* கமலின் எண்ணமும், த்ரிஷாவின் யோசனையும் * மிட்டாய் படத்தில் கார்ட்டூன் சித்திரங்கள் * கேரள வரவு மித்ராவுக்கு லவ் ஹிஸ்ட்ரி ஸ்டார்ட் * அமீரிடம் விளக்கம் கேட்கும் கணித மேதை * வாரணம் ஆயிரம்- கொடைக்கானல் படங்களின் விமர்சனம் * கடும் உடற்பயிற்சி செய்கிறார் சினேகா * ஒரே நேரத்தில் 2 படங்களை இயக்கி நடிக்கும் நடிகர் * ஒரே படத்துக்கு 3 இசையமைப்பாளர்களின் இசை * ரவீனா டாண்டனின் சமூக அக்கறை * இசையமைப்பாளர்கள் மாற்றப்படும் மர்மம் : ஸ்பெஷல் ரிப்போர்ட் * சசிக்களின் விநியோக டீலிங் * கின்னசுக்கு போகும் பாபுகணேஷ் * திருமணம் பற்றி சல்மான் கருத்து * ஷில்பா ஷெட்டி 3 மாதம் ஓய்வு * இந்தி கஜினிக்கு 1250 பிரிண்ட் * மாடர்ன் பெண்களுக்கு சின்னத்திரை நித்யா அட்வைஸ் * குவாண்டம் ஆப் சோலஸ் பட விமர்சனம் * மாலையானால் மலையேறும் நடிகைகள் : ஸ்பெஷல் ரிப்போர்ட் * வாஸ்து‌‌வை நம்பி வீட்டை விற்கும் லாரா * கமலின் முன்னாள் மனைவி நடிக்கும் படம் * கவுதமிக்கு கமல் கொடுத்த புரமோஷன் : சினி வதந்தி * டாப் 5 படங்களின் விமர்சனம் * நடிகைகளின் எக்ஸ்குளூசிவ் வால்பேப்பர்கள் * புத்தம் புதிய படங்களின் ஸ்டில்கள் *  
 
 
 
 
 
   
 
 
  நமீதாவுக்கு பிடித்த பிரமாண்டம் எது தெரியுமா?  
     
 
 
   

நமீதாவுக்கு பிடித்த பிரமாண்டம் எது என அவரே கூறியிருக்கிறார்.

பெருமாள், தீ, ஜெகன்மோகினி, இந்திரவிழா என படுபிசியாக இருக்கும் நமீதாவுக்கு மலையாளத்தில் வேறு எந்த நடிகையும் வாங்காத மிகப்பெரிய ஒரு தொகையை கொடுத்து, நமீதாவின் கால்ஷீட்டில் இடம்பிடித்துள்ளது கேரளா திரைத்துறை. அடுக்கடுக்கான மகிழ்ச்சியில் இருக்கும் நமீதா கூறியதாவது:-

எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை மட்டுமே ஒப்புக் கொள்கிறேன். வணிக ரீதியான வெற்றிக்கு எனது பாத்திரம் உதவும் என தயாரிப்பாளர்கள் நம்புகின்றனர். அதனால் தான், என்னை தங்களது படங்களில் அவர்கள் இணைத்துக் கொள்கின்றனர் என நினைக்கிறேன். வித்தியாசமான கதைகளில் நடிக்கவேண்டும் என்பது எனது ஆசை. அதனால்தான் பச்சக்குதிரயில் நடித்தேன். அந்தப் படம் வெற்றி பெற்றிருந்தால், விதவிதமான நமீதாவை ரசிகர்கள் பார்த்திருக்கலாம். இப்போதும் எனக்கு அந்த ஆர்வம் இருக்கிறது. எங்கு போய்விடப் போகிறது காலம், பொறுத்திருந்து விளாசுவோம்.

கன்னடம், மலையாளம் படங்களில் வாய்ப்புகள் வருகின்றன. வரும் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. காரணம், அதனால் ஏற்படும் தாமதத்தால், தமிழக இளசுகளை தவிக்க வைக்க மனசு இடம்தரவில்லை. தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி என பெயர் எடுப்பது எவ்வளவு கடினம் என்பது, எனக்கு நன்றாகவே தெரியும்.

டைரக்டர் பிரமோத் இயக்கும் மலையாளப் படம் ஒன்றில், ஒப்பந்தம் ஆகியிருக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் படத்தின் படப்பிடிப்பு, ஆகஸ்ட்டில் துவங்குகிறது. இந்தப் படத்துக்குப் பின், மலையாளத் திரையுலகில் ஹீரோயின்களின் சம்பளம் பல மடங்கு உயரும் என நம்புகிறேன்.

மனதிற்கு சோர்வாக இருக்கும்போது, என்னைப் பற்றி வெளியான கிசுகிசுக்களை அசைபோடுவேன். உண்மையை சொல்லப்போனால், உடனடி புத்துணர்வு வழங்கும் நிவாரணி எனக்கு வேறு எதுவுமில்லை. சென்னை வந்ததும் நான் முதலில் கற்றுக் கொண்ட தமிழ் வார்த்தை, வணக்கம் அண்டு மச்சான்.

அது சரி, கேள்விக்கு வருகிறோம். நமீதா என்றாலே பிரம்மாண்டம் தான் நினைவிற்கு வருகிறது. உங்களுக்குப் பிடிச்ச பிரம்மாண்டம் எது?

என்ன சொல்வேன் என நீங்கள் நினைக்கிறீர்கள் என் வீட்டைத் தவிர...? என நழுவினார் நமீதா.

- தினமலர் சினி டீம் -

 
 
     
   
   
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.