India Supreme Court News, High Court News, Legal News, Crime News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
கோர்ட் செய்திகள்  
ஆந்திர கவர்னருக்கு எதிரான மனு தள்ளுபடி
நவம்பர் 04,2009,00:00  IST

புதுடில்லி: ஆந்திர கவர்னருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, விசாரணைக்கு ஏற்றதல்ல என்று டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது.



தன் தந்தை தான் ஆந்திர கவர்னர் என்.டி.திவாரி(84) என, ரோகித் சேகர் என்பவர், டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார். இவ்வழக்கு விசாரணையின் போது, சில சந்தேகங்களை எழுப்பினார் நீதிபதி. அதற்கான பதில் மனுவை, 2008 நவம்பரில், ரோகித் தாக்கல் செய்தார்.வழக்கு, மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. திவாரி சார்பில் ஆஜரான வக்கீல் ராஜிவ் நய்யார், "ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டிய மனுவை, ரோகித், தாமதமாக தாக்கல் செய்துள்ளார். எனவே இதை விசாரணைக்கு ஏற்றதாகக் கருத முடியாது' என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து, ரோகித் மனுவை, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.



 



 

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் கோர்ட் செய்திகள்
  இ-பேப்பர்