மும்பை: தன் மனைவியை ஒளிந் திருந்து பார்த்த இளைஞரைக் கொன்ற கணவரின் ஆயுள் தண்டனையை, மும்பை ஐகோர்ட் ஏழு ஆண்டுகளாகக் குறைத்து தீர்ப்பளித்திருக்கிறது.
மும்பையை சேர்ந்தவர் அனில் மகர். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் பரத் (25). அனில் மகரின் குடும்பத்தில் உள்ள பெண்கள், இயற்கை உபாதைக்கு அருகிலுள்ள இடத் துக்குச் செல்வது வழக்கம். இதை பரத் கவனித்திருக்கிறார். சம்பவத்தன்று மகரின் மனைவி இயற்கை உபாதையை போக்கிக் கொள்ளச் செல்லும்போதெல்லாம், பரத் ஒளிந்திருந்து பார்த்திருக்கிறார். அதை கவனித்த மகர் பரத் தை தட்டி கேட்டுள்ளார். அப்போது நடந்த வாய்த்தகராறில் மகர் பரத்தை கத்தியால் குத்தி கொன்றுவிட்டார். இந்த வழக்கில் விசாரணை கோர்ட், மகருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் மகர். வழக்கை விசா ரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் தீர்ப்பில் கூறியதாவது:
இந்த வழக்கு வித்தியாசமானது. இதை விலக்களிக்கும் சட்டப்படி எடுத் துக் கொள்ள வேண்டும். மகர் திட்டமிட்டுக் கொலை செய்யவில்லை. மேலும், தனது மனைவியின் மானத்தைக் காப் பாற்றுவதற்காக மகர் போராடியுள்ளார். கோபாவேசத்தில் நடந்த வாக்குவாதத்தின் இறுதியில்தான் கொலை நடந்துள்ளது. ஒருவன் செய்யும் குற்றத்துக்குத் தண்டனையாக அவனைக் கொலை செய்வது என்பது இந்த வழக்கைப் பொறுத்தமட் டில் திட்டமிடாமல் தான் நடந்துள்ளது. எனவே, இதைக் கொலைக் குற்றமாகக் கருதாமல், தனது குடும்ப மானத்தைக் காப்பதற்காக ஒருவர் எதிர்பாராமல் செய்த குற்றம் என்ற அடிப் படையில், இந்திய தண்டனைச் சட்டத்தில் விலக் களிக்கும் பிரிவான 300ன் படி இவருக்கு ஏழாண்டுகளாகத் தண்டனை குறைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
| வாசகர் கருத்து |
பரத் ஒளிந்திருந்து பார்த்திருக்கிறார். அதை கவனித்த மகர் பரத்தை தட்டி கேட்டுள்ளார். அப்போது நடந்த வாய்த்தகராறில் மகர் பரத்தை கத்தியால் குத்தி கொன்று விட்டார்.
|
by m sidik,auh,India 11/4/2009 11:32:00 AM IST |
ஓகே. பரத் டெத் கன்பார்ம்ட். பரத்துக்கு மகர் கொடுத்த மரண தண்டனை சரியானதுதான். த.சு.கா.உ.தி.தி.ந - என்ன புரியலியா? (த)வறை (சு)ட்டி (கா)ட்டினால் (உ)டனே (தி)ருத்தும் (தி)னமலருக்கு (ந)ன்றி
|
by உதயகுமார்,chennai,India 11/4/2009 10:38:27 AM IST |
//பரத் என்ற 25 வயது இளைஞர் வசித்து வருகிறார். // பரத் உசுரோட இருக்கானா... போயிட்டானா? நியூச ஒழுங்கா எழுதுங்க எடிட்டர்.
|
by G. உதயகுமார்,CHENNAI,India 11/4/2009 9:39:53 AM IST |