| |
|
|
| |
 |
|
| |
| |
| |
குசேலன் : தொடரும் சர்ச்சைகள்...! |
|
| |
|
|
| |
|
|
| |
|
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தவித்து வரும் குசேலன்
படத்திற்கு மேலும் ஒரு சர்ச்சையாக படத்தின் நாயகி மீனா
வெளிப்படையான வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.
கத பறயும் போள் என்ற மலையாள படத்தினை தமிழில் ரீமேக்
செய்து குசேலன் என்ற பெயரில் டைரக்டர் பி.வாசு
இயக்கியுள்ளார். படத்தில் ரஜினிக்கு அதிக
முக்கியத்துவம் அளித்து எடுக்கப்பட்டுள்ளதாக, இதே
படத்தை ரஜினி ரோலில் ஷாரூக்கானை வைத்து இந்தியில்
இயக்கும் டைரக்டர் பிரியதர்ஷன் கண்டனம்
தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குசேலனில் நயன்தாராவுக்கு தரப்பட்ட
முக்கியத்துவம் தற்போது பல தரப்பினரின் வருத்தத்தையும்,
சர்ச்சையையும் உருவாக்கியுள்ளது, குசேலன் படத்தின்
கதாநாயகி மீனாவே இந்த வருத்தத்தை
வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. படத்தில்
நயன்தாராவுக்கு மழையில் ஆடிப்பாடும் படியான ஒரு தனி
பாடல் காட்சியும், இன்ன பிற சீன்களும்
சேர்க்கப்பட்டுள்ளன. நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளை
பில்டப் செய்ய வேண்டும் என்பதற்காக மீனா நடித்த சில
உருக்கமான காட்சிகள் நீக்கப்பட்டது மீனாவுக்கு
வருத்தத்தை உண்டாக்கியிருக்கிறதாம்.
இதற்கு முன்பே குசேலன் படத்தின் விளம்பரங்களில்
ரஜினிக்கும், நயன்தாராவுக்கும் தரும்
முக்கியத்துவத்தில் தனக்கு ஒரு பங்கு கூட
வழங்கப்படவில்லை என்ற வருத்தத்தில் இருக்கும் மீனாவை,
தற்போத நயன்தாராவை ஹைலைட் செய்வத மேலும் வருத்தத்தை
உருவாக்கியுள்ளது. குசேலன் படத்தின் டைட்டில் கார்டில்
நயன்தாரா பெயர் முதலிலும், மீனா பெயர் அதற்கு பின்னரும்
காட்டுவது குறிப்பிடத்தக்கது,
இதுகுறித்து நடிகை மீனா அளித்த பேட்டி வருமாறு:-
குசேலன் படத்தில் ரஜினிக்கு முக்கியத்துவம் அளித்து
இருப்பதில் தவறில்லை. ஆனால் எங்களையெல்லாம்
இருட்டடிப்பு செய்து விட்டு, நயன்தாராவை உயர்த்தி
பிடிப்பதைத்தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
குசேலன் படத்தில் கதாநாயகி நான்தான். ஆனால் படத்தின்
டைட்டில் கார்டில் எனக்கு முன் நயன்தாரா பெயர் வருகிறது.
இது எனக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்துள்ளது. என்
இமேஜைப் (?) பற்றி கவலைப்படாமல் மூன்று குழந்தைகளுக்கு...
அதுவும் பெரிய பெரிய பசங்களக்கு தாயாக மேக்கப்பை
குறைத்துக் கொண்டு நடித்தேன். நானும், பசுபதியும்
உருக்கமாக நடித்த காட்சிகளை நீக்கி விட்டு, படத்திற்க
சம்பந்தமே இல்லாத நயன்தாராவின் காட்சிகளை, நயன்தாராவின்
ஆட்டம் பாட்டத்தை சேர்த்துள்ளனர். குறிப்பாக அந்த
மழைப்பாடல் தேவைதானா? தெரியவில்லை.
நட்புதான் குசேலன் படத்தின் மையக்கரு. ஆனால் அதன்
அழுத்தம் படத்தில் பிரதிபலிக்கவில்லை. என் போன்ற
நட்சத்திரங்களை இப்பொழுது சம்பந்தப்பட்டவர்கள்
நடத்தும் விதத்திலும் தெரியவில்லை.
இவ்வாறு நடிகை மீனா கூறினார்.
- தினமலர் சினி டீம் - |
|
|
|
 |
|
|
| |
|
|
|
|