிசு மூன்று லட்சம் ரூபாயை பெற்றார் ஸ்ரீ கார்த்திக்; இரண்டாவது பரிசு இரண்டு லட்சம் ரூபாய் சவுந்தர், சந்துருவுக்கு கிடைத்தது; மூன்றாவது பரிசு ஒரு லட்சம் ரூபாய், மனோஜ், அஸ்வதி ஆகியோர் பெற்றனர்.
|
|
| |
|
|
|
|
| |
| |
கோகுலத்தில் சீதை |
 |
|
|
| |
 |
|
ஆரம்பகால படங்களில் விஜயுடன் தொடர்ந்து நடித்த நடிகை சங்கவியும் இப்போது தொடருக்கு வந்துவிட்டார்.
சித்தி, அண்ணாமலை தொடர்களை இயக்கிய சி.ஜே.பாஸ்கர் இயக்கி கலைஞர் "டிவி'யில் நாளைமுதல் இரவு 9.30க்கு ஒளிபரப்பாகும் கோகுலத்தில் சீதை தொடரில் சங்கவி நடிக்கிறார்.
|
|
| |
|
|
|
 |
|
|
|