* கமலின் எண்ணமும், த்ரிஷாவின் யோசனையும் * மிட்டாய் படத்தில் கார்ட்டூன் சித்திரங்கள் * கேரள வரவு மித்ராவுக்கு லவ் ஹிஸ்ட்ரி ஸ்டார்ட் * அமீரிடம் விளக்கம் கேட்கும் கணித மேதை * வாரணம் ஆயிரம்- கொடைக்கானல் படங்களின் விமர்சனம் * கடும் உடற்பயிற்சி செய்கிறார் சினேகா * ஒரே நேரத்தில் 2 படங்களை இயக்கி நடிக்கும் நடிகர் * ஒரே படத்துக்கு 3 இசையமைப்பாளர்களின் இசை * ரவீனா டாண்டனின் சமூக அக்கறை * இசையமைப்பாளர்கள் மாற்றப்படும் மர்மம் : ஸ்பெஷல் ரிப்போர்ட் * சசிக்களின் விநியோக டீலிங் * கின்னசுக்கு போகும் பாபுகணேஷ் * திருமணம் பற்றி சல்மான் கருத்து * ஷில்பா ஷெட்டி 3 மாதம் ஓய்வு * இந்தி கஜினிக்கு 1250 பிரிண்ட் * மாடர்ன் பெண்களுக்கு சின்னத்திரை நித்யா அட்வைஸ் * குவாண்டம் ஆப் சோலஸ் பட விமர்சனம் * மாலையானால் மலையேறும் நடிகைகள் : ஸ்பெஷல் ரிப்போர்ட் * வாஸ்து‌‌வை நம்பி வீட்டை விற்கும் லாரா * கமலின் முன்னாள் மனைவி நடிக்கும் படம் * கவுதமிக்கு கமல் கொடுத்த புரமோஷன் : சினி வதந்தி * டாப் 5 படங்களின் விமர்சனம் * நடிகைகளின் எக்ஸ்குளூசிவ் வால்பேப்பர்கள் * புத்தம் புதிய படங்களின் ஸ்டில்கள் *  
 
 
 
   
 
   
 
சினிமா என்று வந்துவிட்டால் வதந்திக்கும், கிசுகிசுவுக்கும் பஞ்சமே இருக்காது. நடிகர், நடிகைகளைச் சுற்றி ஏராளமான வதந்திகள் வரத்தான் செய்யும். அந்த வதந்திகளில் எது உண்மை, எது பொய் என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருப்பார்கள். சினிமா ரசிகர்களின் குழப்பத்துக்கு தீர்வு கிடைக்கும் வகையில் சில வதந்திகளையும், அதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பதையும் இங்கே கொடுத்துள்ளோம்.  
 
 
  ரஜினியை அசர வைத்த ஷங்கர்    
 
   

வதந்தி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையே தலை சுற்ற வைத்து விட்டார் டைரக்டர் ஷங்கர்.
விசாரித்த உண்மை: உண்மைதான்! ஜீன்ஸ் படம் இயக்கிய போதே, ஐஸ்வர்யாராய் சம்பந்தப்பட்ட காஸ்ட்யூம்களுக்கு கோடிக்கணக்கில் செலவழித்த ஷங்கர்,

இப்போது, எந்திரன் படத்தில் ரஜினி ஐஸ்வர்யாராய் நடிக்கும் பாடல் காட்சிகளுக்காக ஐந்து கோடி ரூபாய்க்கு டிரஸ் ஆர்டர் செய்திருக்கிறார். இதை ரஜினியிடம் அவர் சொன்னபோது, "இது என்ன கோலிவுட் படமா, இல்லை ஹாலிவுட் படமா' என்று அசந்து போய் விட்டாராம்.

 
         
 
  முன்னணி நடிகர்களை ப்ரியாமணி சந்தித்தார்    
 
   

வதந்தி: சமீபத்தில் பிரியாமணி, விஜய், சூர்யா போன்ற நடிகர்களை சந்தித்தார்.
விசாரித்த உண்மை: உண்மைதான்! விருது வாங்கிய பிறகு, விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் அவசர சந்திப்பு நிகழ்த்தியுள்ளார் பிரியாமணி.

