| |
| |
| |
முன்னணி நாயகிகளை நிராகரிக்கிறாரா
சுந்தர் சி.? |
|
| |
|
|
| |
|
|
| |
|
உள்ளத்தை அள்ளித்தா, படத்தின் மூலம் கோலிவுட்டில்
பரபரப்பாக பேசப்பட்டவர் சுந்தர் சி. மேட்டுக்குடி,
முறைமாமன் போன்ற படங்களை இயக்கிய இவர், "அன்பே சிவம்,
அருணாசலம்' படங்களில் ரஜினி மற்றும் கமலை நடிக்க
வைத்தார்.
டைரக்ஷனில் தனி முத்திரை பதித்த பிடித்த சுந்தர்.சி,
தலைநகரம், வீராப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம் படங்களின்
மூலம் கதாநாயகனாக தன்னை உயர்த்தி கொண்டிருக்கிறார்.
தீ, பெருமாள், வாடா படங்களில் நடித்து வரும் இவரை
சந்தித்தபோது...
டைரக்டராக என்னை நிரூபித்த பின்னர், அடுத்தது என்ன
செய்யலாம் என யோசித்தபோது, நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு
கிடைத்தது. எனது உதவியாளரின் விருப்பத்துக்கு ஏற்ப,
தலைநகரம் படத்தில் நடித்தேன். படம் வெற்றி பெற்றதும்,
அடுத்தடுத்து வாய்ப்புகள் வரத்துவங்கின. வந்த
வாய்ப்புகளை எல்லாம் வளைத்துப் போட்டுக்
கொள்வது, மலைப்பாம்பை எடுத்து மாலையாய்
போட்டுக்கொள்வது போல ஆபத்தானது. அதனால், எனக்கு
ஒத்துவரும் கதைகளை மட்டும் தேர்வு செய்யத் துவங்கினேன்.
நடிகராக வேண்டும் என்பது எனது லட்சியம் அல்ல.
தலைநகரத்திற்கு பிறகு நான் நடித்த படங்கள் அனைத்தும்
வெற்றி பெற்றன. அந்த சந்தோஷம், என்னை என்னையே ரசிக்க
வைத்தது. நம்பிக்கையை காப்பாற்றுவது போன்ற மகிழ்ச்சி,
வேறு எதுவுமில்லை.
முன்னணி கதாநாயகிகளை நான் நிராகரிப்பதாக கூறுவது தவறு.
அவர்கள் படத்தின் பெரும் தொகையை சம்பளமாக கேட்கின்றனர்.
அது எனது தயாரிப்பாளருக்கும், படத்துக்கும் தேவையற்ற
சிக்கலை ஏற்படுத்தி விடும். எனவே, தகுதியுள்ள
புதுமுகங்களை அறிமுகம் செய்வதில் ஆர்வம் செலுத்தி
வருகிறேன். ரஜினிகாந்த், கமல்ஹாசனை வைத்து இயக்கிய
எனக்கு, டைரக்ஷன் மீது ஈடுபாடு குறையவே இல்லை. 15 கோடி
ரூபாய் பட்ஜெட்டில் எனக்கான கதையை தயாரித்து நடிக்க
திட்டமிட்டுள்ளேன். அதற்கான வாய்ப்பு வந்தவுடன்,
கேமராவை கையில் பிடிப்பேன். எனது நடிப்பை குஷ்பு
விமர்சனம் செய்வது கிடையாது. நடனத்தில் கொஞ்சம் கவனம்
செலுத்தும்படி மட்டும் கூறுவார்.
எனது மூத்த மகளுக்கு, நான் டூயட் பாடினால் முகம்
சுருங்கி விடுகிறது. இளைய மகளுக்கோ, என்னை யாராவது
அடித்தால் முகம் சிவந்து விடுகிறது. இவர்களைப்
பொறுத்தவரை, நான்தான் அவர்களது சூப்பர் ஸ்டார்.
என்னுடன் இரண்டு படத்தில் நடித்த ராகினி, எனக்கு
உறவினர். எனது மனைவி குஷ்புவுக்கு தங்கை உறவு, என்றார்- தினமலர் சினி டீம் -
|
|
|
|
 |
|
|