| |
|
|
| |
 |
|
| |
| |
| |
கதைக்கு தேவைப்பட்டதால் கவர்ச்சி : சிலந்தி மோனிகா |
|
| |
|
|
| |
|
|
| |
|
கவர்ச்சியில் கட்டுபாடு காட்டிவந்த மோனிகா சிலந்தி படத்தில் முன்னணி கவர்ச்சி நடிகைகள் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு தாராளம் காட்டியுள்ளார். சிலந்தியில் இவரின் அழகு அசரவைக்கிறது. விண்ணுலக தேவதையோ என வியப்பு ஏற்படுத்துகிறது.
தாராளமய கொள்கையால் இளைஞர்கள் திணறடித்திருக்கும் மோனிகா, கவர்ச்சி குறித்து கூறியதாவது:-
எதுவுமே நிரந்தரமில்லாத உலகம் இது. சினிமா மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. இங்கு என் இடத்தை தக்கவைக்க, பல தந்திரங்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. நான் பிறந்தது ஈரோட்டில். நினைவு தெரிந்த நாளில் இருந்து வசிப்பது சென்னையில். பெற்றோர் கேரளாவை சேர்ந்தவர்கள். சினிமா எனக்கு அறிமுகமானது, எனது தந்தை புரொடக்ஷன் மானேஜராக இருந்ததால் தான். குழந்தை நட்சத்திரமாக "அவசர போலீஸ் 100 ' உட்பட பல படங்களில் நடித்தேன். சிறிது இடைவெளிக்குப் பின், "அழகி'யில் தேவதையானேன். அதற்கு கிடைத்த சிறப்பான வரவேற்பு உற்சாகம் ஏற்படுத்தியது.
வெற்றி, நமது கால்களை ஒரே பாதையில் பயணிக்க வற்புறுத்தும் என்ற உண்மையை அப்போது தான் உணர்ந்தேன். சலிப்பை ஏற்படுத்தும் அந்தப்பாதையில் தொடர்ந்து பயணிக்க விரும்பாததால், எனது பாத்திரத்துக்கு முக்கியத்துவம் தரும் படங்களுக்காக காத்திருந்தேன்.""இம்சை அரசன்' அப்படி எனக்கு கிடைத்த ஒரு வித்தியாசமான அனுபவம். இப்போது "சிலந்தி'. த்ரில் நிறைந்த இந்த கதைக்கு, கவர்ச்சி தேவைப்பட்டது.அந்தப்படத்தின் போட்டோக்கள், பல புதிய வாய்ப்புகளை கொண்டுவந்துள்ளது. அதில் பல வாய்ப்புகள், கவர்ச்சி கேட்டு கட்டாயப்படுத்தியது. கட்டாயத்திற்காக கவர்ச்சி காட்டினால், காணாமல் போய்விடுவாய் என்ற அனுபவப் பட்டவர்களின் அறிவுரை என்னை எச்சரித்தது. உஷாராகிவிட்டேன்.
இப்போது, ஏவி.எம்., தயாரிக்கும், "அ.ஆ.இ.ஈ.,'யில் நவ்தீப்புக்கு ஜோடியாக நடிக்கிறேன். சிங்களத்தில் நான் நடித்த படம், தமிழிலும் "டப்' செய்யப்படுவதாக பேச்சு அடிபடுகிறது. இளம் டீச்சராக நான் நடித்த சிங்கள படத்தை தொடர்ந்து, சிங்களத்திலேயே மேலும் மூன்று வாய்ப்புகள் வந்தன. கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைகள் அவை. அவற்றில் நடிக்க விரும்பினாலும், கால்ஷீட் பிரச்னை ஆகிவிடக்கூடாது என்பதால், அதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.என்னை மையப்படுத்தி அவ்வப்போது கிசுகிசுக்கள் வருகின்றன. அயர்ந்து தூங்கும்போது அணுகுண்டு வீசியதைப் போல முதலில் அதிர்ச்சி அடைந்தேன். இந்த அதிர்ச்சி, எனக்குள் தேக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், பக்குவம் அடைந்து விட்டேன்.சினிமால் தான் நான் நட்சத்திரம். வெளி உலகில் நான் சாதாரண பெண். அதனால், பொது இடங்கள் மற்றும் விழாக்களுக்கு வரும்போது ஆடை விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறேன். விழாக்களில் கலந்துகொள்ளும் சக நடிகைகள் மீது விழும் "போட்டோ ப்ளாஸ்'சை, என் மீது விழும்படி திருப்ப, கலாசாரத்தை மீற மாட்டேன்.
இவ்வாறு சொல்லும் மோனிகா சினிமாவை ற்றி இப்படி அணு அணுவாக சிந்தித்து, பலவிஷயங்களை கணக்குபோடடுத்தான் செயல்படுத்துகிறார். ஓ.கே., ஓ.கே., விவேகம் அவருக்கு உதவட்டும்.
- தினமலர் சினி டீம் -
|
|
|
|
 |
|
|
|