* கமலின் எண்ணமும், த்ரிஷாவின் யோசனையும் * மிட்டாய் படத்தில் கார்ட்டூன் சித்திரங்கள் * கேரள வரவு மித்ராவுக்கு லவ் ஹிஸ்ட்ரி ஸ்டார்ட் * அமீரிடம் விளக்கம் கேட்கும் கணித மேதை * வாரணம் ஆயிரம்- கொடைக்கானல் படங்களின் விமர்சனம் * கடும் உடற்பயிற்சி செய்கிறார் சினேகா * ஒரே நேரத்தில் 2 படங்களை இயக்கி நடிக்கும் நடிகர் * ஒரே படத்துக்கு 3 இசையமைப்பாளர்களின் இசை * ரவீனா டாண்டனின் சமூக அக்கறை * இசையமைப்பாளர்கள் மாற்றப்படும் மர்மம் : ஸ்பெஷல் ரிப்போர்ட் * சசிக்களின் விநியோக டீலிங் * கின்னசுக்கு போகும் பாபுகணேஷ் * திருமணம் பற்றி சல்மான் கருத்து * ஷில்பா ஷெட்டி 3 மாதம் ஓய்வு * இந்தி கஜினிக்கு 1250 பிரிண்ட் * மாடர்ன் பெண்களுக்கு சின்னத்திரை நித்யா அட்வைஸ் * குவாண்டம் ஆப் சோலஸ் பட விமர்சனம் * மாலையானால் மலையேறும் நடிகைகள் : ஸ்பெஷல் ரிப்போர்ட் * வாஸ்து‌‌வை நம்பி வீட்டை விற்கும் லாரா * கமலின் முன்னாள் மனைவி நடிக்கும் படம் * கவுதமிக்கு கமல் கொடுத்த புரமோஷன் : சினி வதந்தி * டாப் 5 படங்களின் விமர்சனம் * நடிகைகளின் எக்ஸ்குளூசிவ் வால்பேப்பர்கள் * புத்தம் புதிய படங்களின் ஸ்டில்கள் *  
 
 
 
 
 
   
 
 
  மிஸ் சின்னத்திரை விருது - 2008  
     
 
 
   

சின்னத்திரையில் முகம் காட்டும் நடிகைகளில் சிறந்தவர்களை அடையாளம் காணும் வகையில் கடந்த ஆண்டு முதல் மிஸ் சின்னத்திரை போட்டி நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி சென்னை லாமிக்கேல் கிளப்பில் நடந்தது. இதில் சின்னத்திரையை சேர்ந்த 10 நடிகைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

போட்டியின் நடுவர்களாக இருந்த நடிகைகள் சங்கீதா, அஞ்சலி, இயக்குநர்கள் மாதேஷ், கோலங்கள் திருச்செல்வம், கடந்த ஆண்டு மிஸ் சின்னத்திரை பட்டம் வென்ற சந்தோஷி, மாடல் அழகி காவ்யா ஆகியோர் வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்து அறிவித்தனர். இதில் மிஸ் சின்னத்திரை-2008 ஆக நடிகை ரியா தேர்ந்தெடுக்கப்பட்டார். தாரிகா 2வது இடத்தையும், அனிஷா 3வது இடத்தையும் பிடித்தார்.

இதுதவிர சிறந்த சிரிப்பழகி விருது காவ்யாவுக்கும், சிறந்த சரும அழகி விருது ஜூலிக்கும், மக்களால் பெரிதும் விரும்பப்படும் அழகி விருது தாரிகாவுக்கும், சிறந்த உடல் அழகி விருது மதுவுக்கும், சிறந்த கேட்வாக் அழகி விருது தீபாவுக்கும், சிறந்த கண்ணழகி விருது ஸ்வேதாவுக்கும் வழங்கப்பட்டது.

சின்னத்திரை விருது நிகழ்ச்சியை விஜய் ஆதிராஜ் தொகுத்து வழங்கினார்.

- தினமலர் சினி டீம் -

 
 
     
   
   
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.