என்ன விஷயம் என்று கேட்டபோது, அவர்கள் என்னுடன் டூயட் பாட ஆவலாக இருக்கின்றனர். நேரம், காலம் ஒத்துவரவில்லை என்று கவலைப்படுகின்றனர் என்று சொல்கிறார். இதனால் அடுத்தபடியாக மேற்படி நடிகர்களுக்கும், தனக்கும் பொருத்தமான கதை வைத்திருக்கும் இயக்குனர்களுக்கு வலைவீசி வருகிறார்.

 
     
 
  காதலில் விழுந்‌த காதலில் விழுந்தேன் ஜோடி    
 
   

வதந்தி: காதலில் விழுந்தேன் கதாநாயகன், கதாநாயகியின் காதல் வலையில் விழுந்து விட்டார்.
விசாரித்த உண்மை: உண்மை தான்! காதலில் விழுந்தேன் படத்தில் நடித்த கதாநாயகன் நகுல், உண்மையிலேயே அந்த படத்தின் கதாநாயகி சுனைனாவுடன் காதல் நெருக்கத்தில் உள்ளார்.

கேள்விப்பட்ட அக்கா தேவயானி, எவ்வளவோ மிரட்டியும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை நகுல். அதனால், காதலர்களை பிரிக்க, தான் காதலித்து திருமணம் செய்த கணவருடன் இணைந்து சதி திட்டம் தீட்டி வருகிறார் தேவயானி.

 
         
 
  ‌மர்மயோகிக்காக த்ரிஷா தியாகம்
   
 
   

வதந்தி: மர்மயோகி படத்துக்காக த்ரிஷா ஏராளமான படங்களை தியாகம் செய்துள்ளார்.
விசாரித்த உண்மை: உண்மை இல்லை! மர்மயோகியில் ஒப்பந்தமான த்ரிஷா, அந்த படத்துக்காக கால்ஷீட் ஒதுக்கினார்.

ஆனால் மர்மயோகி சூட்டிங்கிற்கு போகும் தேதி மர்மமாகவே இருப்பதால் அப்படத்தில் இருந்து விலகி விட்டாராம். இப்போது வழக்கம்போல தனது அடுத்த பட பணிகளில் அம்மணி பிஸியாகி விட்டார்.

 
   
     
 
  மீரா ஜாஸ்மீனுக்கு நூல் விடுகிறார் பரத்
   
 
   

வதந்தி: நேபாளி படத்தில் தன்னுடன் நடித்த மீரா ஜாஸ்மினுக்கு மறுபடியும் நூல் விடுகிறார் பரத்.
விசாரித்த உண்மை: உண்மைதான்! நேபாளி படத்தில் தன்னுடன் ஓவர் நெருக்கம் காட்டி, கட்டி உருண்ட மீரா ஜாஸ்மினை மீண்டும் ஒரு கை பார்க்க தூது விட்டார் பரத்.

ஆனால், அம்மணியோ, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்று தம்பியின் அழைப்பை நாசூக்காக நிராகரித்து விட்டார். இருப்பினும், எறும்பு ஊற கல்லும் தேயும் என்பது போல, தொடர்ந்து மீராவின் மனசை கரைத்து வருகிறாராம் பரத்.

 
         
 
  ஸ்ரேயாவுக்கு நயன்தாரா நோஸ் கட்!    
 
   

வதந்தி: ஸ்ரேயாவுக்கு நயன்தாரா, "நோஸ்கட்' கொடுத்து விட்டார்.
விசாரித்த உண்மை: உண்மை தான்! கமலின் மர்மயோகியில் நடிக்கும் ஸ்ரேயா, நயன்தாராவை யதார்த்தமாக பார்த்துள்ளார்.

ஆனால், நயனோ, நீங்கள் கமலுடன் ஒரு படத்தில்தான் நடிக்கும் வாய்ப்பு பெற்றிருக்கிறீர்கள். ஆனால், நானோ ரஜினியுடன் மூன்று படங்களில் நடித்து விட்டேன். அப்படின்னா... உங்களை விட, நான் தானே பெரிய நடிகை என்று நறுக்கென்று கூறினாராம்.

 
     
     
 
     
   
   
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.