* கமலின் எண்ணமும், த்ரிஷாவின் யோசனையும் * மிட்டாய் படத்தில் கார்ட்டூன் சித்திரங்கள் * கேரள வரவு மித்ராவுக்கு லவ் ஹிஸ்ட்ரி ஸ்டார்ட் * அமீரிடம் விளக்கம் கேட்கும் கணித மேதை * வாரணம் ஆயிரம்- கொடைக்கானல் படங்களின் விமர்சனம் * கடும் உடற்பயிற்சி செய்கிறார் சினேகா * ஒரே நேரத்தில் 2 படங்களை இயக்கி நடிக்கும் நடிகர் * ஒரே படத்துக்கு 3 இசையமைப்பாளர்களின் இசை * ரவீனா டாண்டனின் சமூக அக்கறை * இசையமைப்பாளர்கள் மாற்றப்படும் மர்மம் : ஸ்பெஷல் ரிப்போர்ட் * சசிக்களின் விநியோக டீலிங் * கின்னசுக்கு போகும் பாபுகணேஷ் * திருமணம் பற்றி சல்மான் கருத்து * ஷில்பா ஷெட்டி 3 மாதம் ஓய்வு * இந்தி கஜினிக்கு 1250 பிரிண்ட் * மாடர்ன் பெண்களுக்கு சின்னத்திரை நித்யா அட்வைஸ் * குவாண்டம் ஆப் சோலஸ் பட விமர்சனம் * மாலையானால் மலையேறும் நடிகைகள் : ஸ்பெஷல் ரிப்போர்ட் * வாஸ்து‌‌வை நம்பி வீட்டை விற்கும் லாரா * கமலின் முன்னாள் மனைவி நடிக்கும் படம் * கவுதமிக்கு கமல் கொடுத்த புரமோஷன் : சினி வதந்தி * டாப் 5 படங்களின் விமர்சனம் * நடிகைகளின் எக்ஸ்குளூசிவ் வால்பேப்பர்கள் * புத்தம் புதிய படங்களின் ஸ்டில்கள் *  
 
 
 
 
 
   
 
 
  ரன்வீர்கபூரை திருமணம் செய்ய ஆசை : சார்மி மனம் திறந்த பேட்டி  
     
 
 
   
காதல் அழிவதில்லை படத்தில் அறிமுகமாகிய சார்மி, இப்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் இந்தி நடிகர் ஒருவரை காதலிக்கிறார் அவரையே திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்ற செய்திகள் வரும் நிலையில், கோலிவுட்டில் திறமையை நிரூபிப்பது தான், தனது லட்சியம் என சார்மி கூறி வருகிறார்.

கிசுகிசுக்கள் குறித்தும், அடுத்த கட்ட முயற்சிகள் குறித்தும் அவரிடம் கேட்டபோது...

"மாடலிங் செய்துகொண்டிருந்த நான், காதல் அழிவதில்லை படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானேன். அந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும்போதே, பல முன்னணி நிறுவனங்கள் என்னை அணுகின. அனைத்தையும் ஒப்புக்கொண்டு பெயரை கெடுத்துக் கொள்ள விரும்பாததால், அந்தப் படத்தின் ரிலீஸுக்கு பிறகே பதில் சொல்ல முடிவெடுத்தேன்.

"எதிர்பார்த்த அளவுக்கு காதல் அழிவதில்லை படம் வெற்றியை ஈட்டவில்லை. இதனால், என் மீது ஃபெயிலியர் நடிகை என்ற முத்திரை பூசப்பட்டது. மனம்உடைந்த நிலையில், தெலுங்கு திரைத்துறைக்கு சென்றேன். எனது திறமைகளை வளர்த்து கொண்டு, முன்னணி இடத்துக்கு வந்தேன். கவர்ச்சி, நடிப்பு என அனைத்துக்கும் தயாராக இருக்கும் எனக்கு, கோலிவுட்டின் கதவுகள் திறக்கப்படாதது குழப்பமாக இருக்கிறது.

"தெலுங்கில் பிஸியாக இருந்தாலும், தமிழில் நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தேன். இப்போது அந்த வாய்ப்பு, கொக்கி டைரக்டர் பிரபு சாலமன் மூலம் கிடைத்துள்ளது. நான் தற்போது லாடம் என்ற தமிழ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த படத்தில் எனக்கு ஜோடியாக குஞ்சிதபாதம் என்ற கேரக்டரில் அரவிந்தன் அறிமுகமாகிறார். அவர் கம்ப்யூட்டர் இன்ஜினியராகவும், ஏஞ்சல் என்ற சேல்ஸ் கேர்ள்ளாக நானும் வருகிறோம்.

"சொல்லாத வார்த்தைகளுக்கு நாம் எஜமான்; சொல்லிய வார்த்தைக்கு நாம் வேலைக்காரன்' என்ற பழமொழியை நினைவுபடுத்தும் வகையில் இந்தப் படத்தின் கதை இருக்கும். கதாநாயகனின் வாயிலிருந்து வந்த ஒரு வார்த்தை, அவனுக்கு எதிராகத் திரும்புகிறது. இதனால் வாழ்க்கையில் அவன் சந்திக்கும் பிரச்னைகள்தான் லாடம் படம். இந்தப் படம், தெலுங்கிலும் வெளியாக உள்ளது.

"எப்பேர்ப்பட்ட கலைஞர்களாக இருந்தாலும், முன்னுக்கு வருவதற்கு அவர்களுக்கு சரியான வாய்ப்பும், அதிர்ஷ்டமும் வாய்க்கவேண்டும். எளிதில் கிடைத்துவிட்டால், வெற்றிக்கு மரியாதை இல்லை. தமிழ்த் திரையுலகில் எனக்கான அங்கீகாரத்தை இந்தப் படம் பெற்றுத்தரும் என நம்புகிறேன். இங்குள்ள நடிகைகளுக்கு போட்டியாக நான் வரவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கிறது.

"நான் ஒரு நடிகரைக் காதலிப்பதாகவும், தொழிலதிபரைத் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் கிசுகிசுக்கள் பரப்பப்பட்டன. ஆரம்பத்தில் எனக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், இப்போது அதை கண்டுகொள்வதில்லை. உண்மையை சொல்ல வேண்டுமானால், இந்தி நடிகர் ரன்வீர் கபூரை எனக்கு மிகவும் பிடிக்கும். எனது பெற்றோர் சம்மதித்தால், அவரைத் திருமணம் செய்துகொள்வேன். எனது இந்த ஆசை, ரன்வீர் கபூரின் கிசுகிசுக்களின் எண்ணிக்கையை பெருக்கும், என சிரித்தார். .

- தினமலர் சினி டீம் -

 
 
     
   
   
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.