* கமலின் எண்ணமும், த்ரிஷாவின் யோசனையும் * மிட்டாய் படத்தில் கார்ட்டூன் சித்திரங்கள் * கேரள வரவு மித்ராவுக்கு லவ் ஹிஸ்ட்ரி ஸ்டார்ட் * அமீரிடம் விளக்கம் கேட்கும் கணித மேதை * வாரணம் ஆயிரம்- கொடைக்கானல் படங்களின் விமர்சனம் * கடும் உடற்பயிற்சி செய்கிறார் சினேகா * ஒரே நேரத்தில் 2 படங்களை இயக்கி நடிக்கும் நடிகர் * ஒரே படத்துக்கு 3 இசையமைப்பாளர்களின் இசை * ரவீனா டாண்டனின் சமூக அக்கறை * இசையமைப்பாளர்கள் மாற்றப்படும் மர்மம் : ஸ்பெஷல் ரிப்போர்ட் * சசிக்களின் விநியோக டீலிங் * கின்னசுக்கு போகும் பாபுகணேஷ் * திருமணம் பற்றி சல்மான் கருத்து * ஷில்பா ஷெட்டி 3 மாதம் ஓய்வு * இந்தி கஜினிக்கு 1250 பிரிண்ட் * மாடர்ன் பெண்களுக்கு சின்னத்திரை நித்யா அட்வைஸ் * குவாண்டம் ஆப் சோலஸ் பட விமர்சனம் * மாலையானால் மலையேறும் நடிகைகள் : ஸ்பெஷல் ரிப்போர்ட் * வாஸ்து‌‌வை நம்பி வீட்டை விற்கும் லாரா * கமலின் முன்னாள் மனைவி நடிக்கும் படம் * கவுதமிக்கு கமல் கொடுத்த புரமோஷன் : சினி வதந்தி * டாப் 5 படங்களின் விமர்சனம் * நடிகைகளின் எக்ஸ்குளூசிவ் வால்பேப்பர்கள் * புத்தம் புதிய படங்களின் ஸ்டில்கள் *  
 
 
 
 
 
   
 
 
  கவர்ச்சியில் உடன்பாடு இல்லை : நடிகை மீனாட்சி  
     
 
 
   

தென் மாநில பெண் போன்ற தோற்றம். ஹோம்லி லுக், உதட்டில் மனதை ஈர்க்கும் புன்னகை என வசீகரத்தை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்திருப்பவர் மீனாட்சி. "கருப்பசாமி குத்தகைதாரர்' படத்தின் மூலம், இளைஞர்களின் உறக்கத்தை கெடுத்தவர். அவர் கூறுகையில், "கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் என் தோற்றத்தையும் பெயரையும் பார்த்தவர்கள், "தமிழகத்தில் நீங்கள் எந்த ஊர் சேர்ந்தவர்?' என, பலர் கேட்கின்றனர். நான் பெங்காலி. கோல்கட்டாவில் தான் வளர்ந்தேன். அங்கு இருக்கும் போதே, கோலிவுட்டின் பிரம்மாண்டத்தால் ஈர்க்கப்பட்டேன். நான் பக்கா மாடர்ன் பெண். ஆனால் முதல் படத்தில் பாவாடை தாவணியில் பாந்தமான கேரக்டர் கிடைத்தது.

"பட்டிதொட்டி எங்கும் அந்த ஒரே படத்தின் மூலம், எனது முகம் பதிந்துவிட்டது. அந்தப் படத்துக்குப் பின், அதேபோன்ற பாத்திரங்கள் தேடிவந்தன. ஒரே மாதிரி நடித்தால் நன்றாக இருக்காது என்பதால், கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தினேன். இப்போது, "அகம் புறம், பள்ளிகொண்டபுரம், பெருமாள், ராஜாதி ராஜா' போன்ற படங்களில் நடிக்கிறேன்.

"எனது லட்சியம், ஆசை எல்லாம் நல்ல நடிகை எனப் பெயரெடுக்கவேண்டும் என்பதுதான். "நம்பர் 1'க்கான ரேஸில் எனக்கு உடன்பாடு இல்லை. எனது நடிப்பை மெருகேற்றும் விதத்திலும், எனது பாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை மட்டுமே தேர்வுசெய்கிறேன். அந்தப் படத்தில் எத்தனை நாயகிகள் நடிக்கின்றனர் என்பதை எல்லாம் கருத்தில் கொள்வதில்லை.

"தமிழ் தவிர பிற மொழிப்படங்களின் வாய்ப்பு வருகின்றன. அவசரப்பட்டு எதையும் நான் ஒப்புக்கொள்வதில்லை. கோலிவுட் நடிகைகளுக்கு "பாலிவுட்'டில் எப்போதும் ஒரு கிரேஸ் இருக்கும். எனக்கும் "பாலிவுட்' மீது கவனம் இருக்கிறது. பொறுத்திருந்து தான் அதை பார்க்க வேண்டும். நான் தாரளமாக கவர்ச்சி காட்டத் தயாராகிவிட்டதாக பேச்சு அடிபடுகிறது.

"என்னை ஹோம்லியாக பார்த்தவர்கள், தற்போது மாடர்ன் டிரஸ்சில் பார்க்கும் போது வித்தியாசமாக உணர்வதே அதற்கு காரணம். கவர்ச்சியில் எனக்கு உடன்பாடு கிடையாது, எனக்கு அது சரியும் வராது. கல்லுõரிப் பெண்கள் எந்தமாதிரி உடை அணிகிறார்களோ எதைப் போலத் தான் நான் அணிகிறேன்'' என்றார்.

"கமல்ஹாசனுடன் முத்தக்காட்சியில் நடிக்கத் தயாராக இருப்பதாக பிரகடனம் செய்தீர்களே'' என்று கேட்டதற்கு "நான் அப்படிச் சொல்லவில்லை'' என்று மறுத்தார்.

- தினமலர் சினி டீம் -

 
 
   
   
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.